இந்தியாவில் இரணடு விதமான வழிகாட்டுதல்கள்!

மறுபக்கத்தில் 130 கோடி சனத்தொகையைக் கொண்ட இந்தியாவின் பிரதமரும், ட்ரம்பின் ஆத்மார்த்த நண்பருமான மோடியும் அதே வழியைப் பின்பற்றி நித்திரையில் ஆழ்ந்திருந்தார். இப்பொழுது திடீரென பொய்த் தூக்கம் கலைந்து எதேச்சையாக விழித்தவனைப் போன்று துள்ளியெழுந்து இந்தியா முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு சட்டம் போட்டிருக்கிறார். கொரனோவைக் கட்டுப்படுத்த சில நடவடிக்கைகள் தேவைதான். மறுப்பதற்கில்லை.

ஆனால் சனத்தொகையில் பெரும்பாலான மக்கள் அன்றாடம் கூலித்தொழில் செய்து பிழைக்கும் ஒருநாட்டில், சில கோடி மக்கள் சொந்த வீடு இல்லாமல் வீதியோரங்களிலும், மரங்களின் கீழும், திறந்த வெளிகளிலும் வாழும் நாட்டில், திடீரென ஊரடங்குச் சட்டம் போட்டால், அவர்கள் உண்பதற்கு என்ன செய்வார்கள்? ஒதுங்குவதற்கு எங்கே போவார்கள்? (இன்று காலை சென்னையிலிருந்து என்னுடன் தொடர்பு கொண்ட தோழர் இரா.பாண்டியன் இந்தியாவில் 45 கோடி மக்கள் தினக்கூலித் தொழிலாளர்கள் என்ற ஒரு தகவலைச் சொன்னார்)

மோடியின் இன்னொரு அநியாயம் என்னவென்றால், 130 கோடி மக்கள் கொண்ட ஒரு நாட்டில் கொரனோவைக் கட்டுப்படுத்த வெறுமனே 15,000 கோடி ரூபாவை மட்டும் ஒதுக்கியிருக்கிறார். அதுவும் வைத்திய உபகரணங்கள் வாங்குவதற்கு மட்டுமே அந்த நிதி. ஆனால் மறுபக்கத்தில் நாடாளுமன்ற கட்டடத்தைப் புதுப்பிப்பதற்கு 20,000 கோடி ஒதுக்கியிருக்கிறார்!

ஆனால் 35 மில்லியன் (மூன்றரை கோடி) மக்கள் மட்டும் வாழும் கேரள மாநிலத்தை ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடது முன்னணி அரசாங்கம், கொரனோ கட்டுப்பாட்டுக்காக 20,000 கோடி ரூபா ஒதுக்கியிருக்கிறது. மக்களின் அவசர தேவைகளுக்காக 2,000 கோடி ரூபா ஒதுக்கியிருக்கிறது. பொதுமக்களுக்கு இலவசமாக உணவு வழங்குவதற்காக 1,000 நிலையங்களைத் திறந்திருக்கிறது. குழந்தைகளுக்கு இலவசமாக சத்துணவு வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்திருக்கிறது. அரச ஊழியர்களுக்கு இரண்டு மாத சம்பளத்தை முன்பணமாக வழங்கியிருக்கிறது. வைத்தியசாலைகளில் வசதிகளை மேம்படுத்துவதற்hக பல கோடி ரூபாவை ஒதுக்கியிருக்கிறது. இன்னும் பல இலவச மக்கள் நலத்திட்டங்களை அறிவித்திருக்கிறது.

மோடியின் வலதுசாரி மத்திய அரசாங்கத்தின் போக்கையும், கேரளாவின் இடதுசாரி அரசாங்கத்தின் முதலமைச்சர் பினராயி விஜயனின் போக்கையும் மடுவுக்கும் மலைக்கும் உள்ள வித்தியாசம் என்று சொல்வதா அல்லது முதலாளித்துவத்துக்கும் சோசலிசத்துக்கும் இடையிலான வேறுபாடு என்று சொல்வதா?