கார்த்திகைக் கோலம்

ஒரு குறிப்பிட்ட கூட்டத்தை மட்டும்மாவீரர்கள் என்று சொல்லி நீங்கள் காட்டும் கேலிக்கூத்துகளைப் பற்றி யாராவது சொல்லி விட்டால்…நீங்கள் மட்டும் தான் இறந்த போராளிகளை நினைக்கும்மென்மையான இதயம் கொண்டவர்கள் மாதிரியும்…மற்றவர்கள் அவர்களின் தியாகத்தை கொச்சைப்படுத்துவதும் மாதிரியும்குற்ற உணர்வை ஏற்படுத்த முயற்சி செய்வீர்கள். உங்களுடைய இந்த தமாசா எல்லாம்வெறும் கேலிக்கூத்துக்களே!ஏன்?

1. ஒரு துயரமான மாதம் என்று மாதம் முழுக்க படம் போடும் நீங்கள்ஒப்பாரி வைத்து ஓலம் போடுவதற்கு முதல் நாள் போடும் ஆனந்தக் கும்மி!ஒரு இனத்தை அடுத்து பல தலைமுறைகளுக்குதீர்வு பெற முடியாதபடிக்குபல தலைவர்களைக் கொன்றும்ஒரு தலைமுறையைப் பலி கொடுத்தும்நடுத்தெருவில் நிறுத்திய ஒரு கொலைகாரனைஉங்கள் தலைவர் என்று சொல்லி…66 றாத்தல் கேக், 66 பானையில் பொங்கல் என்றெல்லாம்அடிக்கும் கேலிக் கூத்து!

2. இத்தனை கும்மாளமும் போட்டு பிறந்த நாள் கொண்டாடும் ஒரு மனிதனுக்கு இன்று வரைக்கும் இறந்த நாள் நினைவு கூர நீங்கள் தயாரில்லை.இத்தனை போராளிகளின் மரணத்திற்கும் காரணமான…மாவீரர்களுக்கு எல்லாம் மாவீரனான…ஒரு மனிதனின் மரணத்தை நினைவு கூர நீங்கள் தயாரில்லை.

3. இயக்கங்கள் தோன்ற முன்னால் சுயமாகவே நீங்கள் சொல்லும் விடுதலைக்காகசயனைட் அடித்து இறந்தசிவகுமாரனின் படத்தைக் கூட வைக்க உங்களால் முடியவில்லை.இன்னொருவரின் கட்டளைக்காக போய் சிதறியவர்களை விட,சுயமாக நினைத்து உயிரைக் கொடுத்த ஒரு மனிதனைஉங்களால் நினைக்க முடியவில்லை.

4. நீங்கள் இன்றைக்கு கொண்டாடுகின்ற போராளிகளில்பெரும்பான்மையோர் இறுதிக்கட்டத்தில் குடும்பங்களில் இருந்து பறித்துச் செல்லப்பட்டுபோர் முனையில் பலி கொடுக்கப்பட்டவர்கள்.அவர்கள் கட்டாயமாக ஆட்சேர்க்கப்பட்டார்கள் என்ற அப்பட்டமான உண்மையை மறைத்துஅவர்களாகவே விரும்பிச் சேர்ந்தார்கள் என்றுகதை புனைந்தவர்கள் நீங்கள்.அவர்களின் மரணம் உங்களுக்கு பொருட்டாகவே இருந்ததில்லை.

5. போராளிகளின் மரணம் உங்களுக்கு வெற்றிக் கொண்டாட்டத்திற்கானகாரணமாகவே எப்போதும் இருந்தது.அது கண் முன்னால் கொல்லப்பட்ட திலீபனாக இருந்தாலும்!முகாம் தகர்ப்பு, அரசியல் படுகொலை எதிலும்தற்கொலைப்படையாகவோ, போராளிகளாகவோ இறந்தவர்கள் உங்களுக்கு ஒரு போதுமே உயிர்களாக இருந்ததில்லை.உங்களுக்கு அவர்கள் நீங்கள் இறைச்சி தின்னபலி கொடுக்கப்பட்ட ஆடுகள் மட்டுமே!அரசியல் தீர்வுக்கான வழிகள் வந்த போதும்அடிச்சுப் பறிக்கும் கனவில் அவர்களின் மரணங்களைத் தடுக்கநீங்கள் ஒரு போதும் முயன்றதேயில்லை.

6. யுத்த முடிவில் சரணடைந்த போராளிகள்குப்பி கடிக்காததை அவமானமாக கருதியவர்கள் நீங்கள்.

7. யுத்தத்தில் உயிர் பிழைத்து வாழ வழியில்லாமல் இருக்கும் போராளிகளுக்குநீங்கள் எதையும் பிடுங்கியதில்லை.அவர்கள் உயிரோடு இருப்பதை விடஇறப்பதே உங்கள் நலன்களுக்குஅவசியம்!

8. ‘விடுதலைக்காக இன்னுயிர் ஈந்த’ என்று நீங்கள் போற்றும்அந்த ‘மா’வீரர்களை விட, மற்ற இயக்கங்களில் போய் இறந்தவர்களைநீங்கள் ஒரு போதுமே நினைவு கூர்ந்ததில்லை.எங்களுக்கு மட்டும் ‘தலைமையை விடுங்கோ,செத்த போராளியளை நினைக்கலாம் தானே’ என்று வகுப்பு எடுக்கிற நீங்கள்…டெலோவில் சேர்ந்துஉயிரோடு எரியும் டயர்களில் வீசி எறியப்பட்டபோராளிகளை துரோகிகள் பட்டியலில் தான் வைத்திருக்கிறீர்கள்.

9. புலிகளின் கட்டாய ஆட்சேர்ப்பு பற்றி சொல்லும் போதெல்லாம்இந்திய இராணுவ காலத்தில் நடந்த கட்டாய ஆட்சேர்ப்பு பற்றிசொல்லி வைப்பீர்கள்.ஆனால் புலிகளால் கைது செய்யப்பட்ட அவர்கள் அனைவருமேசுட்டுக் கொல்லப்பட்டார்களே?அவர்களின் உயிர்கள் உங்களுக்கு பெறுமதியானவையாக இல்லையா?

ஆக,புலிக் கொடிக்கு கீழ் உயிரை விட்டால் மட்டும் போராளி!மற்ற எல்லோருமே துரோகி.”’போராட்டத்தில் தெரிந்தோ தெரியாமலோஅறிந்தோ அறியாமலோசேர்ந்து கொல்லப்பட்ட அவர்களை விட…ஓரமாய் நின்று விடுப்புப் பார்த்த நீங்கள் எல்லாம்இன்றைக்கு புலி வேடம் போட்டுநடத்தும் களியாட்ட விழாதலைவரைப் பற்றியதோ,இறந்து போன போராளிகளைப் பற்றியதோ அல்ல.உங்களை மட்டுமே பற்றியது!

இன்று வரைக்கும்பிரபாகரனின் இறந்த தினத்தைக் கொண்டாடாமல்,புலிப் போராளிகளை மட்டுமேமாவீரர்கள் என்று கொண்டாடுவதற்கு காரணம் இருக்கிறது!

அவர்களை புனிதப் போராளிகள்,அவர்கள் நடத்தியது புனிதப் போராட்டம்,அவர்களுக்கு வீர வணக்கம் என்றுசொல்வதன் மூலம் நீங்கள் சொல்ல வருவது…நீங்கள் புனிதர்கள் என்ற செய்தி மட்டுமே!அதாவதுஇயக்கங்களில் நீங்கள் உயர்ந்த சாதி!

பிறப்பினால் தான் உயர்ந்த சாதி என்று நினைக்கும்யாழ்ப்பாணச் சிந்தனையின் இன்னொரு வடிவம் தான் இன்றைய களியாட்ட விழா!உயர்ந்த சாதி என்று சொல்வதற்கு…அதற்கும் கீழான சாதிகள் உங்களுக்கு எப்போதுமே தேவை!”’உங்களை புத்திசாலிகள் என்று நினைப்பதில் தவறேயில்லை!ஆனால் மற்றவர்களை முட்டாள்கள் என்று நினைக்கக் கூடாது!