சில தவறான, நேர்மையற்ற ஏதிர்வினைகள்

இந்த தவறான, நேர்மையற்ற ஏதிர்வினைகளை வைப்பவர்கள் இலங்கை அரச ஆதரவாளர்களாக இருக்கிறார்கள். தமிழ் மக்களை ஆயுதங்களை கொண்டு அச்சுறுத்தி சர்வாதிகார அரசியலை செய்தவர்களின் ஆதரவாளர்களாக இருக்கிறார்கள். தமது வாழ்நாளில் எந்தவொரு கட்சியிலோ, அமைப்பிலோ அங்கம் வகிக்காமல் சுயநல வாழ்க்கை வாழ்ந்து கொண்டு மற்றவர்களை கொச்சைப்படுத்துவர்களாக இருக்கிறார்கள். இலங்கை அரசுக்கு எதிராக முன்னிலை சோசலிச கட்சி, சமவுரிமை இயக்கம்  என்பன தொடர்ந்து போராடி வருகின்றன. அதன் காரணமாகவே நாம் முன்னிலை சோசலிசக் கட்சியின் ஆதரவாளர்களாக இருக்கிறோம். இந்த ஏதிர்வினையாளர்கள் இலங்கை அரசுக்கு எதிராக என்ன செய்தார்கள் அல்லது இனிமேல் என்ன செய்யப் போகிறார்கள் என்னும் தமது மாபெரும் திட்டங்களை சொன்னார்கள் என்றால் நாம் இவர்களையும் ஆதரிப்போம்.

இலங்கை அரசு, வல்லரசுகள், இனவெறி, மதவெறி, சாதிவெறி என்னும் வலதுசாரி அரசியலை என்றும் எதிர்ப்பதே எமது அரசியல். சமவுடமைச் சமுதாயமே எமது இலட்சியம்.