சைக்கிளும் உதயசூரியன் சின்னமும்,

மீண்டும் தமிழ் மக்களை ஏமாற்ற மறுபிறவி எடுக்க தயாராகும் உதயசூரியனின் பின்னால் இந்தியாவின்
கொள்கைவகுப்பாளர்கள் பிரசவம் பார்ப்பதாக அறியமுடிகிறது,இந்தியாவை நேரடியாக பகைத்துக்கொள்ளாது பயணிப்பது என்பது இராஜதந்திரம்,இந்தியா எமது சனநாயாக தேர்தலில் யார் எப்படி,எவ்வாறு செயற்படவேண்டும் என முடிவு எடுப்பதற்கு அனுபமதிப்பதென்பது வேறு,ஒன்று இராஜதந்திரம்,மற்றையது அடிமைத்தனம்,தமிழர்களாகிய நாம் அடிமைத்தனத்திற்கு ஒருபோதும் இசைந்துபோககூடாது,அந்தவகையில்
தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் சிந்திப்பது சரியானதாகவே தெரிகிறது,அவர்கள் அவ்வாறு நினைப்பதற்கு நியாயமானதும்,வலுவானதுமான காரணிகள் இருப்பதும் நிதர்சனமாகும்,

தற்போது வடகிழக்கு தமிழ் மக்களின் மனதில்,வீட்டுக்கு எதிர்,சைக்கிள் எனும் நினைப்பு ஆழமாக பதிந்துள்ளது எனும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரின் கூற்று முற்றிலும் உன்மையானது,
மற்றும் திரு ஆனந்தசங்கரியை ஒருபோதும் நம்பமுடியாது என தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் கூறுவதும் முற்றுமுழுதான உன்மைதான்,
அதேநேரம் கஜேந்திரகுமார் தலைமையிலான மக்கள் முன்னணியினருக்கு,முன்பைவிட ஆதரவு கூடியுள்ளது எனும் அவர்களது கூற்றும் உன்மையானதாக இருக்கலாம்,
இவைகள் அந்த கட்சியினரின் நிலைப்பாடாக இருந்தாலும்,எனது தனிப்பட்ட நிலைப்பாடு வீட்டுக்கு எதிர்,சைக்கிள் எனும் மனநிலை மக்கள் மனதில் இருக்கிறது என்பதையும்,திரு ஆனந்த சங்கரியை நம்பமுடியாது என்பதையும் நான் ஏற்கிறேன்,அதில் உன்மையுள்ளதாகவே நான் கருதுகிறேன்,அதே நேரம் தமிழரசுக்கட்சியினருக்கு எதிரான மக்களின் மனநிலை அதிகரித்துள்ளதையும் அவதானிக்கமுடிகிறது,எனவே காலப்போக்கில் வீட்டுக்கு எதிர் சைக்கிள் எனும் மனநிலை மேலும் தமிழ் மக்கள் மனதில் வளர்வதானது,இந்தியாவிற்கும்,இலங்கை அரசிற்கும்,மேற்குலகிற்கும் விருப்பமில்லாத ஒருவிடயமாகவே பார்க்கப்படும்,அது உன்மைபோலவே கிடைக்கும் மிக நம்பகரமான தகவல்கள் தெரிவிக்கின்றன,அதை உறுதிப்படுத்தும் விதமாகவே திரு சுரேஸ்பிரேமச்சந்திரனின் நடவடிக்கைகள் இருக்கின்றன,
அதாவது கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திடம்,புதிய கூட்டமைப்பில் இணைந்து,சைக்கிள் சின்னத்தில் போட்டியிடுவதற்கு சம்மதம் தெரிவித்திருந்த திரு சுரேஸ்பிரேமச்சந்திரன்,இருவாரங்களுக்கு முன்னர் இந்தியா டெல்லி சென்றுவந்த பின்னர்,ஆனந்த சங்கரியை இணைத்து உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவதைபற்றியும்,அதற்கான முயற்சியிலும் இறங்கியிருக்கிறார்,இவரது இந்த மனமாற்றம் இந்தியா சென்றுவந்தபிறகே நடந்திருக்கிறது,இதன்பின்புலம் இந்தியாதான் என்பது தெட்டதெளிவான ஒன்றாகும்,
இந்த பின்னணியில் திரு கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் ,தமிழ் தேசிய மக்கள் முன்னணி உள்ளூராட்சி தேர்தலை,சைக்கிள் சின்னத்தில் தனியே எதிர்கொள்வதென எடுத்த முடிவு மிகச்சரியானதாகும்,அதை நான் வரவேற்கிறேன்,நான்கூட நேற்றுவரைக்கும் கஜேந்திரகுமாரின் முடிவை ஆதரிக்கவில்லை,அதற்கு காரணம் தமிழரசுக்கட்சிக்கெதிரான பலமான பொது கூட்டமைப்பை உருவாக்கவேண்டும் என்ற எனது விருப்பமும்,அத்துடன் புதிய அரசியல் யாப்பு திருத்தத்திற்கான எதிர்ப்பை பலமாக காட்டவேண்டும் என்ற மனநிலையுமாகும்,
ஆனால் தற்போது கிடைக்கப்பெற்ற நம்பகரமான தகவலை வைத்து பார்க்கும்போது இந்தியாவின் அடிமையாக இருக்கும்
தமிழரசுக் கட்சியினருக்கு வடகிழக்கில்
எழுந்துள்ள தமிழ் மக்களின் எதிரப்பலையும்,அதன் பக்கவிளைவாக உருவாகும் மாற்று அரசியல் திரட்சியையும் தனதாக்குவதற்கு இந்தியா திட்டமிடுவதாக தெரிகிறது,அதாவது தனது ஆதரவு சக்தியையும்,எதிர் சக்தியையும் தனது கட்டுப்பாட்டில் கொண்டுவருவதற்கான திட்டமே,ஆனந்த சங்கரியை உள்வாங்கி உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவதற்கான கூட்டமைப்பை உருவாக்குவதாகும்,அத்துடன் வீட்டுக்கு எதிர் சைக்கிள் எனும் நிலையை மாற்றி,வீட்டுக்கு எதிர் உதயசூரியன் எனும் நிலைக்கு மக்களை கொண்டுவருதலும்,வீட்டையும்,உதயசூரியனையும் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்குமான நகர்வே உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவதற்கான நகர்வு,அத்துடன்
இந்த இரண்டு சின்னமும் கடந்த காலத்தில் இந்தியாவின் கொத்தடிமைத்தனத்தின் அடையாளமாகும்,
இதில் நாம் பிரதானமாக நோக்கவேண்டியது யாதெனில்,பிரபல்யமடைந்துவரும் சைக்கிள் சின்னத்தை,மெதுவாக மக்கள் மனங்களிலிருந்து அகற்றவதற்கான திட்டமும்,அதனூடாக திரு கஜேந்திரகுமாரை அரசியல் அரங்கில் செல்லா காசாக்குவதனூடாக
தமது அடிமைகளான தமிழ் அரசுரக்கட்சியினருக்கும், எதிர்கால தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் வரதராஜ பெருமாளுக்கும் எதிரான எதிர்குரலை இல்லாதொழிக்கும் நடவடிக்கையை இந்தியா கொள்கைவகுப்பாளர்கள் மிகவும் கச்சிதமாக செய்ய முனைவதாக தோன்றுகிறது,இதன் ஒரு அங்கமே திரு வரதராஜ பெருமாள் தமிழ் தேசியக்கூட்டமைப்புக்குள் இநதியாவால் உட்புகுத்தப்படும் நிகழ்ச்சியுமாகும்,அத்தரடன் இன்றளவும் ஓரளவு தமிழ் தேசியத்தை நெருப்புடன் வைத்திருப்பதில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரே இருக்கின்றனர்,அதனையும் சிதைக்கவேண்டும்,இவைகளைவிடவும் மிகவும் முக்கியமான விடயங்களான புதிய அரசியல் யாப்பு திருத்தத்திறகான தமிழ் மக்களின் ஆணையாகவே இந்த உள்ளூராட்சி சபைக்கான தேர்தல் பார்க்கப்படும்,புதிய அரசியல் யாப்பு திருத்தத்திற்கு பின்புலமாக இருக்கும் இந்தியாவும்,மேற்கும் அதற்கு எதிராக மக்கள் ஆணையை வழங்குவதை ஏற்கமாட்டார்கள்,எனவே சைக்கிள் மேல்நோக்கி செல்வதற்கும்,தமிழ் மக்கள் மனதில் மேலும்,மேலும் பிரபல்யமடைதற்கும் எந்தவிதத்திலும் தடைபோடவே செய்வார்கள்,
எனவே திரு கஜேந்திரகுமார் சைக்கிள் சின்னத்தில் உள்ளூராட்சி தேர்தலை தனியே எதிர்கொள்வதென எடுத்த முடிவு மிகச்சரியானதாகும்,அல்லது உருவாகும் புதிய கூட்டணி திரு கஜேந்திரகுமார் தலமையில் சைக்கிள் சின்னத்தில் போட்டியிட ஏனையவர்கள் ஒத்துக்கொண்டால் அது தமிழ் மக்களிற்கு மிகவும் பயனளிக்கும்,இல்லை உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டால் அது இந்தியாவிற்கு பயனளிக்கும்,
அத்துடன் உள்ளூராட்சி தேர்தலில் கிராம,பிரதேச மட்டத்தில் செல்வாக்குள்ள நபர்களை நிறுத்தினால் போதும்,அவர்களுக்கே மக்கள் வாக்களிப்பார்கள்,எனவே உள்ளூராட்சி தேரிதலில் ஆட்தெரிவென்பது முக்கியமானதாகும்,ஆகவே
திரு கஜேந்திரகுமார் தோற்றாலும் பறவாயில்லை தனியே சைக்கிள் சின்னத்தில் பயனிப்பது எனும் அவர்களது நிலைப்பாடு மிகச்சரியானதே,
தமிழ் மக்கள் சைக்கிளில் பயணித்தால்
தமிழ் தேசியத்திற்கு நல்லதா?அல்லது
உதயசூரியனிலும்,வீட்டிலும் சப்பாணியாக இருந்தால் தமிழ் தேசியத்திற்கு நல்லதா என்பதை தமிழ் மக்கள் முடிவுசெய்யவேண்டும்,
நீங்கள் சப்பாணியாக இருக்கபோகிறீர்களா?இல்லை ஆரோக்கியமாக சைக்கிளில் பயணிக்கப்போகிறீர்களா?

(Anpu Mathy)