தோழர் இராஜனின் 34வது ஆண்டு நினைவில்;………..


EPRLF இன் யாழ் பிராந்தியக்குழு உறுப்பினரும் கட்சியின் வெகுஜன அமைப்பான EPLF இன் ஸ்தாபகர்களில் ஒருவரும் ஈழவாலிப முன்னணி, ஈழப் பெண்கள் முன்னணி ஆகியவற்றின் ஆரம்பகால அமைப்பாளருமாவார். கட்சியின் வளர்ச்சிக்கு கடினமாக உழைத்தவர். மக்களிடம் குறிப்பாக செம்மண் பிரதேசத்து வறிய கூலிவிவசாயிகளின் சமுக ஒடுக்கு முறைக்காகன போராட்டங்களில் பங்குபற்றியவர். அவர்களுடைய வாழ்வாதாரங்களுக்கான பொருளாதார நலன்களுக்கான வேலைத்திட்டத்தையும் முன்நின்று நகர்த்தியவர்.அவ்வகையான மக்களிடத்தில் நேசத்திற்குரியவரக விளங்கினார்.
கட்சியின் முதலாவது காங்கிரசில் பங்குபற்றியவர். அவருடன் சமகாலத்தில் அரசியல், இராணுவப் பணிகளில் இணைந்து வேலை செய்த தோழர்களிடத்தில் நன்மதிப்பைப் பெற்றிருந்தவர். அனைவராலும் நேசிக்கப்பட்டவர்.
பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் போர்ப்பாசறையில் பயிற்சி பெற்றவர். 07.06.1085ம் ஆண்டு இராணுவப்பிரிவான மக்கள் விடுதலைப் படையின்(PLA) பயற்சி முகாம் ஒன்றில் தாம் கற்றவற்றை தோழர்களுக்கு பயிற்சியாக வளங்கிக்கொண்டிருந்த போது எதிர்பாராமல் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்தார். அவருடைய மரணத்தின் இறுதிகணநேரத்திலும் கூட அவர் கூறிய து கட்சியைப் பலப்படுத்துங்கள் என்பதே .அவருக்கு எமது புரட்சிகர அஞ்சலிகள்.