35வது ஆண்டு நினைவுதினம்

1980களின் ஆரம்பத்திலிருந்து மாணவர்கள் மத்தியில் தனது அரசியல் பணிகளை ஆரம்பித்தவர்.பின்பு EPRLF இன் வன்னி பிராந்தியக்கமிட்டியிலும் பொறுப்புக்களை வகித்தவர். 1984ம் ஆண்டு நடைபெற்ற கட்சியின் முதலாவது காங்கிரசிலும் பங்குபற்றியிருந்தார்.மன்னார் மாவட்டத்தில் EPRLF இன் அரசியல்,இராணுவக் கட்டமைப்புக்களை பலப்பலப்படுத்தியவர்களில் தோழர் விமலும்(அருமைறஞ்சன்) முக்கியமானவர்.தோழர் பாலா(றொபின்சன்) மன்னார் மாவட்டத்தின் முருங்கனிலுள்ள பரியாரிக்கண்டலை பிறப்பிடமாகக்கொண்டவர்.1983ம் ஆண்டு ஆடிமாதம் திட்டமிட்ட வகையில் நாடு தழுவிய ரீதியில் அரசு மேற்கொண்ட இனக் கலவரத்தினைத் தொடர்ந்து தோழர் பாலாவும் தன்னுடைய கல்வியைத் துறந்து EPRLF உடன் தன்னை இணைத்துக்கொண்டார்.மன்னார் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அரசியற்பணிகளில் ஈடுபட்டடிருந்தபோதும் முருங்கன் பிரதேசத்தின் பொறுப்பாளராக செயற்பட்டு வந்தார். தோழர்கள் விமல்(அருமைறஞ்சன்), பாலா(றொபின்சன்) ஆகிய இருவருக்கும் எமது அஞ்சலிகளை தெரிவித்துகொள்கின்றோம்.