சீமானுக்கும் கல்யாணசுந்தரத்திற்கும் ஒன்றும் வித்தியாசம் இல்லை

சீமான் முதன் முதலில் நாம் தமிழர் கட்சிதுவங்கும் நேரத்தில் புதுக்கோட்டை மாவட்ட பொறுப்பாளர் நான்தான்
ஈழத்தில் ஒரு லட்சம் மக்கள் படுகொலை செய்யப்பட்ட அந்தத் தருணத்தில் கருணாநிதி செம்மொழி மாநாடு நடத்தினார் அதற்கெதிராக சுவர் போஸ்டர் ஒட்டிய வழக்கில் கைது சிறை
ஒரு பயலும் பினைக்கு கூட ஜாமீன் கையெழுத்து போடகூட வரவில்லை.

அதன்பிறகு திருச்சிற்றம்பலம் என்ற ஊரில் இரவு பொதுக்கூட்டத்தில் சீமான் அருகில் நான் இருந்தேன் சீமான் உணர்ச்சி பொங்க பேச்சு எல்லோரும் கைதட்டி ஆரவாரம் செய்தனர் மறுநாள் சமூக பிரச்சினைக்காக நான் கைது செய்யப்பட்டேன் அந்த தருணத்திலும் ஒருவரும் பிணையில் எடுக்கவும் அல்லது நீதிமன்றத்தில் குறைந்தபட்சம் எனக்குச் சாட்சி சொல்ல கூட எவரும் வரவில்லை
அதன் பிறகு வழக்கை நடத்தகூட நாம் தமிழர் கட்சிகாரன் எவரும் வரவில்லை.

நான் சிறை சென்றது கூட எனக்கு வருத்தம் இல்லை ஆனால் நாம் தமிழர் கட்சியை நம்பி ஒருவன் சமூக பிரச்சினைக்காக சிறை சென்றால் அவனை பிணையில் எடுக்க கூட தகுதியற்ற அல்லது ஏன் என்று கேட்க கூட பொறுப்பற்ற அரசியலை நம்பி எட்டு வருடம் அலைந்து திரிந்தது தான் மறக்க முடியாத தருணம். இன்றுவரை வாயால் வடை சுட்டு தான் நாம் தமிழர் கட்சி பயணிக்கிறது.

நீங்கள் நாம்தமிழர்கட்சி செயலை உன்னிப்பாக கவனித்து பாருங்கள்
அதிகபட்சம் முகநூலில் சண்டை போடுவார்கள் தமிழ்நாட்டைத் தமிழன் ஆள வேண்டும் என்றெல்லாம் முகநூலில் தான் பேசுவார்கள்
அடிப்படையில் மனிதனின் அன்றாட பிரச்சினையை பற்றி கண்டு கொள்ள மாட்டார்கள் லஞ்சம் ஊழல் மக்கள் பிரச்சினைக்காக துணிவாக எவரும் முன்வரமாட்டார்கள்.

இந்த பிரச்சினை இருக்குது வாருங்கள் என்றெல்லாம் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த எவரிடமாவது கேட்டுப்பாருங்கள்
நாங்கள் ஆட்சி அதிகாரத்தில் இல்லை என்றும் எங்கள் சீமான் ஆட்சி அதிகாரத்தில் வந்த பிறகு எல்லாம் மாற்றுவார் என்றும் இவர்களும் சேர்ந்து வாயால் வடை சொல்வார்கள்.

இந்த வடிவேல் படத்தில் பலமுறை போன் வரும் ஆனால் வேறு நபர்கள் எடுத்து எடுத்து பதில் சொல்வார்கள். அதைப்போலவே
சீமானிடம் எனது எண் இருந்தாலும் போனை எடுப்பதில்லை நான் சிறையிலிருந்து வந்த நேரத்தில்
நான் போன் செய்தால் போனை வேறு நபர் எடுத்து
அண்ணன் குளிக்கிறார் என்றும்
அண்ணன் சாப்பிடுகிறார் அப்புறம் பேசுங்கள் என்றும்
அண்ணன் வாகனத்தில் போகிறார் அப்புறம் பேசுங்கள் என்றும்
அண்ணன் பொதுக் கூட்டத்தில் பேசிக் கொண்டிருக்கிறார் அப்புறம் பேசுங்கள் என்றும் பதில் தந்தார்கள்.

சரி இரவு நேரங்களில் நான் போன் செய்தால் அப்புவும் வேறு நபர் எடுத்துப் பேசுவார்கள் அண்ணன் தூங்குகிறாள் என்று
அதைப்போலத்தான் இப்போது கல்யாணசுந்தரம் நான் போனை செய்தால் போனை எடுப்பதில்லை.

இந்த போலியான பகட்டு பேச்சை உணர்ச்சி பேச்சை நம்பி இந்த இளம் தலைமுறையை நாசமாக போய்க் கொண்டிருப்பது தான் வருத்தம்
அரசியல் மாற்றம் வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை ஆனால் வெறும் உணர்ச்சி பொங்க பேசும் பேச்சும் கைதட்டலும் மட்டுமே அரசியல் மாற்றம் கொண்டு வராது.

சரி இவர்கள் எப்படியோ அரசியல் செய்துவிட்டுப் போகட்டும் இந்த நாம் தமிழர் கட்சியால் எனக்கு பல வழிகளில் தொல்லை கொடுக்காமல் இருந்தால் போதும் நினைக்கிறேன் அதுவும் நடக்கவில்லை
இதுதொடர்பாக சீமான் கட்சி வளர்க்க காசு கொடுக்கும் வெளிநாட்டு தமிழர்களிடம் பேசிப் பார்த்தேன் அவர்களும் கண்டுகொள்ளாத தெரியவில்லை.

அட போங்கடா நீங்களும் உங்கள் கட்சிகளும்
தமிழ் சித்த மண்ணுக்காக மக்களுக்காக ஈழத்தில் செத்துப்போனவர்கள் நிறைய பேர்.

ஆனால் கட்சி வளர்க்கவும் வயிறு வளர்க்கவும் இன்னும் இவர்களுக்கு தமிழ் இனம் தமிழர் என்ற அடையாளம் தேவைப்படுகிறது
சொகுசாக ஆடி காரில் வலம் வரவும் கோடிக்கணக்கான ரூபாயில் சீமான் வீடு கட்டவும் தமிழர் என்ற அடையாளம் தேவைப்படுகிறது
நாம் தமிழர் கட்சியின் கொள்கையும் நல்லா தான் இருக்கிறதுஆனால் உண்மையாக அதில் எவரும் பயணிக்க முடியாது பத்தோட பதினொன்னு அத்தோட இது ஒன்னு

(கீரமங்கலம் சிகா.லெனின்)