பாத்திமா படிக்க தேர்ந்தெடுத்த பாடங்கள் சமூக உறவுகள், கலந்துரையாடல்கள் மூலமே கற்க இயலும்

மனம் திறந்து பேச உறவுகள் தேவை. இல்லையேல் மன முறிவு இவ்வாறு இழப்புகளை தரும்.

பெற்றோர், ஆசிரியர்களிடம். காணும்குறைகளை கல்விநிறுவனம் செய்த/ செய்துவரும் elitism போன்றவைகளை நாம் போராடி மாற்றலாம்.

குடும்ப அளவில் பெற்றோர் தங்கள் பருவ வயது குழந்தைகளை மனம் திறந்து பேசும் வகையில் தங்களை வளர்த்துக்கொள்ள வேண்டும் .

பாத்திமா கேரள மாணவி . அங்கு மாணவர் இயக்கங்கள் உண்டு . தனது பள்ளிக்காலத்தில் AISF/ SFI/ NSUI என ஏதேனும் ஒரு மாணவ இயக்க உறுப்பினர்களை அறிந்திருந்தால்கூட ஐஐடி எப்படி மாணவர் மனங்களை பண்படுத்தாமல் புண்படுத்துகிறது என தனது கருத்துகளை பகிர்ந்திருக்கலாம்.

பாத்திமா படிக்க தேர்ந்தெடுத்த பாடங்கள் சமூக உறவுகள், கலந்துரையாடல்கள் மூலமே கற்க இயலும். தனது கருத்துகளை பகிர இயலாமல் மனமுறிவால உயிர் முறிப்பது சோகம் , அதே நேரம் பெற்றோருக்கும் மற்றோருக்கும் பாடம்.

இந்தியா பல்வகை மொழி, உணவு, கலாச்சார பழக்க வழக்கங்கள் கொண்ட நாடு. ஐஐடி மாதிரியான elite கல்வி நிறுவனங்கள் பல தரப்பட்ட மாணவர்கள் ஓரிடம் சேரும்போது அவர்களை ஒரு குடும்பம் போன்ற உணர்வை ஏற்படுத்த தவறுகின்றன.

MCC, JNU போன்ற கல்வி நிறுவனங்களிடம் ஐஐடி பாடம் பயிலவேண்டும்.

அந்த JNU விலும் ஒரு தமிழ்நாட்டு மாணவர் தற்கொலை செய்து கொண்டார் என்பதை என்னென்பது?