அமெரிக்க தேர்தல்: ட்ரம் அதிரடி அறிவிப்பு

வாக்கெண்ணும் நடவடிக்கைகளை இடைநிறுத்தும் வகையிலேயே உயர் நீதிமன்றத்தை தான் நாடவுள்ளதாகவும் அவர் அறிவித்திருந்தார்.

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில், சில மாநிலங்களில், ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்றுள்ளார்.

நியூயோர்க், வெர்மான்ட், மசாசூட்ஸ், நியூஜெர்சி, கனக்டிகட், டெலவர் மாநிலங்களிலேயே இவர் முன்னிலையில் உள்ளார்.

2020ஆம் ஆண்டு ஐக்கிய அமெரிக்காவின் ஜனாதிபதித் தேர்தலில், குடியரசு கட்சி சார்பில் டொனால்ட் ட்ரம்பும் ஜனநாயகக் கட்சி சார்பில் ஜோ பைடனும் போட்டியிடுகின்றனர்.

துணை ஜனாதிபதிப் பதவிக்கு குடியரசு கட்சி சார்பில் மைக் பென்ஸ், ஜனநாயகக் கட்சி சார்பில், இந்தியாவைப் பூர்வீகமாக கொண்ட, கமலா ஹாரிஸ் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

தேர்தலுக்கான வாக்குப்பதிவு முடிந்துள்ள நிலையில், வாக்குகளை எண்ணும் பணிகள் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன், 223 க்கும் அதிகமான இடங்களில் வெற்றிபெற்றுள்ளதுடன், குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் 118 இடங்களையும் கைப்பற்றியுள்ளார்.

டுவிட்டர் நிர்வாகம் கண்டனம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஜனாதிபதி தேர்தல் தொடர்பில், தனது உத்தியேகப்பூர்வ டுவிட்டரில் பதிவிட்டுள்ள கருத்துக்கு, டுவிட்டர் நிர்வாகம் கண்டனங்களைப் பதிவு செய்துள்ளது.

தேர்தல் வெற்றியை, எதிர்த் தரப்பினர் களவாடுவதற்கு முனைவதாகவும் அதற்க்கு தாம் ஒருபோதும் இடமளிக்க போவதில்லை என்றும் பதிவிட்டிருந்தார்.

இது தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள டுவிட்டர் நிர்வாகம், குறித்த பதிவின் மூலம், தேர்தலை ட்ரம்ப் தவறாக வழிநடத்துவதாகவும் அதற்க்கு தமது கண்டனங்களை பதிவிடுவதாகவும் தெரிவித்துள்ளது.

நள்ளிரவு விசேட உரை

“மாபெரும் வெற்றி தொடர்பில் நான் நள்ளிரவு விசேட உரை ஒன்றை நிகழ்த்துவேன்”இவ்வாறு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இன்று (04) சற்றுமுன் ட்டுவிட் செய்துள்ளார்