அம்பிளாந்துறை படகுப்பாதை நீரில் மூழ்கியது

நேற்று (08) இரவு 7 மணியளவில் சேவையிலீடுபட்ட பின்னர் உரிய இடத்தில் தருத்தி நிறுத்திவிட்டு நடத்துநர்கள் வீடு சென்றுள்ள நிலையில், இன்று (09) இயந்திரப்படகுச் சேவையை ஆரம்பிப்பதற்காகச் சென்ற இவ்வனர்த்தம் இடம்பெற்றுள்ளது.

இந்த இயந்திரப் படகின் கீழ் புறத்தில் ஏற்பட்டிருந்த துவாரங்கள் ஊடாக ஆற்று நீர் உட்புகுந்து இயந்திரப்படகின் அரைவாசி நீரினுள் மூழ்கியுள்ளதுடன், படகில் பொருத்தப்பட்டிருந்த இரு இயந்திரங்ளும் முற்றாக ஆற்றில் மூழ்கியுள்ளதை அவதானித்துள்ளனர்.

இதனால் தற்போது மட்டக்களப்பு வாவியை ஊடற்றுத்து மேற்கொள்ளும் குருக்கள்மடம் – அம்பிளாந்துறை ஊடக இடம்பெறும் இயந்திரப் படகுச் சேவை, இன்று இடம்பெறவில்லை. குறித்த போக்குவரத்து மார்க்கத்தைப் பயற்படுத்தும் விவசாயிகள், பொதுமக்கள், வியாபாரிகள் என ஏராளமானோர் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

இயந்திரப்படகு நீரில் மூழ்கியுள்ளமை தொடர்பில் வீதி அபிவிருத்தித் திணைக்களத்துக்குத் தாம் அறிவித்தள்ளதாக, அதன் நடத்துநர்கள் தெரிவித்தனர்.

இந்த இயந்திரப்படகு மிக நீண்ட காலமாக பழுதடைவதும், மீண்டும் அதனைத் புணரமைத்து சேவைக்கு விடுவதுமாகத்தான் இதுவரையில் இருந்து வருகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.