அரசியல் நிர்ணய சபை எனும் UNP நாடகமும் TNA யினரது சோரம் போன அணுகுமுறையும்:

மறுபக்கத்தில் திரு சம்பந்தன் அவர்களோ கடந்த எழுபது வருட போராடடத்தில் எந்த ஒரு தமிழ் தலைவரும் பெற்றிராத அந்தஸ்தையும் அங்கீகாரத்தையும் வெளிநாட்டு ராஜ தந்திரிகள் மத்தியில் பெற்றிருந்தார். இவ்வளவு செல்வாக்கு, அந்தஸ்து மக்களின் வாக்கு பலம் பாராளுமன்றத்தில் நிர்ணயகரமான சக்தியாக இருந்தமை இவற்றின் மூலமாக தமிழ் மக்களுக்கு TNA யினர் ஆக்கபூர்வமாக என்ன செய்தார்கள் என்றால் எதுவுமே செய்யவில்லை என்பதே பதிலாகுகின்றது.

இந்தளவு பலமான பின்புலத்தோடு பதவிகளை கைப்பற்றியவர்கள் வரலாற்றில் இரண்டு பெரிய சிங்கள கட்சிகளும் இணைந்து ஆட்சி அமைத்தபோது ஒரு வருடத்தில் தமிழ் மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றக்கூடிய புதிய அரசிலமைப்பை கொண்டு வருவோம் என்று மக்களை நம்ப வைத்தனர். இறுதியில் இந்த அரசியல் நிர்ணய சபை என்பது UNP யினரின் ஒரு வெறும் நாடகம் என்பது அம்பலமாக தொடங்கியதும் ஒற்றை ஆட்சிக்குள் சமஸ்டி என்று விந்தையான சொல்லாடல் மூலம் தமிழ் மக்களை முட்டாள்களாக்கினார்கள் .

ரணிலின் பதவிக்கு ஆபத்து என்றவுடன் உச்சநீதி மன்றங்களிலும் ஊடகங்களிலும் குரைத்து திரிபவர்கள் தற்போதுள்ள 13வது திருத்தததை அர்த்தமுள்ளதாக்கவோ அதிலுள்ள மத்திய அரசு பிழையாக அர்த்தப்படுத்தியிருக்கும் விடயங்கள் தொடர்பிலோ உச்ச நீதி மன்றம் செல்லவில்லை அல்லது 13வது திருத்தத்தை அர்த்தமுள்ளதாக்கும் வகையில் பாராளுமன்றத்தில் சாதாரண சட்டங்களை கொண்டுவரவோ எந்த வித முயற்சியையும் எடுக்கவே இல்லை.

இதனால்தான் UNP – TNA யினரின் தமிழ் மக்கள் விரோத கூட்டு நிராகரிக்கப்படல் வேண்டும் – மாற்றத்திற்காக தமிழ் பேசும் மக்கள் வாக்களிக்க வேண்டும் – எதிர் வரும் ஜனாதிபதி தேர்தலில் SLPP – இடதுசாரிக்கட்சிகளின் கூட்டினால் நிறுத்தப்படும் வேட்பாளருக்கே தமிழ் மக்கள் ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்று SDPT கோருகின்றது .