இந்திய தேர்தல்

அந்தவகையில், கடந்த 30 ஆண்டுகளில் முதற்தடவையாக நாடாளுமன்ற கீழ்ச் சபையில் தனிப் பெரும்பான்மையுடன் கடந்த 2014ஆம் ஆண்டு ஆட்சியமைத்த பா.ஜ.க, தற்போது 1984ஆம் ஆண்டுக்குப் பின்னர் அடுத்தடுத்து தனியொரு கட்சி பெற்ற பெரும்பான்மையை தற்போது அடைந்துள்ளது.

மொத்தமுள்ள 542 தொகுதிகளில், 292 தொகுதிகளில் பா.ஜ.க வெல்கின்றது. அந்தவகையில் கடந்த 2014ஆம் ஆண்டு நாடாளுமன்ற கீழ்ச் சபை தேர்தலில் பா.ஜ.க பெற்றதை விட இம்முறை 10 தொகுதிகள் அதிகமாகும். இதேவேளை, பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 343 தொகுதிகளில் வெல்கிறது. 2014ஆம் ஆண்டு நாடாளுமன்ற கீழ்ச்சபை தேர்தலில் தேசிய ஜனநாயக் கூட்டணி பெற்ற 352 ஆசனங்களை விட இது ஒன்பது ஆசனங்கள் குறைவாகும்.

இந்நிலையில், பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் 55 ஆசனங்களைப் பெறுவதுடன், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி 92 ஆசனங்களைப் பெறுகின்றது. அந்தவகையில், 2014ஆம் ஆண்டு நாடாளுமன்ற கீழ்ச் சபை தேர்தலில் பெற்ற 44 ஆசனங்களை விட 11 ஆசனங்கள் அதிகமாக இம்முறை காங்கிரஸ் பெற்றுள்ளதுடன், அத்தேர்தலில் பெற்ற 65 ஆசனங்களை விட 28 ஆசனங்கள் அதிகமாக ஐக்கிய முற்போக்குக் கூட்டணி பெற்றுள்ளது.