‘கலகக்காரர்களைக் கட்டுப்படுத்த, துப்பாக்கிச்சூடு நடத்துங்கள்’

அத்துடன், சட்டத்தைக் கையிலெடுக்கின்ற நாசகாரக் கும்பல்களுக்கு தலைமைதாங்கும் சிலரின் பெயர்கள் குறித்தும், இன்று (13) பாதுகாப்புக் கூட்டத்தில் ஆராய்ந்ததாகவும், அமைச்சர் கூறினார்.

குருநாகல் மற்றும் கம்பஹா மாவட்டங்களில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் நடைபெற்றுள்ள நிலையில், பாதுகாப்பை உறுதிப்படுத்துவது தொடர்பான உயர்மட்டக் கலந்துரையாடல்கள், அலரி மாளிகை மற்றும் பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்திலுள்ள ஒப்பரேசன் அறையில், இன்றிரவு (13) நடைபெற்றன.

இக்கலந்துரையாடல்களில் கலந்துகொண்டபின் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே, அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.