சிக்கலுக்குள்ளாகும் அஸார்பைஜான், ஆர்மேனியயுத்தநிறுத்தம்

யுத்தநிறுத்தத்தை ஏற்படுத்திய ரஷ்யாவானது இரண்டு தரப்புகளையும் யுத்தநிறுத்தத்தை மதிக்குமாறு கோரியதுடன், நூற்றுக்கணக்கான மக்களைக் கொன்ற மோதலை நிறுத்துவதற்கு மேலும் பணியாற்றுமாறு அஸார்பைஜானின் நட்புறவு நாடான துருக்கிக்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் மீண்டும் மீண்டுமான அழைப்புகளை லக்ஸம்பேர்க் விடுத்துள்ளது.

கடந்த மாதம் 27ஆம் திகதியிலிருந்து 41 அஸார்பைஜான் பொதுமக்கள் உயிரிழந்ததாகவும், 207 பேர் காயமடைந்ததாகவும் அஸார்பைஜான் தெரிவித்துள்ள நிலையில், அதன் இராணுவப் பாதிப்புக்களை அது வெளிப்படுத்தவில்லை.

இந்நிலையில், கடந்த மாதம் 27ஆம் திகதியிலிருந்து தமது இராணுவத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 525ஐ எட்டியுள்ளதாக நாகொர்னோ-கரபாஹ் தெரிவித்ததுடன், குறைந்தது 31 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக நாகொர்னோ-கரபாஹ் மனித உரிமைகள் ஒம்புட்ஸ்மனை மேற்கோள்காட்டி ஆர்.ஐ.ஏ செய்தி முகவரகம் செய்தி வெளியிட்டுள்ளது.

Leave a Reply