தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளராக சத்தியலிங்கம் தெரிவு

கட்சியின் பொதுச்செயலாளராக செயற்பட்டு வந்த முன்னாள் கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி. துரைராஜசிங்கம் தனது பதவியில் இருந்து இராஜினாமா செய்ததை அடுத்து, பொதுச்செயலாளர் பதவி வெற்றிடமாக காணப்பட்டு வந்தது.

இந்நிலையில் கட்சியின் செயற்பாடுகளை முன்னெடுத்து செல்வதற்காக, கட்சி மட்டத்தில் பொதுச்செயலாளரொருவரை நியமிக்கும் பொருட்டு துணைத்தலைவர்களாக செயற்பட்டு வந்த வைத்தியகலாநிதி ப. சத்தியலிங்கம் மற்றும் எம்.ஏ. சுமந்திரன் ஆகியோரில் ஒருவரை பொதுச்செயலாளராக நியமிக்க உத்திதேசிக்கப்பட்டிருந்தது.

இதன் பிரகாரம், தமிழரசுக்கட்சியின் பொதுச்சபை கூடும் வரையிலும் துணைத்தலைவராக செயற்பட்டு வந்த
ப. சத்தியலிங்கம் பொதுச்செயலாளராக செயற்படும் வகையில் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.