நரேந்திர மோதியை விமர்சிக்கும் ராகுல் காந்தி

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரிப்பது குறித்த தனது ட்விட்டர் பதிவில், அதையும் குறிப்பிட்டு விமர்சித்துள்ளார் ராகுல் காந்தி. இந்திய நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத் தொடர் வழக்கமாக நடக்கும் திகதியை

விட இந்த ஆண்டு தாமதமாக இன்று தொடங்கியுள்ள சூழலில், இன்று காலை தனது ட்விட்டர் பக்கத்தில் இந்தியில் அவர் ஒரு பதிவிட்டுள்ளார்.

“இந்தியாவின் கொரோனா வைரஸ் பாதிப்புகள் இந்த வாரம் 50 இலட்சத்தைக் கடக்கும். தற்போது 10 இலட்சம் பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

திட்டமிடப் படாமல் அமல்படுத்தப்பட்ட முடக்கநிலை ஒரு தனி மனிதரின் அகங்காரத்தால் நடந்தது. இது இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பரவுவதற்கு வழிவகுத்தது.

தற்சார்பு என்று மோதி அரசாங்கம் கூறுவது உங்கள் வாழ்க்கையை நீங்களே பார்த்துக் கொள்ள வேண்டும் என்றுதான்.

ஏனென்றால் பிரதமர் மயில்களுடன் பிசியாக இருக்கிறார்,” என்று ராகுல் காந்தி பதிவிட்டுள்ளார்.