நாடு திரும்பியதும் வேட்பாளர் அறிவிப்பு

பிரதமர் நாடு திரும்பியதுமன், ஐக்கிய தேசியக் கட்சி தனது ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பான இறுதியான தீர்மானத்தை எடுக்கும் என, அக்கட்சியின் சிரேஷ்ட் அமைச்சர் ஒருவர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எதிர்வரும் 5ஆம் திகதி நாடு திரும்பவுள்ள நிலையில், 6ஆம் திகதி ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் இறுதி தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சி ஜனாதிபதி வேட்பாளரை நியமிக்க முடிவு செய்துள்ளது என்று அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார்.

நேற்று (31) ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விக்கு அவர் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார்.