நினைவுத்தூபி விவகாரம்: ’துணைவேந்தரிடம் ஆதாரம் உள்ளது’

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் ஆகியோர் போராட்டக்களத்துக்கு சென்றதுடன், பின்னர், பல்கலைகழகத் துணைவேந்தரை சந்தித்து பேசினர்.

இதையடுத்து, ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தோடர்ந்துரைத்த அவர், ‘இந்த நினைவுத்தூபியை இடிக்க எனக்கு அழுத்தம் தந்தார்கள். இப்பொழுது பலர் தமக்கு தொடர்பில்லையென கூறுகிறார்கள். அதற்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளது. அதை நான் பல்கலைகழக பேரவை கூட்டத்தில் வெளிப்படுத்துவேன்’ என, துணைவேந்தர் கூறியதாகத் தெரிவித்தார்.

‘போராடும் மாணவர்களின் உணர்வு எனக்கும் உள்ளது. இந்த தூபியை இடித்தது எனக்கும் கவலைதான். அதை மீள அமைக்க- உரிய வழிமுறைகளில் நான் தயாராக இருக்கிறேன். இது பற்றி மாணவர்களுடன் பேசவுள்ளேன்’ எனவும், துணைவேந்தர் தெரிவித்துள்ளதாக, சித்தார்த்தன் கூறினார்.

Leave a Reply