“இதோ இன்னொரு வாழும் கக்கன்”.

தலைவாசல் ஒன்றியம் சாத்தப்பாடி என்ற ஊரைச் சார்ந்த இளங்கோவன் அய்யா…

1984ல் தலைவாசல் ஒன்றிய குழு கவுன்சிலர், 2001-2006ல் தலைவாசல் ஒன்றிய பெருந்தலைவர் (தலித்தாக இருந்தாலும் பொது தொகுதியில் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டவர்),
2011-2016 ல் சேலம் மாவட்ட கவுன்சிலர், 2006ல் தலைவாசல் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தவர்.

இப்போது இருக்கும் அரசியல் நிலையில் இப்படிப்பட்ட பதவிகளை வகித்தவருக்கு சொத்து மதிப்பு எவ்வளவு இருக்கும்? வீடு,கார்,நிலம் போன்றவற்றை எவ்வளவு சேர்த்திருக்க முடியும்? ஆனால் இவரின் அப்பா அளித்த 2 ஏக்கர் நிலம் மற்றும் ஒரு ஓட்டு வீடு மட்டுமே இப்போதும் சொந்தமாக வைத்திருப்பவர்.இரு சக்கர வாகனம் கூட அவரிடம் சொந்தமாக இல்லை.இருந்தாலும் இன்றும் மக்களின் பிரச்சனைகளை தீர்க்க நடந்தோ, அரசு பேருந்திலோ அல்லது தெரிந்த நபர்களின் இரு சக்கர வாகனத்திலோ தலைவாசல் மற்றும் சேலம் மாவட்ட அளவிலான அரசு அலுவங்களுக்கு செல்பவர்.

தன் குழந்தைகளை அரசு பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கவைத்தவர்.தினமும் அடித்தட்டு மக்களுக்காக அரசு அலுவலர்களை சந்தித்து மணிக்கணக்கில் வாதாடி பிரச்சனைகளை தீர்ப்பதில் மகிழ்ச்சி கொள்பவர். சுற்றுவட்டார ஏழை மாணவர்கள் கல்லூரிகளில் சேர சம்பந்தப்பட்ட கல்லூரி முதல்வரை சந்தித்து இலவசமாக படிக்க ஏற்பாடு செய்பவர். அவ்வளவு ஏன்? முகவரிக்கே 3 மாணவியர்களை படிக்க அனுப்பி அவர்களின் உயர்கல்விக்கு வித்திட்டு இன்று அவர்கள் நல்ல நிலையில் இருக்க காரணமானவர். பொதுவாக சாதி அரசியலை வெறுப்பவர். தான் சார்ந்த கட்சிக்கு என்றும் விசுவாசமாக இருப்பவர் மற்றும் தலைமையை மதிக்கும் பண்பாளர்.

தலைவாசல் ஒன்றியம், கெங்கவல்லி மற்றும் சேலம் மாவட்ட அதிகாரிகளால் சேர்மன் என அன்புடன் அழைக்கப்படுபவர். மக்கள் மற்றும் அதிகாரிகள் மட்டுமா சேர்மன் என இவரை அழைக்கிறார்கள்? ஏன்? தமிழக முதல்வர் மாண்புமிகு எடப்பாடி கே.பழனிசாமி அவர்களே கூட , “என்ன சேர்மன்,நல்லா இருக்கீங்களா.? என வாஞ்சையோடு இவரை அழைப்பார்.அந்த பெருமைக்குரியவர் இவர்.

இன்றைய Smart phone உலகில் பழைய ரக செல்போனை பயன்படுத்துபவர்.இவரது மோசமான பொருளாதார நிலையை கண்டு சென்னை மாநகர முன்னாள் மேயர் சைதை துரைசாமி அவர்கள் இவருடைய மருமகளுக்கு தற்காலிக வேலை வாங்கி கொடுத்த நன்றியை மறவாமல் என்றும் நினைவில் கொள்பவர்.

இவ்வளவு பெருமைக்கு பெயர் பெற்றவர் என்றாலும் அரசியல் வட்டாரத்தில் பிழைக்க தெரியாதவர் என பெயர் பெற்றவர்.இந்திரா காந்தி,காமராஜரிடம் நன்கு அறிமுகமாகி 20 வருடங்களாக பஞ்சாயத்து தலைவராக சிறப்பாக செயல்பட்ட சின்னதம்பியின் ஊரை சார்ந்தவர்.

இத்தனை பெருமைக்கெல்லாம் உரியவர் தலைவாசல் ஒன்றியம் சாத்தப்பாடி என்ற ஊரைச் சார்ந்த இளங்கோவன் அய்யா அவர்களே..!!!!

நான் கக்கனை கேள்விப்பட்டியிருக்கிறேன்.ஆனால் பார்த்ததில்லை.அனுபவபூர்வமாக தலைவாசல் ஒன்றிய முன்னாள் சேர்மன் அய்யா இளங்கோவன் அவர்களையே கக்கனாக பார்க்கிறேன். (மரத்தடியிலும், Tea கடையிலும் மக்களோடு மக்களாக ஏழ்மையாகவும் எளிமையாகவும் வாழ்பவர்)

குறிப்பு:

முகவரியை தாண்டி எனக்கும் ஒரு கனவு இருக்கு… அந்த கனவிற்கு உயிர்கொடுக்கும் நபர்களில் இவரும் ஒருவர்.அந்த கனவு என்பது ஏழை அடித்தட்டு மக்களுக்கு எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் இவரை போல் பணியாற்ற வேண்டும் என்பதே…

காலம்தான் தீர்மானிக்கும்…

நன்றி : முகவரி ரமேஷ்.
படித்தேன்… பிடித்தது… பகிர்ந்துள்ளேன்…

#என்றும்_அன்புடன் …
இராமச்சந்திர மூர்த்தி.பா