இந்திய தேர்தல் முடிவுகள் உணர்வலைகள்

தோழர் யமுனாவுக்கு நன்றி.

இருவிதமான போக்குகள்
இன்று உலகில் நிலவுகின்றன.

ஐரோப்பாவில் இனவாத, மதவாத,
பாசிசக் கட்சிகள் பெரும் செல்வாக்குப்
பெற்று வருகின்றன.

ஓரளவு செக்யூலர் தன்மைகளுக்காகவே
போராட வேண்டியுள்ள துருக்கி தவிர
மற்ற இஸ்லாமிய நாடுகளில் உள்ளது
அத்தனையும் மதவாத தியோக்ரடிக் அல்லது ஆரிஸ்டோக்ரெடிக் ஆட்சிகள்தான்.

பாகிஸ்தானிலும் அமெரிக்காவிலும்
மதங்கள் ஆட்சியதிகாரத்தில்
பெரும் பங்கு ஆற்றுகின்றன.

இந்தியாவிலும் இந்த வலதுசாரி-மதவாத ஆட்சி வலுப்பெற்றிருக்கிறது.

உலகெங்கிலுமே ஒற்றைக் கட்சியாட்சி, வர்க்க மையவாதம் கொண்ட கம்யூனிஸ்ட் கட்சிகள் – ஸ்டாலினிய சோசலிசம் பேசும் கட்சிகளின் கட்டமைப்புகள் முடிவுக்கு வந்துவிட்டன.

இந்தியாவிலும் இப்போது
இதுவே நிதர்சனம்.

இன்னொரு புறத்தில்,
மரபுவழி ஒற்றைக் கட்சி மைய கம்யூனிஸ்ட் கட்சிக்கு மாற்றாக –
புதியவகையிலான இடதுசாரிகள்
ஐரோப்பாவில் பெருமளவில்
மக்கள் செல்வாக்குப் பெற்று வருகிறார்கள்.

ஊடகச் செல்வாக்கை நிலைநாட்டுதல்,
தேசபக்தி என்பதை எவ்வாறு கையாள்வது, சமூகநீதியையும் ஜனநாயகத்தையும்
எவ்வாறு இணைப்பது என்பதில்
இவர்கள் அக்கறை கொள்கிறார்கள்.

முதலாளித்துவம் குறித்த மார்க்சியப் பகுப்பாய்வு, ஜனநாயக சோசலிசப் பாதை என இதனைச் சொல்லலாம். இதுவே இனி இடதுசாரி மாற்று அரசியலாக இருக்கமுடியும்.

தேர்தலில் வேண்டுமானால்
வெற்றி தோல்விகள்
பெரிதாகக் கருதப்படலாம்.

சமூக மாற்ற அரசியலில்
அது ஒரு தங்குமிடம் மட்டுமே.

சமூக மாற்ற அரசியல் என்பது நெடிய பயணம்.
அது கருத்துப் போராட்டத்தினால் ஆனது.

ஸ்தாபன அமைப்பு, சமூகநீதி, சோசலிச ஜனநாயகம், தேசபக்தி, ஊடகத்தில் தமது இருத்தல், சிவில் சமூக விழிப்புணர்வை உருவாக்குதல் குறித்து இடதுசாரிகளிடம் அதிகம் உரையாடல் நடைபெற வேண்டிய காலம் இது.


யமுனா ராஜேந்திரன்