இந்திய மீனவரின் இலங்கை கடலுக்குள் அத்து மீறும் பிரச்சனை

இதைப்பற்றிய முழுமையான புரிதல் எனக்கு இல்லைதான். இருந்தாலுமே, இந்த மீனவனின் கருத்துக்கள், நிறையவே சென்சிபிள் ஆக இருக்கிறது. படித்துப்பாருங்கள்… தீராத தலைவலியான இந்த ராமேஸ்வரம் மீனவர்கள் பிரச்னையை மத்திய அரசு எப்படி தீர்த்து வைத்திருகிறது என்பதையும், தமிழ் நாட்டு தலவைர்கள் கட்ச தீவை மீட்க வேண்டும் என்று எப்படி அரசியல் ஆதாரத்துக்காக நாடகம் ஆடுகிறார்கள் என்பதையும், இலங்கை கடற்பகுதியில் நம் மீனவர்கள் செய்யும் அட்டூழியங்களையும் இதில் பார்ப்போம்..


மோடி ஆட்சி பொறுப்புக்கு வந்த இந்த 15 மாத ஆட்சி காலத்தில் ஒரு மீனவர் கூட இலங்கை கடற் பகுதியில் சுட்டு கொல்லபடவில்லை . ஆனால் கடந்த காலங்களில் 500 இக்கு அதிகமான மீனவர்களை, இலங்கை கடற்படை துப்பாக்கிகளால் சுட்டு கொன்று இருக்கிறது எனபது நினைவு கூற தக்கது.

இலங்கை இந்திய கடற்பகுதியில்… விடுதலை புலிகளின் ஆதிக்கம் இருந்தது வரை.., அவர்கள் நம் மீனவர்களுக்கு ஒரு மறைமுக அரணாக இருந்தார்கள், காரணம், நம் மீனவர்கள் மீன் பிடிக்கும் மன்னார் கடற்பகுதி கடற்புலிகள் ஆதிக்க பகுதி எனபதால் சிங்கள கடற்படை பயத்தில் எப்பவாது ஒரு முறைதான் ரோந்து வருவதுண்டு.

அதைப்பயன்படுத்தி நம் மீனவர்கள் புகுந்து விளையாடினார்கள். மேலும் அந்த கடற்பகுதி விடுதலை புலிகளின் பகுதி எனபதால் அங்கு இலங்கை மீனவர்களுக்கு மீன் பிடிக்க தடை இருந்தது, ஆனால் இப்போது சண்டை மற்றும் புலிகள் இல்லாதால் சிங்கள கடற்படையும் எந்த பயமும் இல்லாமல் இந்த பகுதியில் ரோந்து வருகிறது. இப்போது அந்த பகுதியில் இலங்கை மீனவர்களும் மீன் பிடிக்க ஆரம்பித்து விட்டார்கள். அவர்களே நம் மீனவர்களுக்கு எதிராகிவிட்டர்கள் .
நம் மீனவர்கள் இலகை கடற்பகுதில் மீன் பிடிப்பதை தற்சமயம் இலங்கை கடற்படை மற்றும் இலங்கை தமிழ் மீனவர்கள், ஒரு காலத்திலும் எதிர்க்க வில்லை.

ஆனால் நம் மீனவர்கள், அவர்களைப்போன்ற மீன் பிடி முறைதான் கடைபிடிக்க வேண்டும் எனபது தான் அவர்கள் கடந்த 20 ஆண்டுகளாக சொல்லி வருகிறார்கள். ஆனால் நம் மீனவர்கள் நவீன இரட்டை மடி மற்றும் இழுவலையை பயனபடுத்தி மீன் பிடிகிறார்கள். இது.. சாதாரன வலையை பயன்படுத்தும் இலங்கை மீனவர்கள் கடலில் போட்டு வைத்திருக்கும் வலையை கிழித்து நாசப்படுத்தி விடும் அல்லது சில நேரங்களில், அவர்கள் வலை முற்றிலுமாக சுருட்டப்பட்டு, நம் மீனவர்களின் இழுவலைக்குள் வந்து விடும், பிறகு, அந்த மீனவன் வலைக்கு எங்கய்யா போவான்?

அடுத்து, அந்த மீனவன் புது வலையைத்தான் வாங்க வேண்டும். இந்த இரட்டை மடி மற்றும் இழுவலையை போட்டு அரிப்பதால் கடலின் பவளபாறைகள் சிதைந்து, கடல்,சுற்று சூழல் கடுமையாக பாதிக்கபட்டு கடல் பகுதி மீன்வளம் இல்லாத வெறும் மணற்தரையாக மாறிவிடும்.. மேலும், இந்த வலை அரிக்கும் இடங்களில் உள்ள தண்ணீரைத்தவிர, மீன், குஞ்சு, முட்டை, பாசி, நுண்ணுயிரிகள் அனைத்தும் இந்த வலைக்குள் வந்து விடும் மீனவர்கள் நல்ல மீனை மட்டும் எடுப்பார்கள். இப்படி இழுவலையும் , இரட்டைமடியையும் வைத்து இழு, இழு என்று இழுத்து நம் கடற்பகுதியை… மீன் வளம் இல்லாத வெறும் மலட்டுக்கடலாக மாற்றி வைத்திருகிறார்கள்.

இந்நிலையில் இவர்கள் இலங்கைக்கடலிலும் இந்த முறையை பயன்படுத்தினால் இலங்கைக் கடலும் இன்னும் ஒரு சில ஆண்டுகளில் மலடாகி விடும் .. அதனால் தான் இலங்கை அரசும் இலங்கை மீனவர்களும் இழுவலை மற்றும் இரட்டைமடியை பயன்படுத்தாமல்… தாரளமாக எங்கள் பகுதியில் வந்து மீன் பிடியுங்கள் என்கிறார்கள். கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்வது போல இரட்டைமடியை மட்டும் நம் அரசு இப்போது தடை செய்து விட்டது.. ஆனால் இழுவலை இல்லாமல் நம் விசை படகு மீனவர்களால் மீன் பிடிக்க முடியாது. அதே நேரத்தில்.. இழுவலை பயன்படுத்தும் இடத்தில், இலங்கை மீனவர்கள் தங்கள் வலையை விரித்தால் அவை நம் மீனவர்களின் அதிவேக இழுவலையில் நாசமாகிப்போகும். நம் மீனவர்கள் இழுவலையை நிறுத்தப் போவதும் இல்லை. அவர்கள் இழுவலையை அனுமதிக்கப்போவதும் இல்லை. ஆக.. இது தீராத இடி ஆப்ப சிக்கல்தான்.

நம் மீனவர்கள் செய்யும் தவறை, தமிழ்நாட்டில் உள்ள அரசியல்வாதிகள் சில அரசியல் காரணங்களுக்காக சொல்லுவதில்லை, மாறாக அரசியல் லாபம்தான் பார்க்கிறார்கள் .. மீனவர்களுக்கு நிரந்தர தீர்வு என்ன என்பதைக்கூட ஆராய்வதில்லை. மாறாக, மக்களின் உணர்ச்சியை தூண்டும் வகையில் கட்சத்தீவை மீட்டால்தான், இந்த பிரச்சினை மீண்டுவிடும் என்று கள்ள பரப்புரை செய்கிறார்கள் கட்சத்தீவை மீட்டால் தமிழக மீனவர்கள் பிரச்னை தீர்ந்து விடுமா என்றால் நிச்சயமாக இல்லை. காரணம்.. விசைப்படகுகளில் மீன் பிடிக்கும் நம் மீன்வர்கள் கட்சத்தீவையும் தாண்டி அதிகநேரம் பயணம் செய்து இலங்கை கடற்பகுதியில்தான் மீன்பிடிகின்ற்றனர்.

இந்நிலையில் ராமேஸ்வரம் மற்றும் மண்டபம் மீனவர்களை.. ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு பழக்க வேண்டும்.. இதற்காக அவர்களுக்கு மானிய விலையில் அதி நவீன படகுகளை வாங்கி கொடுக்க வேண்டும்.. இதற்கு மிகப்பெரிய பொருள் செலவு ஆகும் .. கிட்டத்தட்ட ஒரு படகு 80 லட்சம் முதல் 1 கோடி வரை. (தற்போது அவர்கள் பயன்படுத்தும் சிறிய வகை படகுகள் ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு உதவாது எனும் நிலையில்..) உண்மையிலே தமிழ்நாட்டின் அரசியல் வாதிகளுக்கு ராமேஸ்வரம் மீனவர்கள் மீது அக்கறை இருக்குமானால் மானியவிலையில் அதி நவீனபடகுகளை மீனவர்களுக்கு வழங்கி இந்துமகாசமுத்திரத்தில் ஆழ்கடல் மீன்பிடியை பழக்க வேண்டும்.
இதை செய்யாமல் சும்மா கட்சத்தீவை மீட்க வேண்டும் என்று அர்த்தமில்லாமல் கத்துவது, ஒரு காசுக்கும் உதவாது . இதை அரசு செய்யாத பட்சத்தில்.. அழிவின் விழும்பில் நிற்கும் இந்த விசை படகு மீன்பிடி இன்னும் பத்தே ஆண்டுகளில் மொத்தமாய் மடிந்து விடும்.
(Thangaraj)