இன்று கன்பொல்லை தியாகிகளின் 50 ஆவது நினைவுதினம்.

நெல்லியடி தேநீர்க்கடைப் பிரவேசப் போராட்டம் உச்சம் பெற்றபோது, தம்மீது திணிக்கப்பட்ட அடக்குமுறைகள், சண்டித்தனங்கள், கொலைவெறித் தாக்குதல்கள், பெண்கள், குழந்தைகள் மீதான அத்துமீறல்கள் அராஜகங்களை எதிர்த்துப் போராடுவதற்காக நாட்டு வெடிகுண்டு தயாரித்துக்கொண்டிருந்தபோது ஏற்பட்ட விபத்தில் போராளிகளான மா.சீவரத்தினம், க.செல்வராசா, கி.வேலும்மயிலும் ஆகியோர் இறந்த சம்பவம் கன்பொல்லைக் கிராமத்தில் இடம்பெற்றது.

1966-1971 ஏப்ரல் வரையான நான்கரை ஆண்டுகளில் சாதிய தீண்டாமைக்கு எதிரான வடபுலத்தில் இடம் பெற்ற நேரடிப் போராட்டங்கள் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தோல்வியடையவில்லை.