இலங்கை: தமிழ் பேசும் மக்களின் அரசியல் (பாகம் 1)


இலங்கை ஓல்லாந்தர், போதுக்கீசர், ஆங்கிலேயர் என்ற காலனி ஆதிக்க காலத்தில் முன்பு எப்போதையும் விட இலங்கையில் வாழும் சமூகங்கள் பிரித்தாளும் தந்திரோபாயங்களுக்குள் இழுத்து வரப்பட்டன. காலனி ஆதிக நாடுகள் சிறப்பாக பிரித்தானியா உலகெங்கும் தனது காலனி ஆதிகத்தை நிலை நிறுத்துவதற்காக கையாண்ட தந்திரோபாயம் பிரிதாளும் தந்திரோபாயம். இதில் இலங்கையும் விதிவிலக்காக இருக்கவில்லை.


ஓரளவேனும் முரண்பாட்டிற்குள் உடன்பாடாக வாழ்ந்த சமூகங்களை அவைகளுக்குள் இருக்கும் தனித்தன்மைகளைப் பாவித்து பிரித்து தமது ஆட்சியை ஆட்டம் இன்றி செயற்படுத்துவதே இதன் முழுமையான நோக்கம்.


அந்த வகையில் இலங்கையில் வாழ்ந்து வந்து சிங்களவர் தமிழர்கள் முஸ்லீம்கள் மலயைகத்தவர் என்ற நான்கு வெவ்வேறு இனக் குழுமங்களை ஒன்றுபடாமல் அவர்களுக்குள் இருக்கும் தனித் தன்மைகளை முரண்பாடாக்கி இந்த முரண்பாடுகளை கூர்மையடைய வைத்து தமது சுரண்டல் ஆட்சிகளை செய்து வந்தனர் இந்த காலனி ஆதிகவாதிகள். இவர்களுக்கு சேவகம் செய் உள்ளுரிலும் அவர்களுக்கான ஆட்களை உள்வாங்கிக் கொண்டனர்.


இரண்டாம் உலகப் போரும் இதனை ஒட்டிய தேசங்களின் விடுதலை வேட்கையும் பிரித்தானியா இலங்கையில் இருந்தும் பின்வாங்கி தனது நவ காலனி ஆதிக்கத்தை தொடர இலங்கையிற்கும் சுதந்திரத்தை கொடுத்தது.


ஆனால் அவர்கள் விட்டுச் சென்ற பிரிதாளும் செயற்பாடுகளின் எச்ச சொச்சங்கள் உள்ளுர் அரயல்வாதிகளினால் பேரின, குறும் தேசிய இனவெறியர்களால் உரமேற்றப்பட்டு தொடர்ந்து பயணித்தே வருகின்றது.


அது நாடுகளை பல்வேறு தேசங்களாக பிரிந்து செல்வதற்குரிய போராட்டங்களை வர்க்க விடுதலையை பின் தள்ளி முன்னேற வைத்துள்ளது. அது இலங்கையில் தமிழ் பேசும் மக்கள் தனியாக பிரிந்து தனியான ஒரு நாட்டை உருவாக்குதல் என்ற ஆயுதப் போராட்டம் வரை வளர்ச்சியடைந்து.

சுதந்திரத்திற்கு பின்னரான தேர்தல் தெரிவு பிரநிதித்துவ ஆட்சியமைபில் அரியாசம் ஏறுவதற்கு பெரும்பான்மை சமூகத்தை அதிகம் பிரிதிநித்துவம் செய்த கட்சிகள் பேரினவாதத்தையும் சிறுபான்மை மக்களை பிரிதிநித்துவம் செய்த கட்சிகள் குறும் தேசியவாதத்தையும் தமது உத்திகளாக கையாண்டு வந்தனர்…. வருகின்றனர்.

மற்றைய எதனையும் விட வாக்காளரை கவருவதற்குரிய இலகு வழியாக இதனை அவர்கள் கண்டு கொண்ட படியால் தொடர்ந்தும் மக்களுக்கு அவ்வாறான கருத்தூட்டல்களை செய்து வாக்குகளை பெற்று ஆசனங்களைப் பெற்று வருகின்னர்.
பிரதிநிதித்துவம் பெற்ற இந்த அரசயல்வாதிகள் தாம் பிரநிதித்துவம் செய்யும் இனங்களின் அபிலாசைகளை நிறைவேற்றுவதில் உண்மையாக இதயசுத்தியுடன் செயற்பட்டனரா..? அல்லது செயற்படுகின்றனரா…? என்றால் பொதுப் போக்கில் இல்லை என்றே கூறலாம்.

இடதுசாரிச் சிந்தனை செயற்பாட்டாளர்கள் மக்கள் நலன்கiளை முன்னிறுத்திச் செயற்பட முற்பட்ட போது எல்லாம் பேரினவாதமும், குறும் தேசியவாதமும் இதற்கான முட்டுக்கட்டைகளைப் போட்ட வண்ணமே இருந்தனர். இதற்கு சர்வதேச அளவில் உள்ள பிற்போக்கு சக்திகள் பக்கபலமாக இருந்தனர்.

இவர்களை மீறி மக்களிடம் அதிக ஆசனங்களைப் பெற்று பிரதிநிதித்துவ அரசியலை செய்யும் அளவற்கு இந்த இடதுசாரிகளால் தம்மை வளரத்துக் கொள்வும் முடியவில்லை. இடையிடையேயான முற்றே;ள் ஏற்பட்டாலும் நெருப்பு அணைந்த சாம்பலாகியே வருகின்றனர்.

இதற்கு உலக ஒழுங்கில் ஏற்பட்ட மாற்றங்களும் சிறப்பாக சோவியத் யூனியனின் வலிந்த வீழ்ச்சியும் ஒரு காரணமாகிப் போனது.
இலங்கையில் ஆரம்பத்தில் மொழிவாரியாக தமிழ் பேசும் மக்கள், சிங்களம் பேசும் மக்கள் என்று மொழிவாரியாக (இதற்குள் மதமும் பக்கபலமாக ஒரு வகிபாகத்தை வகித்தது) பிரிந்து நின்றன பிரித்தாளும் பிரித்தானிய சூட்சியினால. இவ்வாறு உருவான கூறுகள் கால ஓட்டத்தில் தமிழ் பேசும் மக்கள் என்ற சிறுபான்மையினர் தமக்குள் தமிழ், முஸ்லீம், மலையகதவர் என்று மூன்ற துண்டுகளாக கூறாக்கப்பட்டனர்.

இதற்கான தேவையை பேரினவாதம் வேண்டி நின்றாலும் இதற்கான களங்களை தமிழ், முஸ்லீம், மலையகத்தவர் என்று மூற்று தரப்பும் சிறப்பாக இவர்களை தேர்தல் தெரிவு மூலம் பிரதிநிதித்துவப்படுத்திய அரசியல் கட்சிகள் செவ்வனவே செய்தனர்… செய்து வருகின்றனர்.
சிறுபான்மை மக்கள் தமது உரிமைகளை பெறுவதற்கு தமக்குள் ஐக்கியப்பட்டு செயற்பட வேண்டிய…. குரல் கொடுக்க வேண்டிய…. போராட வேண்டிய கட்டாயத்தை மறந்து தனித் தனிக் கூறுகளாகி நிற்கின்றனர்.

இதன் வேகப்படுத்தல் வட்டுக் கோட்டையில் எடுக்கப்பட்ட தமிழீழத் தீரமானத்திற்கு பின்னரான தேர்தல், பின்பு தேர்தலில் நம்பிக்கையற்ற இளைஞர்களின் தனி வழிச் செயற்பாடு, ஆயுதப் போராட்டம், ஆயுதங்கள் மௌனம் ஆக்கப்பட்டதாக கூறும் 2009 மே மாதம், இதன் பின்னரான கடந்து 11 வருடக் காலப்பகுதி என்ற கால கட்டங்கள் என்று அமைந்திருக்கின்றன என்பதை மறுக்கிவியலாது.

சேர் பொன் இராமநாதன் காலத்தில் இருந்து ஜி.ஜி. பொன்னம்பலத்தின் இலங்கை தமிழ் காங்கிரஸ், அதனைத் தொடர்ந்த இலங்கை தமிழரசுக் கட்சி, இவற்றின் இணைப்பான தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி, தொடர்ந்தாற் போல் ஆயுதம் ஏந்தி தனிநாடு அமைக்கப் போராடிய விடுதலை அமைப்புக்களின் 1986 டிசமபர் வரை, இதன் பின்ரான தமிழீழ விடுதலை; புலிகளின் ஏக போக செயற்பாடான 2009 மே மாதம் வரை, இதனைத் பின் பற்றி இன்று வரையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயற்பாட்டுக்காலம் என்று காலம்தான் கடந்தனவே ஒழிய சிறுபான்மை மக்கள் தமக்கிடையேயான ஐக்கியத்தை வலுப்படுத்தி இலங்கையில் சம உரிமையுடன் வாழும் அரசியல் தீர்வொன்றை பெறும் வெற்றிகரமான இராஜதந்திர நகர்வுகளை செயற்படுத்த முடியவில்லை என்பது பொதுப் பார்வையில் உண்மையாக இருகடகின்றது.

இதற்கான வாய்புகளை தாம்பாளத்தில் வைத்து கொடுக்கும் நிலையில் பேரினவாதம் இருக்கவில்லையாயினும் சிறுபான்மையினரின் இராஜதந்திர நகர்வுகள் பேரினவாதத்தின் இராஜதந்திர நகர்வுகளிடம் தோற்றே விட்டது என்பதே யதார்த்தம்.

சட்டவாக்க சபையாக பாராளுமன்றங்களும், மக்கள் சபைகளும் உள்ள தேர்தல் ஜனநாயக முறையிற்குள் பேச்சுவார்த்தைகள், வாக்குறுதிகள், அரசியல் வரைபுகள்; எதுவாக இருந்தாலும் அது பாராளுமன்றம் என்ற உயர்நிலையில் ஏற்றுக் கொள்ளப்பட்டு சட்டமாக்கப்படாத வரையும் அவை வெறும் ஏட்டுச் சுரக்காய்தான்.

இந்த ஏட்டுச் சுரக்காய்களின் மத்தியில் இலங்கையின் அரசியல் சட்டவரைவாகத்திற்குள் உள்ளான ஒரு அரசியல தீர்வும் ஏற்பட்டுத்தான் இருக்கின்றது. சேர் பொன் இராமநாதன் காலத்தில் இருந்து இன்று உள்ள சம்மந்தன் வரையிலும் சட்டமாக்கப்பட்ட அந்த தீர்வு பற்றி நாளை பேசுகின்றேன்…
(தொடரும்…)