இளம்செழியன் மீதான துப்பாக்கி பிரயோகவும் இதன் அதிர்வலைகளும்.

(சாகரன்)
முதலில் இத் துப்பாக்கிப் பரியோகம் இளம்செழியன் மீது நடாத்தப்பட்டதா? என்பது கேள்விக்குறியாகி உள்ள நிலையில் இதனை வைத்து அரசியல் நடாத்த முற்படும் தரப்பினர் கண்டனத்திற்கு உரியவர்கள் ஆவார. இலங்கைத்; தமிழர்களில் ஒரு பழக்கம் உண்டு உண்மையான பிரச்சனைகளை விட்டுவிட்டு இல்லாத பிரச்சனைகளை முன்னிறுத்தி உண்மையான பிரச்சனைகளை பலவீனப்படுத்தும் செயற்பாடுகள். இது அளம்செழியன் விடயத்திலும் பொய்துப் போய்விடவில்லை. விக்னேஸ்வரனுக்கு மாற்றீடாக இளம்செழியன் என்ற கோஷத்தை வலுப்படுத்த இந்த கொலை முயற்சி நடவடிக்கையை பாவிப்பதை காணமுடிகின்றது. தமிழ் மக்களுக்க ஒரு மாற்றுத் தலமை தேவையே ஒழிய மாற்றுத் தலைவர் தேவை என்பது அல்ல பிரச்சனை. யாரும் இல்லை? என்று அன்று ஒரு விக்னேஸ்வரனை கொண்டு வந்து இன்றுவரை எதனையும் செயற்படுத்தாத நிலமையே சிவி இற்கு பதிலாக இளம்செழியன் என்ன அல்லது இன்னொரு நபர் மாற்றம் ஏற்படுத்தும்.

மாறாக மாற்று சிந்தனையுள்ள அது மக்களுக்கான ஐக்கியப்பட்ட செயற்திறன் மிக்க திறமையான இராஜதந்திரம் மிக்க தலமை உருவாக்கப்படவேண்டும்.
யுத்தத்தின் முடிவிற்கு பின்னர் புலிகளுக்கு பதிலாக மாற்றுத் தலமை ஏற்படவில்லை மாறாக பிரபாகரனுக்கு பதிலாக அதே சிந்தனையுள்ள மாற்று நபர் தலமை உருவானதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இளஞ்செழியனின் ஆரம்ப காலத்து நீதிபதிச் செயற்பாடுகள் அது வுவனியாவில் இருந்து செயற்பட்டு வழங்கிய தீர்புகளிலிருந்து ஆரம்பிக்க வேண்டும். இதன் அடிப்படையிலேயே இவர்பற்றிய முடிவுகளுக்கு வருவது நலம் வெறும் யுத்தத்திற்கு பின்னரான யாழில் நடைபெறும் குற்றங்களுக்கான அறிக்கைகளின் அடிப்படையில் முடிவுக்கு வருவது சரியானதே என்பது என் கேள்வி. அதுவும் போதைப் பொருட்களைக் கடத்தும் எம்மவரகள் பற்றிய உறுதியான நிலைப்பாட்டை இதுவரை இவர் வெளிபடுத்தவில்லை. கூடவே போராட்ட காலத்தில் நடைபெற்ற மாற்றுக் கருத்தாளர்கள் பற்றிய கருத்துக்களை முன்வைக்கவில்லை. இப்படி பலவற்றை கூறலாம்.
பாதுகாப்பு அதிகாரி தனக்கு வழங்கப்பட்ட கடமையை சரழவர செயற்படுத்த முயன்ற வேளை உயிர் துறந்தது அவரின் சீரிய கடமை உணர்சியை வெளிப்படுத்தியிருக்கின்றது. இவரின் மரணம் தவர்கப்பட்டிருந்தால் சிங்கள் பொலிஸ் வேணும் எண்டு செய்துப் போட்டான் என்று சில காலம் ஊர்வாலம் போகும் நிலமை ஏற்பட்டிருக்கும். இதற்கான வாய்புக்களை சிங்களப் பாதுகாப்பு அதிகாரியின் மரணம் ஏற்படுத்தியிருக்கின்றது.
இளம்செழியன் நீதிபதியாக இருந்தாலும் பல இடங்களில் தான் ஒரு மனுநீதிகண்ட சோழன் போல் நடக்க முற்படுவது சமூக மாற்றத்தை மறுத்து தனிநபர் செயற்பாடடினால் எல்லாவற்றையும் மாற்றி விடலாம் என்ற கருத்தியலை மக்கள் மத்தியில் விதைத்து மக்கள் தமது பொறுப்புக்கள் பற்றி அக்கறை கொள்ளாமல் இருக்கும் நிலமைகளை வலுப்படவே செய்யும் என்பதை நாம் புரிந்து கொள்ளவேண்டும். கட்டைப் பஞ்சாயத்து செய்யும் அணுகு முறைக்கும் கம்பத்தில் கட்டி சமூகவிரோ என்று சுட்டுப் போட்டதற்கும் அதிக வித்தியாசங்கள் இல்லை. பல வேளைகளில் இளம்செழியனின் பேச்சுக்கள் நடத்தைகள் கட்டைப் பஞ்சாயத்தை நினைவூட்டுபவதாகவே எனக்கு படுகின்றது
சில வேளைகளில் நீதிபதிக்குத்தான் நேரடியான உயிர் அச்சுறுத்தல் என்றால் அது மதவாச்சியல் சில வருடங்களுக்கு முன்பு தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம்பி சிறீதரனுக்கு ஏற்பட்ட துப்பாக்கி பிரயோகமும் இதனை ஒட்டிய அச்சுறுத்தலையும் ஒத்ததுவே இது என்ற முடிவிற்கே என்னால் வரமுடிகின்றது. இந்த நிகழ்வை சிங்களக் கடும் கோட்பாளர்கள் மகிழ்சியுடன் தமது பேரினவாத பிரச்சாரங்களுக்கு பணன்படுத்துவர் என்பது வருந்தத்தக்க நிகழ்வு. மரண வீட்டில் காட்டிய உணர்ச்சி யதார்தங்களை மீறி உணர்ச்சியின் வெளிப்பாடோ என்று எண்ணும் அதே வேளை இதனையும் மீறிய இழப்புக்கள் நடைபெற்ற போது விக்னேஸ்வரன்களும் இளம்செழியன்களும் பொட்டிட்டு கோட் போட்டு காரில் பவனிதான் வந்து கொண்டிருந்தார்கள் என்hதை நாம் மறந்துவிடக் கூடாது. மாற்றுத் தலமையை கண்டுபிடிப்போம் மாற்று நபரை அல்ல. புரியக் கூடியவர்கள் புரிந்து கொள்ளுங்கள்