ஈழவிடுதலைப் போராட்டத்தின் தடங்களில்

என்னைச் சுடுவதுடன் நிறுத்திக்கொள்ளுங்கள் இல்லை எமது தாய் மண் சுடுகாடாகி விடும்.
14 08 1983 ஒபரேய் தேவன் புலிகளுக்கு !

உங்கள் கைவசம் உள்ள ஆயுதங்களை எம்மிடம் ஒப்படைத்து சரணடையாவிட்டால் உங்கள் வீடு புகுந்து உங்களையும் உங்கள் குடும்பங்களையும் சுட்டுத்தள்ளுவோம்.
மே 1986 புலிகள் சகோதர போராளிகளுக்கு.

புலிகளின் தலைவர் பிரபாகரன் எஞ்சியுள்ள தனது போராளிகளுடன் சரணடையாவிட்டால் அவர் தனது தலைவிதியை சந்திக்க நேரிடும்.
மே 2009 இலங்கை அரசு புலிகளுக்கு.

முள்ளிவாய்க்காலில் சிக்கி உயிரிழந்த மக்கள் தங்களது கடைசி நேரங்களில் கஞ்சியே தங்கள் உணவாகக் கொண்டிருந்தனர், இதற்க்கு காரணமானவர்கள் புலிகளும் TNA காரன்களும் மாத்திரமே , புலிகள் இறுதியில் வெள்ளைக்கொடியுடன் சரணடைந்ததை கிளிநொச்சியில் செய்து இருந்தால் , அல்லது TNA கார வாழ்ந்து முடிந்து சாவுக்காக காத்திருக்கும் கிழவனுகள் அந்த நேரத்தில் ஓரு சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து இறந்திருந்தால் இந்த அவலத்தை தடுத்திருக்க முடியும் , TNA கார முழுக்கிழவனுகளும் உண்ணாவிரதம் இருந்திருந்தாலும் சாகத்தான் போறானுகள் உண்ணாவிரதம் இருக்காவிட்டாலும் இன்னும் ஒரு சில வருடங்களில் சாகத்தான் போறானுகள் , அதற்க்கு இந்த கிழடுகள் கிளிநொச்சியில் உண்ணாவிரதம் இருந்து இறந்து போரை தடுத்திருந்தால் முள்ளிவாய்க்கால் நினைவு தேவைப்பட்டு இருக்காது ,போர்க்குற்றம் நடைபெற்று இருக்காது ,இத்தனை உயிர்களை இழந்து இருக்கவும் தேவை இல்லை.

இப்போது இவைகளை வைத்து ,
சிலர் கண்ணீர் வடிக்கிறார்கள்
சிலர் வலியில் துடிக்கிறார்கள்
சிலர் அஞ்சலி செலுத்துகிறார்கள்
சிலர் பிரார்த்தனை செய்கிறார்கள்
சிலர் அரசியல் செய்கிறார்கள்
சிலர் உண்டியல் கிலுக்குகிறார்கள்

உங்களை நம்பி வந்த மக்களை
நந்திக் கடல் அருகே குந்த வைத்தீர்கள்.
இழந்து இழந்து,பின்வாங்கிப் பின்வாங்கி மக்களை இழுத்துச் சென்றீர்கள்,அங்கிருந்து தப்பி ஓடியவர்களைத் துரத்திச் சுட்டீர்கள்,
சரணடைய சென்றவர்களை
வெட்டி கொன்றீர்கள்,பதுங்கு குழியில் ஒழிந்து படுத்துக் கிடந்தவர்களை இழுத்து சுட்டீர்கள் ,
கழுத்தில் அணிந்த மரணக் குளிசையை
கழற்றி வீசினீர்கள் , வெள்ளைக் கொடியைக் கைகளில் ஏந்தினீர்கள் எல்லைக் கோட்டைத்
தாண்டிச் சென்றீர்கள் வெடித்தன துப்பாக்கிகள்,
மடிந்தீர்கள் நீங்கள்,பிரபாகரனின் சடலம் தலை பிளந்து விழி திறந்து சகதியில் கிடந்தது ,எப்படி நிகழ்ந்தது அனைவரும் அறிந்ததே.

முப்பது ஆண்டுப் போரின் முடிவில் உங்களை நம்பி வந்தவர்களை முட்கம்பி வேலிக்குள் இழுத்துக் கொண்டு போய் விட்டீர்கள், அவர்கள் முகம் கவிழ்ந்து ,கூனிக்குறுகி அடைபட்டுக் கிடந்தார்கள்,முள்ளிவாய்க்கால் இன அழிப்பு என்றீர்கள் இன அழிப்பு செய்த இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கு வாக்களிக்கச் சொன்னீர்கள்,நூல் நிலையத்தை எரித்தவர்கள் எமது எதிரிகள் என்றீர்கள் , எதிரிகளுடன் சேர்ந்த முதல் இயக்கம் என்ற பெயரை வாங்கி சகோதர இயக்கத்தினரை காட்டிக்கொடுத்துத் துரோகம் செய்து கொன்றொழித்தீர்கள் எரித்தவர்களுக்கு வாக்களிக்கவும் சொன்னீர்கள், சொன்னபடி செய்தார்கள் அதற்காக அவர்கள் பிச்சை எடுக்கிறார்கள் இன்று வரை முன்னாள் போராளிகள் என்கிற பெயரில்,வெக்கித் தலை குனிந்துள்ளது தமிழ் சமூகம் உங்களால் இன்று.

அன்று புலிகள் சகோதர படுகொலைகளைச் செய்து அனைத்து இயக்கங்களையும் தடை செய்தது, அனைத்து இயக்கங்களும் இயங்கிக்கொண்டிருக்கிறது புலிகள் இல்லை இன்று

தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் இறுதியில் தர்மமே வெல்லும்.

அனைவருக்கும் கண்ணீர் அஞ்சலிகள் .