எந்தையும் தாயும் கூடி மகிழ்ந்த… (Part 8)

இலங்கை விமான நிலையத்தில் இறங்கி யாழ் நோக்கிய பிறந்த மண்ணுக்கான பயணத்தில் வவுனியா வரைக்கும் கிலோ மீற்றர் ஒன்றிற்கு நாலு ஐந்து என்று வீதி ஓரக் கடைகளை காணமுடியும் இது இளநீரில் ஆரம்பித்து ரம்புட்டான் மங்குஸ்தான் , கொய்யா பழ வகைகள் என்று விரிந்து மண்சட்டியில் சூட்டடுப்பில் சமைத்த சுவையான சாப்பாடு என்று விரிந்திருக்கும். எங்கு வேண்டுமானாலும் வாகனத்தை தரித்து தேவையானவற்றை வாங்கி சாப்பிடலாம். சுவையாக மட்டும் அல்ல சுத்தமாகவும் ஆரோக்கியமானதாகவும் இருந்தன. எங்கும் அப்பம் கட்டுச்சம்பல் இஞ்சி பிளேன் ரீ. ஆனால் இன்னமும் ரொய்லெர் மாத்திரம் தேவையான தரத்திற்கு வளர்ச்சியடையவில்லை என்பது ஒரு மிகப் பெரிய குறையே. வவுனியா தாண்டியதும் இந்த வீதியோரக் கடைகளை காணமுடியாது?. சிங்கள மக்களின் இந்த சிறிய தொழில் முயற்சிகள் தமிழ் பகுதிகளில் இல்லை. நான் குறிப்பிடுவது நிரந்தரக் கடைகளை அல்ல. இளநீர் கடைகள் போன்றவற்றை. இயக்கச்சி தாண்ட மிகக் குறைவாகவேனும் ஒன்று இரண்டு என்று தமது வீடுகளில் உற்பத்தியாகும் பழம் இளநீரை. நுங்கு என்பன காணக்கிடைத்தன.

இலங்கை முழுவதும் குருநாகல் இளநீர் என்று விற்கப்படும் நிலமை இருக்கின்றது. தமிழ் பிரதேசங்களில் பெரும் பகுதி கடற்கரையை அண்டி இருந்தாலும் இந்த செவ் இளநீர் உற்பத்தியில் கவனம் செலுத்தாத நிலமை காணப்படுகின்றது. ஒர வேளை தேங்காய என்ற ஒரு காலத்து பணப்பயிர் சிந்தனையின் வெளிபாடுகளின் எச்ச சொச்சங்களாக இருக்கலாம் என்ற என் எண்ண ஓட்டம் கடந்த கால எனது விவசாயக் குடும்ப வாழ்வின் அனுபவங்கள். சோடா 2 லீற்றர் 250 வரை கொடுத்து அதிக சீனியை உட்கொள்ளவற்கு பதிலாக வெறும் 60 ரூபாய்கு ஆரோக்கிய இளநீர் பருகுதல். நூர்சத்து அதிகம் உள்ள விளாம் பழம் போன்றவற்றை எனது ஒரு தினத்தின் 75 வீதமான உடலுக்கு தேவையான ஊட்டச்சத்தாக கொண்டிருந்தேன். இது பயணம் எங்கும் எனக்கு ஆரொக்கியமாக இருக்க உதவுகின்றது என்ற எனது ஆரோக்கிய உணவு பட்டியலை முன்வைக்கின்றேன். ஆசையாக பவாப்பழமும் மாம்பழமும் சாப்பிட்டாலும் தற்போது எமது மக்கள் மத்தியல் உற்பத்தியிலும் உட்கொள்வதிலும் அதிகரித்து வரும் பப்பா பழத்தையும் விடவில்லை.

வெயில் காலத்தில் எமக்கு தேவையான இளநீரைப் பெறுவதற்கு குருநாகலை எதிர்பார்த்திருக்கும் நிலமையே காணப்படுகின்றது. இதுதான் இன்றைய தமிழ் சிங்களப் பகுதிகளில் தொழில் முயற்சி பற்றிய ஒருவகை ஒப்பீடு ஆகும். இதனை விமான நிலையத்தில் இருந்து வவுனியா, வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணம் என்று பெரும் தெருக்கள் ஊடான பயணத்தின் போது அறிந்து கொண்டேன். 3 வருடம் 5 வருடம் 15 வருடத்தில் காய்தல் என்ற வரையறைக்கள் உள்ள நல்ல தென்னைம்பிள்ளை இனங்கள் உள்ள சூழலில் மக்கள் இதில் முயற்சி எடுக்கவேண்டும் என்ற கருத்து இளைஞர்கள் மத்தியில் அதிகம் ஆர்வமாக பார்கப்படவில்லை. வெளிநாட்டிற்க ஓடுதல் என்பதில் யாழின் இளைஞர்களின் விட்டில் பூச்சித்தன்மை அதிகம் காணப்படுகின்றது அல்லது ஒரு இரவில் மிகப் பெரிய சம்பளத்துடன் வேலையை ஆரம்பித்தல் என்ற நடைமுறைச்சாத்தியமற்ற சிந்தனைப் போக்கு வெளிப்படுகின்றது எங்கேயே ஒரு புள்ளியிலிருந்து ஆரம்பித்து உயரமான இடததை அடைத்தல் என்ற சிந்தனைப் போக்கு குறைவாக உள்ளது. இதற்கு பொருளாதாரத்தில் புறநிலையில் இருந்து வரும் இனாம்கங் காரமாக இருக்கின்றன. இது மத்தியதர குடும்பத்தின் இளைஞர்களின் பொதுப் செயற்பாடாக இருக்கின்றது வறிய குடும்பங்கள் ஆதரவு ஆதாரம் ஏதும் இன்றி நசுக்கப்படும் நிலமை இருப்பது யாராலும் கவனிக்கப்படவில்லை.

நகர சுத்தி தொழிலாளர்களை மனிதர்களாக பாவிக்காத சூழலில் தற்செயலாக வீதியில் வேலையில் ஈடுபட்டவர்களை கண்டு அளவளாவியபோது படம் பிடித்த போது தமக்கு ஒரு அங்கீகாரம் கிடைத்ததாக அவர்கள் மகிழ்ந்ததை விபரிக்க முடியாது. புலவை என்ற பிரதேசத்திற்கு அப்பால் குடா நாட்டின் பல பகுதிகளிலும் பரந்து விரிந்து வாழும் இந்த மனிதர்கள் எமது சமூகத்தின் அத்யாவசியக் கூறுகள் என்பது பலராலும் உணரப்படாதது என்பது இவர்களை வேற்று மனிதர்களாக பார்க்கும் ஒருமையில் வளித்து அழைப்பதில் இருந்து அறிய முடிந்தது.
(இன்னும் வரும்…)