எந்தையும் தாயும் கூடி மகிழ்ந்த…….!(Part 2)

இலங்கையின் இரண்டு வரட்சி மாவட்டங்களில் ஒன்றான மன்னார் தனக்கே உரிய வரட்சியுடன் தோற்றம் அளித்தாலும் வளங்களையும் தனக்குள்ளே காட்டியே நிற்கின்றது. குறிப்பாக குளம் ஆறு என்று படுக்கைகள் அமைந்த பிரதேசத்தில் வெள்ளத்திற்குள் மிதந்த நெற் பயிர்கள் இன்னமும் ஈரம் இருக்கின்றது என்ற மண்வளத்தையும் மக்கள் உள்ளங்களையும் காட்டி நின்றதை உணர முடிந்தது. வழியில் மறித்து வாங்கிய பாலைப் பழமும் கச்சான் கொட்டையும் வீரப்பழமும் தேனும் தரமாக இருந்தததையும் நியாயமான விலைகளுக்குள் விற்பனை செய்த மக்களின் நேர்மையும் அவர்களின் வறுமையிற்குள் இருந்து நியாய செயற்பாடுகளும் மக்களின் மனங்களில் இவர்கள் ஈரமானவர்கள் என்பதை எடுத்தியம்பி நின்றன. என் கண்கள் கண்ணீரை வரவழைத்தது இவர்களின் பண்பு என்னுடன் பயணத்தவர்களிடம் கண்ணாடியைத் திறந்த நிலையில் செய்த பயணத்தால் வந்த தூசும் இதனால் உருவான கண்ணீரும் என்று என்னை சமாளித்துக் கொள்ள உதவியது. சிறுவயதில் பாலைப் பழத்தை சாப்பிட்டுவிட்டு பஞ்சால் வாயைத் துடைக்க வேண்டும் என்ற எம் மூத்தோரின் சிலேடைக் கதைகளை மீண்டும் மீண்டும் மீட்டெடுத்து இதழில் படாமல் நாக்கில் போட்டு சுவைத்து வாயைத் துடைக்கும் கைங்கரியத்தை தவிர்த்துக் கொண்டேன்.

மன்னார் நகரமும் 80 களில் இருந்த அபிவிருத்திநிலையில் இருந்து பாரிய முன்னேற்றங்களை வியாபார நிலையங்கள் அடையாமல் இருந்தாலும் புதிய பெயர்பலகையும் டயலொக் எயர் ரெல் என்று புதிய விளம்பரங்களை தாங்கி நிற்கத் தவறவில்லை. பஸ் நிலையம் மட்டும் இடம் மாறி இருந்தது. தமிழர்களும் முஸ்லீம்களும் கலந்து வியாபாரநிலையங்களை நடாத்தியதை அவர்களின் மொழி வழக்கிற்கில் அதிகம் அறிய முடியாவிட்டாலும் வியாபார நிலைய பெயர்பலகை மட்டும் சில இடங்களில் சுட்டிக்காட்டி நின்றது.
இனம்மாறிக் கலந்ததினால் உருவான கோவேறுகழுதை அதிகம் மாடுகளை விட வீதிகளில் அலாராக திரிவதை அவதானிக்க முடிந்தது. இவர்ரின் தொயை குறைக்க சிலவற்றை ஏனைய தமிழ் நகரங்களுக்கு கடத்தி விட்டது அரசு என்ற கதைகளையும் சிலர் கூறியே நின்றனர்.

முன்னார் நகரை கடந்து தலைமன்னாரை நோக்கிய பயணம் இன்னொரு பாலத்தை கடந்து செல்லவேண்டிய நிலையில் கடந்த போதுவற்றி நிலையில் இரந்த தரவைக் கடலும் இதனை ஒட்டிய உப்பு படையும் கண்களை கூசவே செய்தன. பேசாலையைத் தாண்டி தலை மன்னார் வரையும் கடந்த பாதைகளில் புதிதாக துளைத்திருந்து ஐஸ உற்பத்தி சாலைகள் இங்கு கடற்தொழிலின் பாரிய வளர்சிக்கு அடையாளமாக குறி காட்டி நின்றன. இந்தப் பிரதேசம் உங்கும் யுத்தத்தின் எந்த சுவடுகளையும் காண முடியவில்லை தென்னை மரங்களும் பனை மரங்களும் தலையைக் கவிழாமல் நிமிர்ந்தே நின்றன. ஊடுருவித்தாக்குதல் என்ற எந்த ‘காற்றுப் புகமுடியாத இடத்திலும் நாம் புகுவோம்’ என்’பதை பொய்பித்து நின்றது. தோராயமாக 30 கிலோ மீற்ர் வரை நீண்ட இரு புறமும் கடலால் சூழ்த பிரதேசம் கியூப நாட்டின் உல்லாசப் பயணிகளைக் கவரும் இடங்களை நினைவ}ட்டினாலும் கடற் தொழிலாளிகளின் தொழி முனையும் பரப்பாக விரிந்திருப்பது மனிதனின் அடிப்படைத் தேவைகளின் ஒன்றான உணவு உற்பத்யில் ஈடுபடும் மகத்தான பணியை மேற்கொள்கின்றது என்ற திருப்தியை எனக்கு ஏற்படுத்தியும் இருந்தது
(இன்னும் வரும்….)