எல்லாவற்றையும் இழந்துதான் போவோமா

புதிய கற்கால மனிதர்களாக தமிழ் அடையாளங்களும் தமிழ் பிராமி எழுத்துக்களும் தொடர்ந்து வந்த நாகரிக வரலாற்றில் பரந்து கிடக்கும் தொல் தமிழ் அடையாளங்களும் சோழர் காலத்தில் உருவான திருக்கரசை முதலான புராதன நகரங்கள் புதைந்து கிடக்கும் திராவிடப் பண்பாட்டுப் பூமி.

ஈழத்தின் தமிழ் பழங்குடி மக்களின் வாழ்விடங்கள் அவர்களது தனித்துவ பண்பாட்டு அடையாளங்களுடன் தொடரும் மக்கள் கூட்டத்தின் பழமை மாறா பண்பாட்டு பெரும் வரலாற்றின் வழி வந்த மூதூருக்கு அதன் தொல் வரலாற்றை சொல்லி நின்று நம் அடையாளத்தை உணர்த்தி நிற்கும் ஆதாரங்கள் நிறை நிலம்.

முத்துக் குழித்து தமிழ் பரதவரின் உலகளாவிய தொடர்புக்குரிய துறை முகமாய் பண்டைத் தமிழர் வாழ்வோடு சங்கமித்த முத்தூர் மூதூராய் உரு மாறிய வரலாறு 1300 ஆண்டுகளுக்கு முன் திருஞான சம்பந்தர் தேவாராத்தால் முன்னிறுத்திய “குரைகடல் ஓதம் நித்திலம் கொளிக்கும்”
“கரை களு சந்தும் கார் அகிற் பிளவும் “
கொட்டிக் கிடந்த முத்தூர் எனும் எம் நிலம்.

ஈழத்து தமிழ் இலக்கிய வரலாற்றில் நம் கைக்கு கிடைக்கும் நூல்களில் வைத்திய சாஸ்திர இலக்கியங்களை தவிர்த்து பார்க்கும் போது
திருக்கரசைப் புலவரால் படைக்கப் பட்ட
“திருக் கரசைப் புராணம்”
உருவான இலக்கியத்தின் செழுமை மாறா நம் நிலம்
மூதூரான முத்தூர்.

இன்று ..தமிழர் பிரதேச சபை எனும் நீண்ட கால கோரிக்கை கவனத்தில் கொள்ளப் படாமல் அரசியல் அனாதைகளான மூதூர் தமிழ் மக்கள்.