எழுக தமிழ் நிகழ்வு ஒவ்வொரு தமிழர் கட்சிகளுக்குமான ஒரு ஒத்திகை நிகழ்வு….

யாழ்ப்பாணத்தில் எழுக தமிழ் நிகழ்வு நடப்பதற்கு முன்னதாகவும் நடந்துகொண்டிருந்தபோதும் நடந்துமுடிந்த பின்னரும் பலவகையான விளம்பர சுவரொட்டிகளும் பத்திரிககைச் செய்திகளும் முகநூலில் வந்திருந்த பதிவுகளும் எதனைக் காட்டி நிற்கின்றன என்றால் அது சுய விளம்பர அரசியலாகவே காணப்படுகின்றன.

தமிழர்கள் ஒருபோதும் ஒருகுடைக்கீழ் ஐக்கியப்பட்டது கிடையாது அது வெள்ளையர்கள் முழு இலங்கையையும் சுதேசிகளிடம் ஒப்படைத்துவிட்டுப் போகும்போது தமக்குச் சார்புநிலைகொண்ட சி ங்கள தமிழ் அரசியல்த் தலைமைகளிடம் ஒப்படைத்துவிட்ட்ப்போனார்கள் அதன் பின்னரும் தமது தலையீடுகளை அவ்வப்போது செய்தவண்ணமே உள்ளனர். அன்றிருந்தே பிரிந்து செயல்ப்பட்ட நிகழ்வுகளே எமக்கு சான்றுகளாக உள்ளன. ஒவ்வொருவரும் தமது எதிர்க்கருத்துக்கொண்ட அரசியல்வாதிகளை திட்டித்தீர்த்தவண்ணமே காணப்பட்டனர். யாரும் உளச் சுத்தியோடு செயல்ப்பட்டது கிடையாது. ஆரம்பகாலம் தமிழர்மகாசபை- அதன்பின்னர் இலங்கைத்தம்ழ் காங்கிரஸ்-பின்னர் தமிழரசுக்கட்சி-தமிழர் சுயாட்சிக்கழகம் இன்னும் சிறுசிறுகட்சிகள் தமிழரிடையே பிரிவினையைத் தூண்டுவதாகவே செயல்ப்பட்டனர்.பலகருத்துக்கள் ஒரு ஜனனாயக நாட்டில் முட்டிமோதுவது ஆரொக்கியமானதுதான் ஆனால் அதுவே தமிழர் விடிவுகளுக்குத்டையாக இருக்க முடியாது.
இதற்குள் பல புலி ஆதரவாளர்கள் வன்னி இறுதிப்போரையும் எழுக தமிழ் நிகழ்வையும் பின்னிப்பிணைந்து தமது கட்டுரைகளை எழுதியிருந்தனர்.இது மீண்டும் தமிழ் மக்களை அழிவுப்பாதைக்கு இட்டுச் செல்லும் கருத்துக்களாக அமைகின்றன. தமிழரியே முற்போகு தலைமையின் தோற்றங்களை மறைக்கின்றன.மீண்டும் அந்தவகையான அழிவுப்பாதைக்கு மக்களை அழைத்துச் செல்லும் தலைமைகளை மக்கள் இனம்காண வேண்டும்.
நேற்று நடந்த எழுக தமிழ் நிகழ்விலும் ஒவ்வொரு தலைமைகளும் தமது வக்கிரங்களை வாந்திகளாக வெளிக்காடியுள்ளனர். கடந்த தேர்தலில் தமிழ்த்தேசியத்தால் நிராகரிக்கப்பட்ட திரு சுரேஸ் பிரேமச்சந்திரன் அவர்கள் தனது வக்கிரததை வாந்தியாக மக்கள்முன் வெளிக்காட்டியுள்ளார். இதனைவிட எழுகதமிழ் நிகழ்விற்காக ஊர்திகளில் பயணம் செய்த மக்களை பலாத்காரமாக வாகனத்தைவிட்டு இறங்கம்படியும் தமது அரசியல் எதிரிகளை(தமிழ்) வாய்க்குவந்தபடி திட்டியமையும் ஒருபோதும் தமிழ்மக்களிடையே இனமுரண்பாட்டிற்கான ஐக்கியம் வெள்ளிடை மலையாகவும் காணப்படுகின்றன.இன்றுவரையும் நிலம் புலம்சார்ந்த அரசியல்சக்திகள் பிரிந்து நிற்பது வேதனைக்குரிய விடயமாகும்.
இன்றுவரையும் துரோகி-தியாகி என்ற வேறுபாட்டுடன் கருத்துக்களை ஊடகங்களில் பதிவு செய்தவாறே உள்ளனர். தமிழ்த்தேசியம் துரோகிப் பட்டம் சூட்டிய சுரேஸ் இப்போது தியாகி என்றால் ஏன் மற்றவர்களும் தியாகியாகமுடியாது? தமிழ்மக்களோடு என்றுமே தொடர்புகொண்டிராதவர்களை தமிழ்மக்களின் தலைமையாக ஏற்றுக்கொள்வீர்களானால் ஏன் உண்மையான சக்திகளை தலைமையாக ஏற்றுக்கொள்ளக்கூடாது?
தமிழ்மக்களே சிந்திச்சு செயல்படுங்கள்………..

(Ganeshalingam Kanapathipillai)