கடன் சுமையிலிருந்து மீண்டு வரும் இலங்கை

(பேராசிரியர் எம்.சுனில் சாந்த) (சப்ரகமுவ பல்கலைக்கழகம்)

இலங்கை சுதந்திரம் அடைந்த போது, இலங்கையின் பொருளாதாரமானது அந்நியச் செலாவணியால் அபிவிருத்தியடைந்திருந்தது. அப்போது இலங்கையின் வெளிநாட்டு இருப்புகளின் அளவு, மூன்றரை வருடங்களுக்கு நாட்டின் செலவைத் தாங்கிக் கொள்ளுமவுக்குப் போதுமானதாகவிருந்தது. குறித்த நாட்களில், வெளிநாட்டுச் சொத்து வளங்கள் உயர் மட்டத்தில் காணப்பட்டதுடன், ஜப்பான் போன்ற நாடுகளின் பொருளாதார நிலையோடும், ஆசிய வலயத்தின் இரண்டாவது பலம்பொருந்திய பொருளாதாரமாகவும் காணப்பட்டது.

எனினும், இந்த நாட்டின் வெற்றிகரமான செயற்பாட்டால் ஏற்பட்ட பாரிய தொடர்பாடல்களுடன், அமையச் செலவுகள் அதிகரித்தன. இதன்கீழ் இலவசக் கல்வி, இலவச சுகாதாரம், நாட்டின் அடிப்படை வசதிகள் அபிவிருத்தி போன்ற செயற்றிறன் மிக்க வேலைகள் போன்று, விவசாயத்துறையை உயர்த்துவது, குளங்கள் அபிவிருத்தி போன்ற பிரிவுகளுக்கு, பாரிய நிதி, எமது நாட்டுக்குத் தேவைப்பட்டது. அதன் பிரதிபலனாக, அமையச் செலவுகள் அதிகரித்ததுடன், 1950 – 1955க்கு இடைப்பட்ட காலப்பகுதிக்குள் அந்நியச் செலாவணி குறைவடைந்தது.

இதனால், நாட்டுக்கு உணவு இறக்குமதியில் பாதிப்பு ஏற்பட்டது. தேசிய பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்காக பாரிய நிதி, மானியத்தை ஒதுக்குதல் போன்ற காரணங்களால் தேசிய பொருளாதாரத்தின் அந்நியச் செலாவணியில் சரிவு ஏற்பட்டது. இதேபோல், நாட்டின் மனித வள அபிவருத்தியில் சீனா, இந்தியா, மலேஷியா, சிங்கப்பூர், தாய்லாந்து உள்ளிட்ட கிழக்காசிய நாடுகளுள், உயர் மனித வள அபிவிருத்தியை இலக்காகக் கொண்டு செயற்படும் நிலை, இலங்கைக்கு ஏற்பட்டது. 1960களின் நிறைவில், ஏனைய பிரிவுகளை விட மனித வள அபிவிருத்தியில் பாரிய முன்னேற்றம் ஏற்பட்டிருந்தது.

இதன் காரணமாக, இலங்கைப் பொருளாதாரத்தின் விவசாயத்துறையைப் பலப்படுத்துவதற்காக பல நடவடிக்கைகள் அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்டதுடன், விவசாயத்துறை அபிவிருத்தியை இலக்காகக் கொண்டு நீர்ப்பாசனத்துறை முகாமைத்துவம், குளங்களை அமைத்தல், மீள்குடியேற்றம், விவசாயம், ஏற்றுமதிப் பயிர்ச்செய்கைகளை மேற்கொள்வதற்கு விசேட பல திட்டங்கள் நாட்டில் ஏற்படுத்தப்பட்டன. இதன்போது, பாரிய அமையச் செலவுகள் அரசாங்கத்துக்கு ஏற்பட்டன.

1970இன் தசாப்தங்களில், உலக பொருளாதார நெருக்கடியால் அந்நியச் செலாவணிப் பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க நேரிட்டது. இறக்குமதித் தடைப் பொருளாதாரக் கொள்கையின் கீழ், அந்நியச் செலாவணியைப் பாதுகாப்பதற்காக, வெளிநாட்டு இறக்குமதியைக் கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இதனால், நாட்டுக்குள் பொருட்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டது.

இந்நாட்டின் பொருளாதாரத்தில் விசேட மைல்கல்லைக் குறியாகக் கொண்டு, 1977ஆம் ஆண்டின் பொருளாதாரக் கொள்கை ஊடாக பொருளாதாரத்தை விஸ்தரிப்பதால், இறக்குமதிப் பொருளாதாரத்தை ஏற்படுத்துவதன் மூலம், எமது நாட்டுக்கு புதிய பொருளாதாரக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டது.

ஏற்றுமதிப் பொருளாதாரம் அறிமுகப்படுத்தப்பட்டதுடன், அதனூடாக விவசாயத்துறை, தொழிற்பிரிவு, சேவைகள் பிரிவு ஆகிய 3 பிரிவுகளின் கீழும், பாரிய வளர்ச்சியைப் பெற்றுக்கொள்ள நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இதன்கீழ் நாட்டின் நலன், இலவசக் கல்வி, இலவச சுகாதாரம், 40 இலட்சம் பாடசாலை மாணவர்களுக்கு இலவசமாக பாடசாலைப் புத்தகங்களையும் சீருடைகளையும் வழங்குதல், கிராம மட்டங்களில் பத்து இலட்சம், 15 இலட்சம் வேலைத்திட்டத்தின் ஊடாக நலன்புரி சேவைகள் பல ஏற்படுத்தப்பட்டன.

இதற்கு அண்மித்தவகையில், விரைந்த மகாவலி அபிவிருத்தித் திட்டத்தை இலங்கையில் அறிமுகப்படுத்துவதுடன், அதில் அரசாங்கத்தின் சர்வதேச உறவு, நட்புக் காரணமாக, இலங்கை அரசாங்கத்தின் வெளிநாட்டுக் கொள்கைத் தொடர்பாக சர்வதேசம் காட்டிய நல்ல சமிக்ஞைகளைக் காரணமாகக் கொண்டு, பெரியளவிலான அபிவிருத்தித் திட்டங்களுக்காக அடிப்படை உதவிகள், நிதி உதவிகள் பல கிடைக்கப்பெற்றன. இதன்கீழ் 30 வருடங்களிலோ அல்லது 40 வருடங்களிலோ செலுத்தி, 0.5 சதவீதத்திலிருந்து 1 சதவீதம் வரை மிகவும் குறைவான வட்டிக் கொள்கையின் கீழான நிதியைப் பெற்றுக்கொள்ளக் கூடியதாகவிருந்தது. இதனால், சர்வதேச நிதி அமைப்புகளான உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி, ஒபெக் நிதியம் உள்ளிட்ட நிறுவனங்கள், குறுகிய காலம் மற்றும் நீண்ட கால வட்டியற்ற மற்றும் வட்டியுடன் கூடிய, குறைந்த வட்டியுடனான நிதியை எமது நாட்டுக்கு வழங்கின.

விரைவான மகாவலி அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட விக்டோரியா நீர்த்தேக்கத் திட்டமானது, பிரித்தானியாவின் கொடை என்பதுடன், அதற்கென 8000 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, எமது நாட்டுக்கு வழங்கப்பட்டது. இவ்வாறு அரசாங்கம், வெளிநாட்டுக் கொள்கைகளை ஏற்றுக்கொண்டு, வெவ்வேறு நட்புறவு நாடுகள் மற்றும் சர்வதேச உறவுகளை விரிவுபடுத்தியதன் மூலம், பாரியளவிலான திட்டங்கள் பலவற்றை நாட்டுக்குள் ஏற்படுத்துவதற்கு, உலகின் ஏனைய நாடுகள் கைகொடுத்தன.

இதன்கீழ் கிடைக்கப்பெற்ற திட்டங்களாக கொத்மலை, ரன்தெனிகல, ரன்தம்பே, மாதுறுஓயா போன்ற திட்டங்கள் அமையப்பெற்றன. 30 வருடங்களில் நிறைவு செய்யக்கூடிய வகையில் திட்டமிடப்பட்டிருந்த மகாவலி அபிவிருத்தித் திட்டம் விரைவு அபிவிருத்தி திட்டமாக, 5 வருடங்களில் நிறைவு செய்வதற்கு சர்வதேச உறவுகளின் பிரதிபலனே காரணமாக அமைந்தது. இந்தத் திட்டத்தினூடாக, மகாவலி சி, பி, எச், எல் போன்ற வலயங்களை அபிவிருத்தி செய்து, ரஜரட்ட, கிழக்கின் நீர்ப்பாசனத் திட்டத்துக்காக விவசாயத்துறையை உயர்த்துவதும், நீர் முகாமைத்துவத்தை மேற்கொள்வதற்கும், 16 இலட்சம் ஏக்கர் நிலப்பரப்பில், புதிய பயிர்ச்செய்கைகளைப் பயிரிடவும் முடியுமாகவிருந்தது.

டி.எஸ்.சேனாநாயக்க காலத்திலும், அதற்குப் பின்னரான ஜே.ஆர்.ஜெயவர்தன காலத்திலும், காமினி திசாநாயக்கவால் மேற்கொள்ளப்பட்ட விரைவு மகாவலி அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் பெரிய நீர்த்தேக்கங்களை அமைத்தல், நீர் முகாமைத்துவம், நீர்பாசனத்துறையை விரிவுபடுத்தல், நீர் மின் உற்பத்தி, புதிய விவசாயக் கிராமங்களை அமைத்தல் என்பன இடம்பெற்றன. அத்துடன், புதிய நகரத் திட்டமிடல்கள் பல மேற்கொள்ளப்பட்டன. தெஹியத்தகண்டிய, கிராந்துரு கோட்டை போன்ற புதிய நகரங்கள் உருவாகின. விவசாயத் தொழிநுட்ப அறிவு, புதிய விவசாய உபகரணங்கள் போன்றவற்றை குறித்த காலப்பகுதிக்குள் பெற்றுக்கொள்ளும் வாய்ப்புக் கிடைத்தது.

பொலன்னறுவை, அநுராதபுரம், கிராந்துருகோட்டை உள்ளிட்ட பிரதேசங்கள், இதன்கீழ் அபிவிருத்தி செய்யப்பட்டதுடன், நாடு, உள்நாட்டு அரிசியால் தன்னிறைவைப் பூர்த்தி செய்யத் தேவையான அடிப்படை வசதிகள் பல அபிவிருத்தி செய்யப்பட்டதுடன், இந்நாட்டின் விவசாயிகளுக்கு சுயவாய்ப்புகள் பல உருவாக்கப்பட்டன. ஏற்றுமதி விவசாயப் பயிர்களின் அபிவிருத்தியும் இதற்கு அமைவாக நடைபெற்றது.

இதன் பிரதிபலனாக, 80ஆம் ஆண்டுகளில் இலங்கையின் இறப்பர், தென்னை, தேயிலை ஏற்றுமதித்துறையில் அபிவிருத்தி ஏற்பட்டது. அதற்கு, பெருந்தோட்டக் கூட்டுத்தாபனத்திடம் காணப்பட்ட தேயிலை உற்பத்தி, சிறுதோட்டத் தேயிலை ஏற்றுமதியாளர்களின் உற்பத்தியில் அதிகரிப்பு ஏற்பட்டது.

குறித்த காலகட்டத்தில் சிறுதோட்டத் தேயிலை உற்பத்தியின் அதிகரிப்பு அளவானது, 57 சதவீதமாக அதிகரித்துள்ளதுடன், இது இந்நாட்டின் பொருளாதாரத்தில் ஏற்பட்ட சுபீட்சமான மேம்பாடாகும்.
1977ஆம் ஆண்டு இலங்கையின் விவசாயத்துறை, 50 சதவீதம் வளர்ச்சியை அடைந்திருந்ததுடன், தொழிற்றுறையானது 10 சதவீதம் என்பதுடன், சேவைகள் 40 சதவீதமான பங்களிப்பைச் செலுத்தின.

எனினும், திறந்த பொருளாதாரக் கொள்கை ஊடாக நாட்டில் தொழிற்றறையில் அபிவிருத்தியை ஏற்படுத்தும் நோக்கில் சுதந்திர வர்த்தக வலயங்கள், கிராமிய ஆடைத் தொழிற்சாலை வேலைத்திட்டம், தேசிய முதலீட்டை ஊக்குவிக்கக் கூடிய நிவாரணத் திட்டம், தனியார் உற்பத்தித் துறைகைளில் அக்கறை காட்டுவதற்காக தொழிற்றுறைப் பிரிவுகளின் பங்களிப்பை 26 சதவீதமாக அதிகரிப்பதற்கு, பொருளாதார மீள்கட்டமைப்பு ஊடாக முடியுமானதாகவிருந்தது. இந்தப் பொருளாதார மீள்கட்டமைப்பின் பிரதிபலனாக, தேசிய அரிசி உற்பத்தியில் 100 சதவீதத் தன்னிறைவை 1995ஆம் ஆண்டு, இலங்கையால் பெறமுடிந்தது. இந்நாட்டின் அரிசித் தேவையை முழுமையாகப் பூர்த்தி செய்ய, இலங்கையின் பொருளாதாரத்தில் முடியுமாகவிருந்தது.

1994, 2005ஆம் ஆண்டுகளில் இலங்கையின் பொருளாதாரத் தொழிற்றுறை, விவசாயத்துறை ஆகியன சமனான அபிவிருத்தியால் மனித வளப் பிரிவின் வெளிநாட்டு முன்னேற்றத்தை ஏற்படுத்திக் கொள்வதற்கு அரசாங்கத்தால் நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது. என்றபோதிலும், 2005- 2015 காலப்பகுதியில் இந்நாட்டின் விவசாயத்துறையின் நெல் உற்பத்தியைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்த போதிலும், தேயிலை, இறப்பர், பெருந்தோட்ட உற்பத்தித் துறையின் அபிவிருத்தி, கவனத்தில் எடுக்கப்படவில்லை. குறித்த காலப்பகுதியில், தொழிற்றுறையில் பாரிய வீழ்ச்சி ஒன்று ஏற்பட்டது.

2010ஆம் ஆண்டுக்குப் பின்னர் கட்டுமானப் பிரிவில் முன்னேற்றம் காணப்பட்டதுடன், அதன் அடிப்படை வசதிகளின் அபிவிருத்தியானது, நாட்டின் பொருளாதாரத்தில் உற்பத்திப் பிரிவின் முன்னேற்றத்துக்கான எவ்விதத் திட்டங்களும் காணப்படவில்லை. குறித்த காலப்பகுதியில் வெளிநாட்டுக் கடனுக்காக இலங்கை பெற்றுக்கொண்ட வர்த்தகக் கடன் மூலம் வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டன. அது, பொருளாதாரத்தின் உயர் கடன் வட்டி முறையின் கீழ் செலுத்துவதற்கு, இதன் மூலம் முடியுமாகவிருந்தது.

ஒருபக்கம் உயர் வட்டி வீதங்களின் கீழான வேலைத்திட்டங்களால் நாட்டின் கடன் சுமை, மேலும் மேலும் அதிகரித்தது. நாட்டின் வருமானம், வட்டியுடனான கடனைச் செலுத்துமளவுக்குப் போதுமானதாக பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தது. சர்வதேசத் தொடர்புகளின் வீழ்ச்சியால் ஏற்றுமதியில் மட்டுப்பாடு ஏற்பட்டது. ஜி.எஸ்.பி பிளஸ் சலுகை இல்லாமல் ஆக்கப்பட்டமையால், அந்நியச் செலாவணியில் தாக்கம் ஏற்பட்டது.

இதனால், இலங்கைக்குக் கிடைத்து வந்த அந்நியச் செலாவணி குறைவடையத் தொடங்கியது. அதிக வட்டியுடனான கடனைப் பெற நேரிட்டதுடன், இதனை மீண்டும் செலுத்துவதற்கு, மீண்டும் கடன் பெற வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் பாரிய கடன் சுமைக்குள் எமது நாடு சிக்கியது.

சீனாவின் வர்த்தக வங்கிகளில் அதிக வட்டியின் கீழ் கடன் பெற்றமை, துறைமுகம், விமான நிலையம், அதிவேக நெடுஞ்சாலைகளின் அபிவிருத்திக்காக இந்த நிதி பயன்படுத்தப்பட்டமையால், கடனை அடைக்க மேலும் மேலும் கடனைப் பெற வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்த கடன் நெருக்கடியின் உச்சக்கட்டம், 2016ஆம் ஆண்டு வெளிப்பட்டது.

2015ஆம் ஆண்டு புதிய அரசாங்கமானது, ஒருபுறம் அரச பணியாளர்களின் சம்பளத்தை அதிகரித்ததுடன், எண்ணெய், எரிவாயு (காஸ்) உள்ளிட்ட பொருட்களின் விலைகளை நியாய விலைப்படுத்தியமையால், அரசாங்கம் பொருளாதார ரீதியில் பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்தது. வெளிநாட்டு இருப்புகளின் கடினமான பிடியின் மத்தியில், இலங்கைப் பொருளாதார முகாமைத்துவத்தை மேற்கொள்ள அரசாங்கம், பொருளாதார நடவடிக்கைகள் பலவற்றை மேற்கொள்ள நேரிட்டது.

கடந்த காலங்களுக்குள், இலங்கையின் உற்பத்திப் பொருளாதாரம் முன்னேற்றம் காணாத நிலையில், தொழிற்றுறைப் பிரிவிலும் பாரிய சரிவு நிலை ஏற்பட்டிருந்தது. இதனை முகாமைத்துவம் செய்ய, அரசாங்கம் இணங்கியது. வெளிநாடுகளிலிருந்து கடன்களைப் பெறுவதற்குப் பதிலாக, வெளிநாட்டுத் திட்டங்களையும் முதலீடுகளையும் பெற்று, நாட்டுக்குள் விசேட பொருளாதார வலயத்தை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுத்தது.

உலகின் அபிவிருத்தியடைந்த நாடுகள் கடைப்பிடிக்கும் பொருளாதாரக் கொள்கைகளான BOO (உருவாக்கம், நடைமுறைப்படுத்தல், உரிமையை உறுதிப்படுத்தல்), BOT (உருவாக்கம், நடைமுறைப்படுத்தல், ஒதுக்கீடு) போன்ற திட்டங்கள் மூலம் தென்கொரியா, இந்தியா, சீனா, மலேஷியா, தாய்லாந்து போன்ற நாடுகள் வேகமான அபிவிருத்தியை நெருங்கியுள்ளதுடன், குறித்த நாடுகளை முன்னுதாரணமாகக் கொண்டு, தேசிய, சர்வதேச முதலீடுகளைப் பெறுவதற்கு அரசாங்கம் கவனம் செலுத்தியதுடன், இதன்மூலம் நாட்டின் பொருளாதாரத்தைப் பலப்படுத்துவதற்கு எதிர்பார்த்தது.

நாட்டின் வேலைவாய்ப்பு, வரிக் கொள்கைத் திருத்தத்தை மேற்கொள்ளல், நிதிச் சந்தையை நவீனப்படுத்தல், வங்கியையும் காப்புறுதியையும் நவீன மயப்படுத்தல் போன்றவற்றின் ஊடாக, பொருளாதாரத்தை முகாமைத்துவம் செய்ய முடிந்தது.

பொருளாதார வளர்ச்சி வேகத்தை, 6 சதவீதம் என்ற அளவில் 10 ஆண்டுகளுக்குக் கொண்டு செல்ல முடியுமானால், இலங்கையானது தென்னாசியாவில் மட்டுமல்ல, கிழக்காசியாவிலும் பலமான பொருளாதாரத்தைக் கொண்ட நாடாக முன்னோக்கி வரும் என நம்பிக்கை, இலங்கையர்கள் மனதில் ஏற்படவேண்டும்.