கடலுடன் கலக்கும் ’எழுபது இலட்சம்’

(காரை துர்க்கா)

கொரோனாவும் அது தொடர்பிலான நிகழ்காலம், எதிர்காலத் தாக்கங்கள் குறித்து, ஊடகமொன்றுக்குக் கருத்துத் தெரிவித்திருந்த கொழும்பு பல்கலைக்கழக பொருளியல்த் துறைப் போராசிரியர் கோபாலபிள்ளை அமிர்தலிங்கம், ”ஒரு வருடத்தில் சுமார் 70 இலட்சம் ஏக்கர் கனஅடி மகாவலி நீர், திருகோணமலை, கொட்டியாரக்குடாக் கடலில் கலக்கின்றது” எனத் தெரிவித்திருந்தார். அதாவது, மலையகத்தில் ஊற்றாகி வருகின்ற இந்தச் சொத்து (நன்னீர்) வீணே எவ்வித பிரயோசனமும் இன்றி கடலுடன் சங்கமமாகின்றது.