காங்கிரசின் ரம்யா ஹரிதாஸ்

இதற்கு 48 ஆண்டுகளுக்கு முன்பு,
கடந்த 1971-ல் அடூர் (தனி) தொகுதியில்,
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (CPI) சார்பில் போட்டியிட்டு வென்ற பார்கவி தங்கப்பன்தான் கேரளத்தின்
முதல் தலித் பெண் எம்.பி.
என்ற பெருமைக்குரியவர்.

இந்த மக்களவைத் தேர்தலில்,
இந்தத் தொகுதியின் எம்.பி.யாக இருந்த மார்க்சிஸ்ட் கட்சியின்
பி.கே. பிஜுவை எதிர்த்துப் போட்டியிட்ட
ரம்யா 1 லட்சத்து 58 ஆயிரத்து 968 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறார்.

கோழிக்கோடு மாவட்டத்தில்
ஒரு சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவர் ரம்யா. இவரது தந்தை ஒரு
தினக் கூலித் தொழிலாளி.
தாய் ஒரு டெய்லர்.

சாதாரணக் குடும்பத்தில் பிறந்தவள் என்பதால் மக்களின் தேவைகளையும் விருப்பங்களையும் நன்கறிவேன் என்கிறார் இவர் .

கவிதை வாசிப்பது, பாடல் பாடுவது,
நடனம் ஆடுவது – இந்த இளம் பெண் வேட்பாளரின் பிரச்சாரத்தில் மக்களைக் கவர்ந்த தனிச் சிறப்புகள்.

கோழிக்கோடு மாவட்டம் குன்னமங்கலம் பஞ்சாயத்து தலைவராக இருநத ரம்யா, வேட்பாளராக நிறுத்தப்படுவார் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை. அவருக்கேகூட இது ஆச்சரியம்தான்.

இவர் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் நேரடித் தேர்வு என்று சொல்லப்படுகிறது.

நாட்டிலேயே மிகக் குறைந்த சொத்து
மதிப்புள்ள வேட்பாளர்களில் இவரும் ஒருவர்.

இவருடைய சொத்து மதிப்பு –
22 ஆயிரத்து 816 ரூபாய்.


ஆதாரம்-

`தி நியூஸ் மினிட்’ இணையச் செய்தி இதழில்
நீத்து ஜோசப் செய்திக் கட்டுரை.

நடராஜன் ரெங்கராஜ்
Natarajan Rengaraj

பதிவிலிருந்து.

கொசுறுச் செய்தி |

நாட்டிலேயே பிஹார் பெகுசராய்
கம்யூனிஸ்ட் வேட்பாளர்
கன்னையா குமாருக்கு அடுத்தபடியாக
CROWDFUNDING முறையில்
தேர்தல் செலவுகளுக்கான
பணத்தை பொதுமக்களிடம்
பெற்றவர் ரம்யா!