கேப்பாபுலவு மக்களின் போராட்டத்துடன் தமிழர் சமூக ஜனநாயகக் கட்சியினர்(SDPT)

தமிழர் சமூக ஜனநாயகக் கட்சியின் உறுப்பினர்கள் தொடர்சியாக கேப்பாபுலவு மக்களின் போராட்டத்துடன் இணைந்து செயற்பட்டுவருகின்றனர். தமது கட்சியை மன்னிலைப்படுத்தாது அந்த மக்களுடன் மக்களாக இணைந்து போராட்டத்தில் ஈடபட்டுவருகின்றனர். அங்கிருந்து எமது நிருபருக்கு வழங்கிய தகவல்களின் அடிப்படையில்: குடும்பம் ஒன்றிற்கு கால் ஏக்கர் படி வழங்கப்பட்ட காணிகளில் 83 குடும்பங்கள் வசித்து வந்ததாக கேப்பாபுலவு பிலகுடியிருப்பில் வசித்த மக்கள் தெரிவித்தனர். தமது காணிகளை விடுவிக்குமாற கோரி போராடிவரும் இவர்கள் தமது காணிகளுக்கான அனுமதிப்பத்திரமும் சட்டப்படி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

யுத்தம் காரணமாக 2008 இல் இடம்பெயர்ந்து வேறிடங்களுக்கு சென்றுள்ளனர். இப்போது விமானப்படையினரின் முகாம் அமைக்கப்பட்டிருப்பதால் சொந்த இடத்திற்கு திரும்ப முடியாத நிலையில் உள்ளனர். இவர்களில் 30 பெண்தலைமைத்துவ குடும்பங்கள் உள்ளதாகவும்இ க.பொ.த சாதாரண தரம் உட்பட பாடசாலை செல்லும் மாணவர்கள் 53 பேர் உள்ளதாகவும்இ யுத்த காலத்தில் காயமடைந்தவர்கள் 24 பேர் உள்ளதாகவும் 15 குடும்பங்கள் குடும்ப உறுப்பினர்களை இழந்திருப்பதாகவும் தெரிவிக்கின்றனர். இத்தனை துயரங்களுக்கு பின்னரும்இ யுத்தம் முடிவுற்று பல வருடங்கள் கடந்தும் தமது சொந்த வீடுகளில் மீளக்குடியமர முடியவில்லை என்ற கவலை அவர்களின் உரையாடல்களில் வெளிப்பட்டது. தாம் சொந்த இடத்திற்கு திரும்பாததால் மீளக் குடியமர்பவர்களுக்கு அரசாங்கம் வழங்கும் 25000 ரூபா பணம் இன்று வரை வழங்கப்படவில்லை எனவும், சமூர்த்தி உதவி திட்டத்தில் தமது பெயர்கள் உள்ளடக்கப்படாமலிருப்பதாகவும் பிலவுகுடியிருப்பில் விமானப்படை முகாம் முன்பாக தமது காணிகளை விடுவிக்க போராடிவரும் வயதான தாயார் ஒருவர் குறிப்பிட்டார்.

இதே போன்று புதுக்குடியிருப்பு நகரை அண்டி பிரதேச செயலகத்திற்கு முன்னால் பிரதான வீதிக்கு அருகாக உள்ள 49 குடும்பங்களின் 19 ஏக்கர் காணி மற்றும் நல்ல நிலையில் உள்ள வீடுகள் இராணுவத்தினர் வசம் உள்ளதாகவும் தாம் தமது குடியிருப்புக்களை சூழவுள்ள பகுதிகளில் வாடகை வீடுகளில் வசித்து வருவதாகவும் மனவருத்தத்துடன் கூறினர். பல தடவை தமது இடங்களை விடுவிக்குமாறு கோரிக்கைகளை முன்வைத்து வந்ததாகவும் தமக்கு வாக்குறுதி அளித்தபடி தமது வீடுகள் இதுவரை விடுவிக்கப்படவில்லை என்றும் கவலையுடன் தெரிவித்தனர்.

சுழற்சி முறையில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள இவர்கள் தமது வீடுகளில் தாம் குடியிருக்க அனுமதிக்கப்படும் வரை தமது போராட்டம் தொடரும் எனவும் தெரிவித்தனர்.