கொழும்பு – (1)

உலகத்தையே உலுக்கியெடுத்துள்ள கொழும்பு தொடர் குண்டுவெடிப்பு தாக்குதல்களை தடுப்பதற்கு முப்படைத்தளபதி என்ற வகையிலும் பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையிலும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்ற மிகப்பெரிய அழுத்தம் உள்ளுரிலும் உலக அளவிலும் ஜனாதிபதி மைத்திரி மீது விழுந்திருப்பதையடுத்து அவர் இந்த நடவடிக்கையை எடுப்பதற்கு தலைப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

மைத்திரியின் இந்த நடவடிக்கையானது தற்போது நாட்டில் ஏற்பட்டிருக்கும் சூழ்நிலையை தணிப்பதற்கு மேற்கொள்ளக்கூடிய – நியாப்படுத்தக்கூடிய – காரியமாக மாத்திரமல்லாமல் அரசியல் ரீதியாகவும் அவருக்கு பயன்கொடுக்கக்கூடும் என்று கொழும்பு வட்டாரங்கள் – 360 பாகையிலும் திரும்பி – எழும்பி – குனிந்து – காரணங்களை கூறுகின்றன.

ஜனாதிபதி மைத்திரி தனது இந்த முடிவை கோடி காட்டும் வகையில் நேற்றைய தினமே – அடுத்த 24 மணி நேரத்தில் நாட்டின் பாதுகாப்புத்துறையின் உயர்மட்டங்களில் முக்கிய மாற்றங்களை கொண்டுவரவுள்ளதாக கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஆனால், இந்த புதிய நகர்வு எதிர்க்கட்சி தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மகிந்தவுக்கு விருப்பத்துக்குரியதாக இல்லை என்றும் அதன் விளைவுகளை நேற்றைய தினம் நாடாளுமன்றத்திலேயே காணக்கூடியதாக இருந்ததாகவும் அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நேற்று நாடாளுமன்றத்தில் மகிந்த ஆற்றிய உரையின்போது – என்றுமில்லாதவாறு அவர் சரத் பொன்சேகாவின் முன்னாள் பணிகளை பெருமையுடன் பாராட்டியதையும் பொன்சேகா சிறை சென்றதில் தனக்கு உடன்பாடிருந்திருக்கவில்லை என்பதை மறைமுகமாக அவருக்கு உணர்த்தும் பாணி உரையில் ஒட்டியிருந்ததையும் அந்த வட்டாரங்கள் சுட்டிக்காட்டின.

எல்லாவற்றுக்கும் மேலாக நாடாளுமன்றத்தில் நேற்று மகிந்த உரையாற்றிக்கொண்டிருந்தபோது அவர்கள் கைகள் நடுங்கியபடியே இருந்தன என்று அருகிலிருந்து அவதானித்தவர்கள் குறிப்பிட்டார்கள்.

நேற்று அவருக்கு மாத்திரம்தான் நடுங்கியது, நாளையிலிருந்து ……..?????