சத்தியாகிரகத்தின் அடையாளம் மகாத்மா காந்தி

இந்திய சூழலுக்கு ஏற்ப காலனி ஆதிக்கத்தில் இருந்து இந்தியாவையும் இன்ன பிற இலங்கை போன்ற நாடுகளையும் விடுபட போராட்டங்களை நடாத்திவர். இந்தப் போராட்டத்தில் பல்வேறுபட்ட தலைவர்கள் பங்களிப்பை தியாகங்களை செய்திருந்தாலும் இந்திய சுதந்திரப் போராட்டத்தின் அடையாளமாக காணப்பட்டவர் மகாத்மா காந்தியே. இதனால் தான் இன்று அவர்எவரகளுக்கு எதிராக போராடினாரோ அவர்களெ அவரது 150 வருடத்தை நினைவு கூருகின்றனர். உள்ளுரில் பாஜக வும் உலக நாடுகளில் அமெரிக்க பிரித்தானியாவும் நிகழ்வுகளை நடாத்தி அவரின் பெருமை பேசுகின்றனர்.

முதலாம் உலகப் போருக்கும் இரண்டாம் உலகப் போரிற்கும் இடைப்பட்ட காலகட்டமும், பிரித்தானிய ஏகாதிபத்திய எதிரான போராட்ட காலகட்டத்தில்தான் முதலாளித்துவத்திற்கு எதிரான பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை நிறுவுதல் இதன் முதற்படியாக சோசலிச அரசை நிறுவுதல் தொடர்ந்த இதன் ஓட்டத்தில் கம்யூனிசம் என்ற சமத்துவ சகவாழ்வை உலகில் நிறுவ போராட்டங்கள் இதற்கான இயக்கங்கள் தலமைகள் ஏற்பட்டு வந்தன. இந்தத் தாக்கம் இந்தியாவிலும் ஏற்பட்டே இருந்தன.

இந்திய தேசத்தின் விடுதலை போராட்டம் பாட்டாளி வர்கத்தின் தலமையில் வெற்றி பெற்றிருக்கக் கூடாது என்பதே முதல்குறியாக அன்று பிரித்தானிய அமெரிக்க முதலாளித்துவ ஏகாதிபத்திய சிந்தாந்த நாடுகளின் முதன்;மையாக போராட்டத்தை அடக்குதல் என்பதில் இருந்தது. இதிலும் சிறப்பாக மிகப் பெரிய ஜனநாயக நாடாக பரிமாணம் பெறக் கூடிய இந்தியாவில் ஏற்படக் கூடாது என்பதில் அவர்களின் காய் நகர்தலுக்கு சரியான தெரிவாக அமைந்தவர் காந்தி. முதலாளித்துவத்தின் இந்த சிந்தனைச் செயற்பாட்டடை மீறி தமது போராட்ட பயணத்தில் லெனினைத் தொடரந்து ஸ்ராலின் மாவோ ஹோசிமின் போன்றவர்கள் இருந்தததையும் இங்கு சீர்தூக்கி பார்க்க வேண்டும்.

இந்திய சுதந்திரப் போராட்டத்தின் வெற்றி இந்தி கம்யூனிஸ்ட்டுகளின் தலமையில் நடைபெற்று வெற்றி பெற்றிருந்தால் இன்று உலக ஒழுங்கு பெரு வீச்சில் சமத்துவ சக வாழ்வை உருவாகி இருக்கும். இந்தியாவில் இன்றைய பன்முகத்தன்மையை குழிதோண்டிப் புதைக்கும் இந்துவத்துவாவும் ஏன் இலங்கையில் உள்ள பௌத்த சிங்கள மேலாதிக்கமும் உயிர்வாழ்ந்திருக்க முடியாது. இந்தி சுதந்திரப் போராட்ட வெற்றி பிரித்தானிய முதலாளிகளிடம் இருந்து இந்திய தேசிய முதலாளிகளிடம் கை மாறிற பெரும் போக்கே உருவாவதற்கான சூழலை பரித்தானிய முதலாளித்துவம் மிகக் கவனமான செய்து விட்டு போய் இருக்கின்றது. இது போலவே இலங்கையிலும் நடைபெற்றது.

இந்த வகையில் நான் ராகுல் சாங்கிருத்தியாயன் இன் ‘வால்காவிலிருந்து கங்கை வரை” என்ற புத்தகத்தில் காந்தி பற்றி கூறி கருத்துடன்தான் ஓத்துப் போக முடிகின்றது. ஆனாலும் இவற்றையெல்லாம் மீறி மாபெரும் மக்களை அணிதிரட்டி காலனி ஆதிக்திற்கு எதிராக போராடிய காந்தியின் பொறி முறையை நான் பார்த்தும் வியந்தும் நிற்கின்றேன்.