சுதந்திரம்

இந்த சுதந்திரத்தை நாம் கொண்டாடியே ஆக வேண்டும். இது போலவே இன்றும் தமிழர் பிரிச்சனைகளைத் தீர்ப்பதற்கு மேற்குலத்திடம் மட்டியிடுவது அதுவும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தை நம்பும் தமிழ் வலதுசாரித் தலைமைகளின் போக்கும் இதற்கு ஆதரவாக இன்றைய இலங்கை அரசிற்கு முட்டுக் கொடுப்பதான செயற்பாடும் எந்த வகையிலும் ஏற்புடையது அல்ல. நாடு விடிவிப்பில் இருந்து இன்று காணி விடிவிப்பு போராட்டம் என்றதாக மாறிய போராட்டமாக இருக்கட்டும் காணாமல் போனவர்கள் இது ஆயுதப் போராட்டம் ஆரம்பித்த காலத்தில் இருந்து இன்றுவரை காணாமல் போனவர்களை தேடிப்பிடிக்கும் போராட்டமும் நியாயமானவை இதற்காக நாம் இணைந்து போராட வேண்டும்.

இதற்கு எமக்கு பதில் கூற வேண்டியவர்கள் முக்கியமாக இரு தரப்பினர். ஒருவர் இலங்கை அரசாங்கம் மற்றைய பகுதியினர் ஏனைய விடுதலை அமைப்புகள் சிறப்பாக விடுதலைப் புலிகள். இதற்காக பிரித்தானிய ஏகாதிபத்தியத்திடம் இருந்து எமக்கு கிடைத்த சுதந்திரத்தை மறுப்பது எதிர்பது சித்தாந்த ரீதியில் பிழையானதும் எமது பிரச்சiயை திசை திருப்புவதாகவுமே அமையும். ஏகாதிபத்திய எதிர்பும் இதில் இருந்து விடுதலை பெறுதலும் எமக்கான சுதந்திரத்தின் ஒரு வடிவங்களே. எனவே எமது ‘முதல்” முதலில் சுதந்திரத்தை கொண்டாடுவோம்