டயறிக் குறிப்பு: யாழ்ப்பாணத்தில் யூதர்கள்.

(AS Kantharajah)

நாவற்குழியின் பழைய பெயர், சாவாங்கோட்டை!
நாவற்குழிச் சந்தியிலுள்ள எனது மனைவியின் சீதணக் காணி உறுதியிலும் ‘தென்மராட்சிப் பகுதி நாவற்குழி கோவில்ப்பற்று, சாவாங்கோட்டை மணற்காடு’ என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் நாவற்குழிக்கு ‘சாவாங்கோட்டை’ என்ற பெயர் எப்படி வந்தது? என நாற்குழியில் பிறந்த கவிஞர் அம்பியிடம் கேட்டேன்.