தண்டி யாத்திரையும் தண்டிக்கப்பட்டவர்களுக்கான யாத்திரையும்

இதற்கு இலங்கை அரசுத் தரப்பில் அப்படி யாரும் தங்களிடம் இல்லை என்று ‘தைரியமாக” பதிலளித்த பின்பும் இந்தப் பதில் போதாது இதற்கு மேலாக அரசு பொறுப்புக் கூற வேண்டும் என்று போராடுவதும் நியாயமானதான். கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் புனர்வாழ்வுப் பயிற்சிக்கு பின்பு விடுதலை செய்யப்பட்டுவிட்டனர். தற்போது தம்மிடம் யுத்தம் முடிவடைந்து நாட்களில் யாரும் கைது செய்தவர்கள் என்ற வகையில் இல்லை என்பது ஒரு அவலச் செய்தியையும் சொல்லித்தான் நிற்கின்றது. அது திரும்பிவராதவர்கள் மரணத்தை தழுவிவிட்டனர் என்பதுதான.; மிகவும் வலி நிறைந்த செய்திதான.; இதனால் உறவுகளுக்கு எற்பட்டிருக்கும் வலி ஒரு தாங்கொணத் துயரம்தான்.

ஆனாலும் இதன் தொடர்சியாக இது தொடர்பான ஒரு பதிவை செய்துதான் ஆகவேண்டும் என்பதினால் தொடர்கின்றேன். இனி வரும் தொடர்ச்சி என் மீது சிலருக்கு ஏற்புடமையாமை ஏற்படுத்தலாம் ஆனாலும் யதார்தங்களை அறம் சார்ந்து கூறி நிற்க விளைகின்றேன்.

இந்திய சுதந்திரப் போராட்டத்தில் தண்டி நடைப்பயணம் வரலாற்று முக்கியத்துவம் பெற்றது. மார்ச் 12, 1930 இல் குஜராத்தில் உள்ள தண்டியில் தடையை மீறி சுதேசிய உற்பத்தியான உப்பிற்கு வரி செலுத்த ஆங்கிலேயருக்கு மறுத்து அறவழியில் நடைபெற்ற போரட்டம் ஆகும்.

இந்திய மக்களை ஒரு கொள்கையின் கீழ் இணைக்கும் மாபெரும் செயற்பாட்டை இந்த நடைப் பயணம் செய்தபடியால் இது வரலாற்றுப் முக்கியத்துவம் பெற்நுக் கொண்டது. இந்த நடைபயணமே இந்திய சுதந்திரப் போராட்டத்தை விரைவுபடுத்தும் செயற்பாட்டிற்கும் வழிகோலியது எனலாம்

ஒரு போராட்டத்தில் சகல மக்களையும் தேசம் சார்ந்து இந்திய மக்கள் என்ற தேசியம் சார்ந்து இணைப்பதில் வெற்றி கண்டுள்ளதே இந்த மாபெரும் போராட்டம் வெற்றி பெற்றமைக்கான முக்கிய காரணமாக அமைந்து என்றால் மிகையாகாது.

இலங்கையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் போராட்டத்திற்கு ஆதரவ சேர்க்க கனடாவில் நடைபெறும் தலைநகரை நோக்கிய பயணம் வெற்றிகளை குவிக்குமா என்றால் இங்கு கேள்விகள் பலவும் எழுந்து நிற்கின்றன. இதே போல் திலீபனின் நினைவுதினத்தில் ஆரம்பித்து சகலரையும் இணையுங்கள் என்ற நடைப் பயணம் முன்னோக்கி நகருமா என்பதையும் இதனுடன் இணைத்துப்பார்க்கலாம். முதலில் இந்தப் போராட்டங்களை நடாத்துபவர்கள் சகல மக்களையும் ஒருங்கிணக்கக் கூடிய செயற்பாட்டை தம்மிடையே உடையவர்கள் அல்ல என்பது இங்கு கேள்விகளை எழுப்பி நிற்கின்றது.

இரண்டாவது இவர்கள் முன் வைக்கும் போராட்டம் 1989 மே மாதம் இறுதி யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருக்கையில் இலங்கை அரச படையிடம் புலிகளிடம் இருந்து தப்பி சென்று சரணடைந்தவர்கள் பற்றியது. அல்லது யுத்த முடிவில் அரசபடையினார் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டவர்கள். இதில் அனேகர் தமிழீழ விடுதலைப்புலிகளின் உறுப்பினர்கள் ஆதரவாளர்கள் இங்கு ஒரு பகுதி பொது மக்களும் அடங்குவர்;. புனர்வாழ்வளிகப்பட்ட பொதுமக்கள் பலரும் விடுதலை செய்யப்பட்டுவிட்டனர் என்று இலங்கை அரசு கூறுவதற்கு அப்பால் புள்ளி விபரங்களும் அதனை காட்டி நிற்கின்றது.

இந்த சம்பவத்திற்கு முன்பு இரு வெவ்வேறு காலகட்டங்களில் கைது செய்து காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் மிகப் பெரிய அளவில் நடைபெற்றன. ஒன்று 1986 ம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் ரெலோ என்ற அமைப்பின் மீதான ஆயுதத் தாக்குதலை தொடுத்து அவர்களின் செயற்பாட்டை தடை செய்ததில் இருந்து ஆரம்பித்து இதே ஆண்டு டிசம்பர் மாத நடுப் பகுதிகுள் ஏனைய விடுதலை அமைப்புகளையும் இதே மாதிரி தடை செய்ய போது அவ் விடுதலை அமைப்பினரை கைது செய்தும் அவர்களது தீவிர ஆதரவாளர்களையும் பொது மக்களையும் கைது செய்து தமது சிறைகளில் அடைத்தனர். இவர்களில் மிகச் சிலரே விடுதலை செய்யப்பட்டனர். கந்தன் கருணை உட்பட்ட பல்வேறு சம்பவங்களில் அவர்களில் பலரும் கொல்லப்பட்டும் காணாமலும் ஆக்கப்பட்டுவிட்டனர்

இரண்டாவது 1990 இல் இந்திய சமாதானப் படை இலங்கையில் இரந்து விலக்கிக் கொள்ளப்பட்ட போது இலங்கை இந்திய ஒப்பந்தம் 13 வது திருத்தச் சட்டத்தையும் இதனால் உருவான இணைந்த வடக்கு கிழக்கு மாகாண சபையையும் எற்றுக் கொண்ட அரசியல் கட்சிகளின் உறுப்பனர்கள் அவர்களின் ஆதரவாளர்கள் ஏனைய மகாணசபை நிர்வாகத்தில் பங்கெடுத்தவர்கள் என 3000 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்

இவர்களை சிறையில் அடைப்பதற்கென உருவாக்கப்பட்டதுதான் துணுக்காய் வதை முகாம். துணக்காயில் அமைந்திருந்து நெற் களஞ்சியசாலையை தமழீழ விடுதலைப் புலிகள் கையடகப்படுத்தி உருவாகப்பட்டது இந்து வதை முகாம். இந்த முகாமில் அடைக்கப்பட்டவர்;களில் 150 குறைவானவர்களே இந்து முகாம் இலங்கை அரசால் கைபற்ற முயன்றி நிகழ்வில் தப்பியவர்களா அறியப்பட்டனர். ஏனையவரகள் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் வரிசையில் அவர்கள் புலிகளினால் கொல்லப்பட்டதாக அறிய முடிகின்றது.

இவ்விரு முக்கிய நிகழ்வுகளில் காணமால் போனவர்களை தற்போதைய பாஷையில் கூறுவது என்றால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களையும் விடுவிக்க கோரி அல்லது இதற்கான நியாயங்களை வழங்கவும் கோரி இந்த போராட்டம் முன்னெடுகப்பட்டால் இன்றைய நடைப் பவனியிற்கு ஒரு அர்த்தம் இருந்திருக்கும். ஒரு பரந்துபட்ட மக்களை அணி திரட்டி பலமான ஒரு போராட்டமாக பரிணமிக்க வாய்புகள் ஏற்பட்டிருக்கும்

1989 மே மாதம் வரையும் தமிழர்களில் பெரும் பகுதியினர் தமிழர்களாலேயே வலிந்து காணாமல் ஆக்கபட்டவர்களுக்கான பதிலைக் கூற வேண்டியவர்களே; இந்த நடைப் பயணத்தை ஏற்பாடு செய்து செயற்படுவதினால் அவர்கள், பதில் கூற வேண்டிய தமது பொறுப்புகளை தட்டிக் கழித்து செயற்படுத்துவதாகவே பார்க்கப்பட வேண்டியுள்ளது

மகாத்மா காந்தியின் தண்டி நடை பயணமும் கனடா ஒட்டவா நோக்கி தண்டிக்கப்பட்டவர்களுக்கான நடைபயணத்திற்கும் இடையேயான முக்கிய வேறுபாடு முதலாவது முழு இந்திய மக்களுக்கான போராட்டமாக அது பரிணாமம் பெற்று இருந்தது. தற்போதைய நடைப் பயணம் ஒரு சாரரை காணமல் போனவர்களில் பட்டியலில் இருந்து தவிர்த்துவிட்டு செயற்படும் போராட்டமாக காணப்படுகின்றது.

இங்கு ஈழவிடுதலைப் போராட்டத்தில் காணமல் ஆக்கப்பட்ட சகலருக்குமான போராட்டம் என்ற வடிவத்திற்கு இது விஸ்தரிக்கப்பட்டால் அது ஒரு மாபெரும் சக்தியாக நியாதாதிக்கம் நிறைந்து போராட்டமாக இருப்பதற்கு அப்பால் சர்வ தேச சமூகம் தனது தார்மீக ஆதரவை இப்போதாவது வழங்குவதற்கு வாய்புகளை ஏற்படுத்தலாம் என்ற எதிர்பார்க்கலாம்.

யுத்தம் உச்ச நிலையில் இருந்த போது சர்வதேச சமூகத்திடம் நாம் பெற்றிருக்குவேண்டிய தார்மீக ஆதரவை பெறமுடியாமல் போனதற்கு 1986 டிசம்பர் தொடக்கம் 2009 மே மாதம் இடையிலான யுத்தத்தத்தை நடாத்திக் கொண்டு விடுதலை கோரியவர்களினால் மாற்றுக் கருத்தாளர்கள் மீது செயற்படுத்திய மனித உரிமை மீறல்கள் முக்கிய காரணியாக அமைகின்றது

வியட்நாம் விடுதலைப் போராட்டதில் அவர்கள் பெற்றிருந்து சர்வதேச சமூகத்தின தார்மீக ஆதரவை போன்று நாம் பெறத் தவறவிட்டு விட்டோம். வெறும் இராணுவ வெற்றிகளும் முகாம் தகர்ப்புகளும் எமக்கான விடுதலையை பெற்றுத்தர மாட்டாது. மாறாக எமது போராட்டத்தில் இருக்கும் நியாதன்மையை மனித நாகரீகங்களுக்கு உட்பட்ட பரந்துபட்ட மக்களின் இணைவுடன் நடாத்தியிருக்க வேண்டும். மாறா பாசிச் செயற்பாட்டின் வடிவங்களே தமிழர் தரபில் அன்று கோலோச்சி நின்றன.

இவற்றை இன்றைகாவது திருத்திக்கொள்ளத் தயார் இல்லை என்றால் தண்டியை ஒட்டவா நடைபயணம் நெருங்கவே முடியாது

தவறுகளில் இருந்து பாடங்களை கற்றுக் கொண்டு அனைத்து தரப்பினரையும் ஒருங்கிணத்து ஈழவிடுதலைப் போராட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் அனைவருக்குமான போராட்டதை முன்னெடுப்போம். அது இலங்கை அரசால் ஏற்படுத்தப்பட்டிருந்தாலும் சரி… தமிழீழ விடுதலைப் புலிகளால் ஏற்படுத்தப்பட்டதாக இருந்தாலும் சரி ஏன் ஏனைய விடுதலை அமைப்புகளால் ஏற்படுத்தப்பட்டதாக இருந்தாலும் சரி சகல தரப்பின் எல்லாக் காலத்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டங்களாக விரிவுபடுத்தப்பட வேண்டும்.

இவற்றிற்கு நாம் தயார் என்றால் புதிய ‘தேசியத் தலைவராக” விக்னேஸ்வரனை ஏற்று நாம் மீண்டும் உசுப்பேத்தலுக்கு உள்ளாக வேண்டிய தேவை ஏற்படாது.

(Thank you: http://sdptnews.org)