தந்தை செல்வா அவர்களின் 120வது பிறந்த நாள் நினைவு தினம்

(அருளம்பலம் விஜயன்)
தந்தை செல்வநாயகம் என்று அறியப்பட்ட சாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகம் ள.த.எ.செல்வநாயகம் அவர்கள் 31.3.1798 அன்று மலேசியாவில் உள்ள ஈப்கோ நகரில் பிறந்தார்.
இலங்கைத் தமிழ் அரசியல் வாதியாக,வழக்கறிஞாரக,நாடாளுமன்ற உறுப்பினராக,இரண்டு தசாப்பதங்களுக்கு மேலாக இலங்கைத் தமிழர்களின் அரசியல் தலைவராகவும் இருந்தார்.
தந்தை செல்வா அவர்களின் தகப்பனார் ஆசிரியராக யாழ்பாணம் தொல்புரத்தில் கடமையாற்றிக்கொண்டிருந்தார்.அவர் மலேசியாவுக்கு இடம்பெயர்ந்து அங்கு வர்த்தக தொழில் ஈடுபட்டு வந்ததார்.மலேசியாவின் ஈப்கோ நகரில் முதலில் குடியேறிய அவர்கள் பின்னர் அங்குள்ள தைப்பிங் நகரில் வசித்து வந்தனர்.


தனக்கு நான்கு வயதாக இருக்கும் போது தாய்,சகோதரார்களுடன் இலங்கைக்கு திரும்பினார்.தெல்லிப்பளையில் வாழந்து வந்த அவர் தனது ஆரப்பக்கல்வியை தெல்;லிப்பளை யூனியன் கல்லூரியிலும் பின்னர் யாழ்ப்பாணம் பரியோவான் கல்லூரியிலும் கற்றார்.பின்னர் லண்டன் பல்கலைக்கழகத்தின் வெளிவாரி மாணவராக படித்து தனது 19வயதில் அறிவியல் இளமானி பட்டம் பெற்றார்.படிப்பு முடிந்தவுடன் புனித தோமையார் கல்லூரியில். ஆசிரியராகவும்; பணிபுரிந்தார்.இவர் புனித தோமையார் கல்லூரியில் படிக்கும் போது குறிப்பிட தக்கவர்களில் பின்னாளைய பிரதமர் சாலமன் பண்டாரநாயக்காவும் ஓருவர்.

யாழ்பாணத்தில் வாழ்ந்த அவரது சகோதரர் கடுமையான சுகயீனம் உற்றிருக்கிறார் எனக் கேள்விப்பட்டு உடனடியாக போய்ப் பார்க்க விடுமுறை கேட்டார்.ஆனால் அவரது கோரிக்ககை கல்லூரி அதிபரால் மறுக்கப்பட்டதை அடுத்து அவர் ஆசிரியர் பதவியில் இருந்து விலகினார்.பின்னர் கொழும்பு வெஸ்லி கல்லூரியில் ஆசிரியராக இருந்த போது இலங்கை சட்டக்கல்லூரியில் கல்வி கற்;று 1923இல் சட்ட அறிஞராக வெளியேறினார்.

1927 இல் எமிலி கிரேஸ் பார் குமாரகுலசிங்கம் என்பவரை திருமணம் புரிந்தார்.இவர்களுக்கு ஒரு பெண்குழந்தையும்,இரு ஆண் குழந்தைகளும் பிறந்தது. வெஸ்லி கல்லூரியில் பணியாற்றும் போது அவர் தமிழ்த் தேசிய உடையை அணிகிறார் என குற்றம்சாட்டி அவரை ஆசிரியர் பதவியில் இருந்து விலக்கினர்.பின்னர் நீண்ட காலம் மிகவும் புகழ் வாய்ந்த குடிசார் வழக்கறிஞராக விளங்கினார்.

இவர் ஜி.ஜி.பொன்னம்பலம் தலைமையின் கீழ் இருந்த அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் மூலம் அரசியலில் நுழைந்தார்.இலங்கை விடுதலை பெற்ற முதல் அரசாங்கத்தில் சேர்வது மற்றும் இந்தியர் பிரஜா உரிமைச்சட்டம் முதலியன பற்றி எழுந்த கருத்து வேறுபாடுகளைத் தொடர்ந்து சில தலைவர்களுடன் கட்சியை விட்;டு வெளியேறி தமிழரசு கட்சியை உருவாக்கினார்.

தமிழர்களின் உரிமைகளுக்காக அகிம்சை வழியில் போராடிய அந்த உத்தமர் தனது 79 வயதில் 26.4.1977 அன்று காலமானார்.
ஈழ தேசத்தின் தந்தை என்று போற்றப்படுகிற அவரது வாழக்கை,அவருடைய அறிவுரைகள்,அவருடைய வழிகாட்டுதல்கள்,அவருடைய செயல்பாடுகள் என்று பலவற்றை பற்றியும் அவற்றின் பண்முகப்பரிமானங்கள் குறித்தும் இளய தiமுறை தெரிந்து கொள்ள வேண்டிய தேவை இருக்கிறது. அந்தக் கடiமையை நாம் சிரத்தை எடுத்து செய்வோமானாhல்,நல்லதொரு சமூகத்தை கட்டியெழுப்ப முடியும்.

அகிம்சை வழியில் போராடினோம்,ஆயுதம் தூக்கினோம்,இன்று தந்தை செல்வா கையில் எடுத்த அகிம்சை எனும் ஆயுதமே வென்று நிற்கிறது.
தந்தை செல்வா நாமம்,வாழ்க அவர் புகழ் ஓங்குக