தமிழ்த் தேசியம் கிழிந்தது

கனடாவில் நடைபெற் சிறிய வட்டாரத் தேர்தலில் ஐந்து தமிழர்கள் போட்டியிட்டு தோல்வி கண்டனர்.
உஸ்மான் காலித் 3308 வாக்குகள். 24.14% இவரே வென்றவர்.ஏனைய தமிழ் வாக்காளர் விபரம்.

லோகன் கணபதி கீர்திகா 2635 19.23%
செல்லையா கிள்ளி1961. 14.31%
வரதராச மலர் 1587. 11.58%
செல்லா சோதி 481. 3.51%
சிறீநாதன் இலகுப்பிள்ளை 236 1.72%

இங்கே போட்டியிட்ட அனைவரும் தமிழ்,தமிழர்,தமிழின ஒற்றுமை என பேசுபவர்கள்.தமிழர்கள்மேல் அக்கறை உள்ளவர்களாக காட்டிக்கொள்பவர்கள்.தமிழையும்,தமிழர்களையும் வைத்து பிழைப்பு நடத்துபவர்கள்.

இவர்கள் தமிழர்களாக இனப்பற்றாளர்களாக நடந்துகொள்ள முடியவில்லை.ஒரு சிறிய பதவியைக்கூட இனத்துக்காக தியாகம் பண்ண முடியவில்லை.இங்கே 75% வீத மக்களால் நிராகரிக்கப்பட்ட ஒருவர் வெறும் 24 வீத வாக்குகள் பெற்று வட்டார பிரதிநிதியாகி இருக்கிறார்.இங்கே ஜனநாயகம்கூட தமிழர்களால் தோற்கடிக்கப்பட்டு இருக்கிறது.

எங்கே போனது தமிழப் பற்று? எங்கே போனது இனப்பற்று?இந்தக் கும்பல்களுக்கே தமது வாக்குகளை பிரித்து வழங்கிய தமிழர்களை என்னவென்பது? எப்படி இருக்கிறது புலம் பெயர்ந்த தமிழர்களில் அரசியல்? அரசியல் அறிவு?

ஒரு பல்லின மக்களை வரவேற்கும் நாட்டில்,பல்லின மக்கள் வாழும் நாட்டில் மற்றவர்களோடு ஒற்றுமையாக வாழவேண்டாமா?இங்கே வந்து வளமான கல்வி பொருளாதார வசதிகளைப் பெற்றும் இன,மொழிரீதியான வாழ்க்கை தேவையா?மற்ற சமூகங்களோடு இணங்கி உறவாடி வாழ வேண்டாமா?இலங்கையில் சிங்கள இனவெறியை காரணமாக்கி புலம் பெயர்ந்து வந்தோம்.நாங்களே இனவாதிகளாக மற்றவர்களுக்கு அடையாளத்தை கொடுக்கிறோம்.

இனவாதம் என்பது போலியானது.சந்தர்பவாதமானது.சிலரின் தேவைக்குப் பலரை பலிகொடுப்பதே இனவாதம்.தமிழ் இனவாதத்தின் போலிமுகம் மார்க்கம் வட்டார தேர்தலில் அம்பலமானது.இங்கே போட்டியிட்டவர்கள் அறிவற்றவர்கள் அல்ல.வெறும் சுயநலவாதிகள்.

லோகன் கணபதி கீர்திகா ஒன்ராரியோ பாராளுமன்ற உறுப்பினரின் மகள்.குடும்ப அரசியலை லோகன் கணபதி குடும்பம் கொண்டுவர முயன்றது.கிள்ளி செல்லையா முன்னாள் தமிழரசுக்கட்சிப் பேச்சாளர் செல்லையாவின் மகன்.சிறீநாதன் இலகுப்பிள்ளை இவர் கனடா அணுமின் நிலைய நிர்வாகியாக பணியாற்றிய இலகுப்பிள்ளை அவர்களின் மகன்.இவர்களால் சிறிய பதவியைக்கூட இனத்துக்காக விட்டுக் கொடுக்க முடியவில்லை.இனவாதம் தோல்விகண்டது.இனவாத முகத்திரை கிழிக்கப்பட்டது.

கனடாவாழ் தமிழர்களே கனடியர்களாக வாழுங்கள்.கனடியர்களாக சிந்தியுங்கள்.தோல்வி கண்டது தமிழ்த் தேசியம்.இனி வேண்டாம்.எங்கே போனாலும் இனவாத மதவாத உணர்வுகளை காவிச் செல்வதை நிறுத்தவேண்டும்.

(Vijaya Baskaran)