திரு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் எப்போதும் எட்டாப் பழத்துக்கு கொட்டாவி விடும் நபராகவே உள்ளார்.

அதற்கான காரணம் அவருக்கு அரசியல் நெகிழ்வுத் தன்மை அறவே இல்லாதவர் எப்போதும் தேசியம் தேசியம் தேசியம் என்று கூக்குரல் இடும் அவர் அதை எவ்வாறு பெறமுடியும் என்று கேட்டால்? அவருக்கு பதிலளிக்கமுடியாது. ஏனேனில் அவர் பேசும் தேசியம் அவர் சுயமாக கேட்கும் விடயமில்லை. அவரை வெளியில் இருந்து இயக்கும் பினாமிகளுடைய கோரிக்கை அதிலிருந்து அவர் விடுபடவும் முடியாது.

அவருக்கு அயல் நாடான இந்தியாவை பற்றி எப்போதும் பகை உணர்வாகவே கருத்தை பகிருவார். அதில் போதிய நியாயம் இருக்கலாம் ஆனால் அது எவ்வளவு தூரம் தமிழ்மக்களின் தீர்வை பின்தள்ளும் என்பதை அவர் அறியார். வல்லாதிக்க சக்திகளை நேரடியாக விமர்சிக்கும் போது நாம் எமது பலத்தையும் கருத்தில் கொள்ளவேண்டும். விடுதலை புலிகளின் தலைமையே நேரடியாக இந்தியாவை விமர்சிப்பதில்லை,

இன்றுள்ள பூகோள அரசியலில் வல்லாதிக்க சக்திகளுடன் பகமை பாராட்டி எம் உரிமையை பெறுவது என்பது பகல்கனவே.
அதற்காக அவர்களின் நிகழ்சி நிரலுடன் பயணிக்க வேண்டிய அவசியத்தை தவிர்க்க முடியும். ஆனால் அவர்களின் நிகழ்சி நிரலுக்கு நாம் தடையாக இருந்தால் அவர்கள் எம்மை ஓரம் கட்டவே முனைவர். அது கட்சிகளுக்கும் பொருந்தும் மக்களுக்கும் பொருந்தும்.

நாம் எமக்கான உரிமையை உச்சளவில் பெற எமக்கான நேசசக்திகளை அதிகரிப்பதன் ஊடாகவே எம்மால் எமது இலக்கை அடைய முடியும். அந்த நேசசக்தி யாரன இனம் காண வேண்டும். அந்தவகையில் இந்தியாவை மீறி எந்தநாடும் எமக்கு எதையும் பெற்று தரமாட்டாது. அமெரிக்காவோ ஐரோப்பாவோ ஐ நா வோ அயல்நாட்டின் அனுசரணையுடனே தீர்மானங்களை கொண்டுவரும் அதைமீறி செயல்பட முனையாது. காரணம் இந்தியாவும் திறந்த பொருளாதார கொள்கையுடைய மிகப் பெரும் நுகர்வு சந்தையாகும்.

அதனுடன் ஒப்புடுகையில் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசத்தில் நாம் உள்ளோம்.அமெரிக்காவானது தனது பிராந்திய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் நாடுகளை ஆதரிக்கும் நாடுகளை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர உள்நாட்டில் உள்ள குழப்பங்களை தனது தேவைக்கு ஏற்ப பயன்படுத்தும்,

தனது காரியம் நிறைவேறிய பின் தனக்கு ஆதரவான அரசை உருவாக்கி அதனுடன் இனைந்து உள்நாட்டு குழப்பத்தை அரசுக்கு ஏற்ற விதத்தில் தனிக்கும். இதுவே இன்றைய எமது நிலை அந்த வகிபாகத்தில் பிரதமகுரு சுமந்திரன் அவர்களே அமெரிக்கா சார்பில் முன்னேடுக்கிறார். இவ்வாறான நிலமையை நாம் மிகவும் புத்திசாதுரியமாக கையாள வேண்டும். இந்தியாவின் தென்கோடி பாதுகாப்பு என்பது வடகிழக்கை தமிழர்கள் ஆதிக்கம் செலுத்தும் போதே பாதுகாப்பாக இருக்கும்,

இங்கு பிற இன ஆதிக்கம் அதிகரித்தால் சீன நீர்மூழ்கிகள் K K S க்கும் வந்து சாகசம் காட்டும். இந்த விடயங்களை சுட்டி காட்டி எதிர்காலத்தில் ஏற்படபோகும் விளைவுகளை இந்தியாவுடன் பகிரும் போது எமக்கான கரிசனைகள் அதிகரிக்கும். கிழக்கு மாகாணம் பிரிந்ததால் இன்று அங்குள்ள நிலமையை இந்திய தரப்புக்கு எடுத்து இயம்பும் போது குறிப்பாக அங்கு ஒரு கிழக்குஸ்தான் உருவாக போகிறது அதனால் ஏற்படும் பின்விளைவுகள் கூறும் போது வடகிழக்கு இனைவு சாத்தியமாக்கும் வேலையை அதன் கொள்கை வகுப்பாளர் முன்னேடுப்பர்.

நாளை ஆட்சிக்கு மகிந்த வந்தாலும் இனைவு சாத்தியமாகும். நாம் எவ்வாறு எமது இலக்கை ஏய்தபோகிறோம் என கட்சி நலம் பாராமல் சிந்திப்போமானால் இரத்தம் சிந்தாமலே பெரிய விடயங்களை சாதிக்கலாம். அதை முன்னேடுக்க அறிவுசார் அரசியல்வாதிகளை நாம் தெரிவு செய்யவேண்டும். அதை விடுத்து உணர்சி அரசியலும் சலுகை அரசியல்வாதிகளை புறம் தள்ளவேண்டும். இந்த பதிவு எனது தனிப்பட்ட சிந்தனையின் வெளிப்பாடு. இந்த சிந்தனை கூடுதலாக சுரேஸ் அண்ணனுடன் கிடைத்த அனுபவமாக கூட இருக்கலாம்.

இந்தியா Row என்று பிதற்றுவதால் எதுவும் நடக்காது. எம் மீதான சந்தேகமே வலுவடையும் கடந்த கால நிகழ்வுகளை கடந்து சார்த்தியமான வழிகளை ஆராய்வோம். இதைவிட நல்ல தெரிவுகள் இருந்தால் பதிவிடுங்கள் ஆக்ரோசத்தை மூட்டை கட்டி ஓரமாக வையுங்கள். உங்கள் ஆலோசனைகளை முன் வையுங்கள்.

(ஸ்ரீரங்கன்)