நேற்று ஒரு நண்பரின் பதிவில் Subculture என்ற சொற்பதத்தை பார்த்தேன்….

(Ratnasingham Annesley)

Subculture என்பது தமிழ் மக்களிடையே பரவக்கூடாது என்று ஆணித்தனமாக அடித்து சொல்வதை கவனித்தேன்… அப்பிடி அந்த சொல்லை பாவித்தவர் தன்னை ஒரு பெரிய சோஷலிச கருத்தாளன் என்று புளுகி கொள்பவர்….இந்த துணைக்கலாச்சாரம் (Subculture ) என்ற ஒன்றை தவிர்க்க வேண்டும் என்று நினிப்பவர்களில் முக்கியம் ஆனவர்கள் சாதி வேறுபாட்டை ஆதரிப்பவர்களாக இருக்கும்….. அதைவிட இனவெறி பிடித்தவர்களும் இந்த சொற்பதத்தை மிகவும் கடைப்பிடிப்பார்கள்…. ஆகவே ஒரு சாதி வெறியனும் ..இனவெறியனும் ஒரு போதும் ஒரு சோஷலிசவாதியாக இருக்க முடியாது வாய்ப்பே இல்லை…. ஆனால் யாழ்ப்பாணத்து சாதிவாதிகளிடம் இந்த கலப்பு வரக்கூடாது என்பதில் மிக கவனமாக இருக்கிறார்கள்……

நான் சில வருடங்களுக்கு முன் லண்டன் இல் ஒருவரை( என்னை விட வயதில் மிகவும் அதிகமானவர்) ஒரு கூட்டத்தில் சந்திக்கும் போது பத்திரிகையாளன் சண்முகலிங்கம் அவர்களை பற்றி எனக்கு அவர் சொன்ன கதை இப்போது நினைவுக்கு வருகிறது……

சண்முகலிங்கம் ஈழநாடு பத்திரிகை நிருபர் என்று நினைக்கிறேன்….

அவர் யாப்பாணம் அரியாலை காந்தி சனசமுக தலைவராக இருந்த நேரத்தில் அந்த சனசமுக நிலையத்தின் ரேடியோவில் தமிழ் சேவை இரண்டில் ஹிந்திபாடல்கள் 30 நிமிடத்துக்கு வருவதுண்டு…….40 அல்லது 45 வருடத்துக்கு முன்….

ஆகவே அதை அவர் சனசமுக நிலையத்தில் ரேடியோவில் ஒளிபரப்ப படும்….அதை அவர் போட்டு விடுவார் மக்கள் கேட்பதும் உண்டு…

ஆனால் சண்முகலிங்கம் அவர்கள் 30 நிமிடங்களுக்கு சிங்கள பாட்டையும் ஒளிபரப்ப விடுவார்……..

அப்போது அந்த பகுதியில் உள்ள தமிழ் தேசியவாதிகள் …இங்கை எனதுக்கு சிங்கள பாட்டு என்று முணுமுணுப்பதை அவர் அறிந்து கொண்ட்டார்….

அதாவது எங்கேயோ இருக்கிற ஹிந்திக்காரனின் பாட்டை ஒரு எதிர்ப்பும் இல்லாமல் கேட்கும் தமிழ் மக்கள் பக்கத்தில் இருக்கும் சிங்களவனுடைய பாட்டை கேட்டால் எதிர்க்கிறார்கள்….

அதை சண்முகலிங்கம் அவர்களுக்கு விளங்கப்படுத்தினார்…….

திரு.சண்முகலிங்கம் சோசலிசத்தை சண்முகநாதனிடம் கற்றவர் என்று நினைக்கிறேன்……

பத்திரிகையாளர் சண்முகலிங்கம் பின்பு புலிகளால் சுடப்பட்டார்……அவரை தமக்காக கட்டுரைகளை எழுதும் படி புலிகள் வட்ப்புருத்தினார்கள் என்றும் அதை அவர் மறுத்த படியால் சுடப்பட்டார் என்பதும் பழைய கதை……..

அவர் ஒரு உண்மையான சோஷலிசவாதியாக புலிகளையும் அதன் செயற்பாடுகளையும் ஏற்றுக்கொள்ளவில்லை….

ஆனால் தமிழ்மக்களின் விடுதலை அல்லது இலங்கை அரசின் பேரினவாதத்தை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை….

நான் சோசலிசவாதி அல்ல ..அதில் எனக்கு நம்பிக்கையும் இல்லை…….

ஆனாலும் எனது முகநூலில் இருக்கும் சில சோஷலிசவாதிகளை பார்த்ததில் எனக்கு பிடித்தவர்கள் …..

Ashok-yogan Kannamuthu மற்றும் Kanniappan Elangovan போன்றவர்களை ஏற்றுக்கொள்ளலாம்…

அவர்கள் இலங்கை அரசை மட்டும் அல்ல புலிகளின் அராஜகத்தையும் மிகவும் கடுமையாக எதிர்ப்பவர்கள்……

ஒரு உண்மையான சோசலிசவாதி அப்படித்தான் இருப்பான்……

அவர்கள் தமிழ் மக்களின் இனப்பிரச்சனைக்கு குரல் கொடுப்பவர்கள் தான்……

எனக்கு Ashok-yogan Kannamuthu அவர்களின் சில கருத்துக்கள் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை…

அவருடைய கருத்துகளை நான் கட்டாயம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அவர் எதிர்பார்க்கவும் இல்லை.

சில போலி சோசலிசவாதிகள் சோசலிசம் என்ற போர்வைக்குள் ஒளித்து நின்றால் தம்மை ஒரு உயர்வான அரசியல் தெரிந்த ஒருவராக மற்றவர்கள் மதிப்பார்கள் என்ற நோக்குடன் சிகப்பு கதைகளை கதைப்பார்கள்……..

அவர்களின் சோஷலிசவாதம் மிகவும் தெளிவற்றது…..

உதாரணம் மகிந்தவை அகற்ற மைதிரியை ஆதரிப்போம் பின்பு பார்த்து கொள்ளுவோம் என்பது போல…..

சோசலிசவாதிகள் மிக தெளிவாக இருப்பார்கள்…….

இந்த உலகில் உள்ள எல்லா நாடுகளிலும் எல்லா அரசியல்வாதிகளும் கண்டு பயப்படும் அரசியலை பேசுபவர்கள் சோஷலிசவாதிகளே…