பயிரை மேய்ந்த வேலிகள்..(10)

(கணணி கற்கலாம் எனகூறி பிள்ளையை காலனிடம் அனுப்பிய தந்தை)

இவ்வாறு புலிகளின் இந்த அராஜகத்துக்கு துனைபோன அவர்களின் தீவிர ஆதரவாளர்கள் தமது விசுவாசத்தின் உச்சகட்டமாக இயக்கத்தில் தமது பிள்ளைகளை கொண்டு சென்று வழியே ஒப்படைத்ததார்கள். உள்ளூர் பத்திரிகையில் புகைப்படத்துடன் தமது பிள்ளையை எழிலனிடம் ஓடைக்கும் படம் வருமாறும் பார்த்துக்கொண்டனர். சிலர் தாங்களும் இயக்கத்தில் இணைந்துவிட்டதாக வரிப்புலி சீருடையுடன் காட்சி கொடுத்தனர். அவ்வாறு கிளிநொச்சியில் வரிப்புலி உடையுடன் தோன்றிய ஒருவர் இனறு வடமாகாண அரசியல்வாதியாக வளம்வந்துகொண்டிருப்பதையும் காணகூடியதாக உள்ளது.

கணணிபிரிவில் கொம்புயூட்டர் இஞ்சினியராக தமது பிள்ளைகள் கற்றுக்கொண்டிருப்பதாக நினைத்துக்கொண்டு தம்மை போன்று பிள்ளைகளை வழியே கொண்டு சென்று ஒப்படைக்காதவர்களை புலிகளுக்கு காட்டிக்கொடுத்துக்கொண்டிருந்தவர்களின் வீடுகளுக்கும் இப்போது சீல் செய்யப்பட்ட சவப்பெட்டிகள் வந்து இறங்கத்தொடங்கியிருந்தன. இவ்வாறு புலிகளின் கதையை நம்பிய புலிகளின் தீவிர ஆதரவாளர் ஒருவர் தனது மூத்த பெண்பிள்ளையை பலிகொடுத்த சோக சம்பவம் ஒன்று கிளிநொச்சியில் நடந்தது.

புலிகள் இயக்கத்தில் ஊரிய அதிவிசுவாசமான குடும்பத்தை சேர்ந்த மருதநகரில் வசிக்கும் ஒருவர் தனது முதல் பிள்ளையான 19வயது பெண்பிள்ளையை புலிகள் இயக்கத்தில் வலியே சென்று இணைத்துவிட்டு வந்திருந்தார். இவரின் இந்த செயலை அவரின் உறவினர்கள் கடுமையாக விமர்சித்திருந்தனர். ஆனால் அவரோ தமது ஏனைய பிள்ளைகளை பாதுகாக்க தனக்கு இதைதவிர வேறு வழி இல்லை என்று தனது செயலுக்கு நியாயம் கற்பிக்க தொடங்கியிருந்தார்.

பிள்ளை பிடிக்க வேண்டிய வீட்டுக்கு அப்போது புலிகள் உங்கள் பிள்ளையை அடுத்துவரும் சில நாட்ட்களுக்குள் கொண்டுவந்து இயக்கத்தில் சேர்க்க வேண்டும் என கடிதம் அனுப்புவதுண்டு. கடிததுக்கு சாதகமாக பதிலளிக்காத குடும்பங்களுக்குள் பலவந்தமாக புகுந்து அவர்களின் பிள்ளைகளை பிடித்து செல்லுதல் என்ற ஒரு வழிமுறைய இந்த பிள்ளை பிடிக்காரர்கள் கடைபிடித்த காலம் அது. ”உனது வீட்டுக்கு தான் இன்னும் கடிதம் வரவில்லையே பின்பு ஏன் அவசரப்பட்டு உனது பிள்ளையை கொண்டு சென்று ஒப்படைத்தாய்?”என்று கேட்டவர்களுக்கு பதிலாக ”எனது பிள்ளை கணணி பிரிவில் கொம்பியூட்டர் படிக்கின்றது” என்று கூறிசமாளித்தார்.

ஆனால் ஒருநாள் கணணிபிரிவில தமது பிள்ளை பாதுகாப்பாக இருப்பதாக நினைத்துக்கொண்டிருந்தவரின் வீட்டிற்கு விசுவமடுவில் ஏதோ குண்டு வெடிப்பில் அந்தபிள்ளை இறந்துவிட்டதாக கூறி உடலை அனுப்பி வைத்திருந்தனர் புலிகள்.

இப்போது அந்த தந்தைக்கு தனது செயலுக்காக கண்ணீர்விட்டு கதறி அழுவதை தவிர வேறு ஒன்றும் அவரின் தெரிவாக இருக்கவில்லை. நம்பிக்கை துரோகம் என்றால் என்ன என்பதையும் நன்கு புரிந்து கொண்டும் இருந்தார்.

தொடரும்..

(Rajh Selvapathi)