பற்குணம் A.F.C (பகுதி 72 )

பற்குணம் புத்தளத்தின் பின்பு மன்னாருக்கு மாற்றலாகி வந்தார்.மன்னார் மக்கள் வித்தியாசமானவர்கள் .வவுனியா போன்று சாதிரீதியான முரண்பாடுகள் எழவில்லை.மேலும் அங்கே மூதூர் ்மஹ்ரூப் மாவட்ட அமைச்சராக இருந்தார்.அவர் பதவிக்கு வருமுன்பே அறிமுகமானவர்.அவர் பற்குணத்தின் வரவை விரும்பி இருந்தார்.அதிகாரத்தில் இருந்தும் தொல்லை கொடுக்கவில்லை. இதன் காரணமாமாக ஐ.தே.க அமைப்பாளர் ரகீம் தலையிடும் தவிர்க்கப்பட்டது .

இங்கு பணியாற்றிய காலத்தில் நான் தேசிய தொழில் பயிலும் சபை கட்டுப்பத்தை பல்கலைக் கழகம் நடாத்தும் பொறியியல் படிப்புக்கான நேர்முகப் பரீட்சைக்கு பற்குணத்துடன் மன்னார் வழியாக ரயிலில் போய்க்கொண்டிருந்தேன்.அப்போது மன்னார் ரகீம் எங்களுடன் ரயிலில் எதிர் இருக்கையில் இருந்து வந்தார்.

இந்த நேர்மைப் பரீட்சைக்கு தேர்வாக கொஞ்சம் தயவுகள் அப்போது தேவை.ரகீம் என்னிடம் சுகம் விசாரித்தார்.பின்னர் எனது நேர்முகப்பரீட்சை பற்றியும் கதைத்தோம்.ஆனால் பற்குணம் இது பற்றி கதைக்கவில்லை.

பின்னர் கொழும்பு நகர மண்டபத்துக்கு அண்மித்த இடத்தில் நேர்முகப் பரீட்சை நடந்தது.அங்கே என்னுடன் படித்த நண்பர்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் நின்றனர்.

அப்போது அங்கே வந்த ஒருவர் பற்குணத்தை கண்டு உள்ளே அழைத்துச் சென்றார்.நான் நேர்முகப் பரீட்சை முடிந்து திரும்பிவர பற்குணம் வெளியே காத்து நின்றார்.

அப்போது இருவரும் திரும்பிவரும்போது தன்னை அழைத்துச் சென்றவர்தான் தேசிய தொழில் பயிலுனர் சபைத் தலைவர் என்றார்.நானும் ஆவலாக அப்போது நீ கதைத்தால் நான் தெரிவு செய்யப்படுவேன் என்றேன்.

அவரோ அப்படிக் கோருவது எனக்கும் நான் வகிக்கும் பதவிக்கும் நாகரீகம் அல்ல.உன்னை மாதிரி எத்தனை பேர் அங்கே காத்து நின்றார்கள்.உனக்கு நானிருக்கிறேன்.அவரகளில் பலருக்கு யாரும் இல்லை என்றார.

அப்போது எனக்கு கோபமே வந்தது.ஆனால் இன்று எண்ணிப்பார்க்கிறேன.இப்படியான ஒரு சில மனிதர்கள் வாழ்வதாலேயே.ஏழைகள் இன்னமும் நம்பிக்கையுடன் வாழ்கிறார்கள்.

(தொடரும்….)

(விஜய பாஸ்கரன்)