பற்குணம் A.F.C (பகுதி 82 )

யாழ்ப்பாண அரச நிர்வாகம் ஓரளவு அரசால் புறக்கணிக்கப்பட்ட நிலையில் இருந்தது.பிரதான பிரச்சினையான உணவுப் பிரச்சினை தொடர்பாக அரச அதிபர் பஞ்சலிங்கம் எந்த அக்கறையும் காட்டவில்லை. தன் பதவியை இயக்கங்கள் அரசாங்கம் இரண்டுக்கும் நடுவே காப்பாற்ற நாடகமாடிக் கொண்டிருந்தார்.
பற்குணம் கொழும்பு யாழ்ப்பாணம் என பயணம் உணவுகள் கொண்டுவந்து சமாளித்தார் .ஆனாலும் கொழும்பில் பாதுகாப்பு அமைச்சிலுள்ள இனவாதிகள் கொஞ்சம் நெருக்கடிகள் கொடுத்தனர்.இதனிடையே ஒரு முறை உணவுகளை ரயில் மூலமாக கொண்டுவர ்மிகவும்சிரம்ப்பட்டு ஏற்பாடு செய்தார்.இந்த தகவலை சிலரிடம் பகிர்ந்து கொண்டார்.உணவுத் திணைக்களத்திலுள்ள ஊழல் பேர்வழிகள் புளொட் அமைப்புக்கு தகவல்களை வழங்கிவிட்டனர்.

அந்த ரயிலை வழி மறுத்து நன்கு திட்டமிட்ட முறையில் புளொட் கொள்ளையடித்தது.அதைவிட இராணுவத்துக்கு வந்த உணவுப்பொருட்களை கொள்ளை அடித்ததாக அறிக்கை விட்டது.ஆனால் சிலர் மூலமாக அது பொய்யான தகவல்.நானே மக்களுக்கு வழங்க கொண்டுவர ஏற்பாடு செய்தேன். எனவே அவற்றை மீளத் தருமாறு கோரினார்.அவர்கள் மறுத்துவிட்டனர்.இறுதியாக நீங்களே கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்குங்கள் என்றார்.அதற்கும் அவர்கள் பதிலளிக்கவும் இல்லை.அவ்வாறு செய்யவும் இல்லை.

மிகவும் இக்கட்டான நிலையில் பற்குணம் அரச அதிபருக்கும் கொழும்பில் உள்ள உணவுதிணைக்களத்துக்கும் தெளிவு படுத்தினார்.அரச அஅதிபரானால் பஞ்சலிங்கம் பற்குணமே தகவல்களை புளொட் அமைப்புக்கு வழங்கியதாக இரகசிய தகவல் அனுப்பியிருந்தார்.அதே நேரம் பற்குணத்தையும் அலுவலகத்தில் சாடினார்.

இதைத் தொடர்ந்து உணவுப்பொருள்களில் பொருட்கள் பெறுவதில் பற்குணம் பல சிக்கல்களைச் சந்தித்தார்.ஒத்துழைக்க வேண்டிய அரச அதிபரின் இரட்டை வேசத்தை பற்குணம் காட்டிக்கொடுக்கவில்லை.ரெலோ நடத்திய ரயில் தாக்குதலை அடுத்து ரயில் மூலம் உணவுகள் கொண்டு வருவது நின்றன.இதனால் பலத்த உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டது.

இது சம்பந்தமாக பத்திரிகைகளில் செய்திகள் வந்தன.அப்போதைய பாதுகாப்பு அமைச்சர் லலித் அத்துலத் முதலி யாழ்ப்பாணத்தில் போதிய உணவுப் பொருட்கள் இருப்பதாக அறிக்கை விட்டார்.இதற்கு மறுப்பாக பற்குணம் பகிரங்கமாக உணவுப் பொருள் தட்டுப்பாடுகள் இருப்பதாக மறுப்பறிக்கை விட்டார்.இது பெரும் பரபரப்பையும் நெருக்கடியையும் அரசுக்கு கொடுத்தது.

பற்குணத்தைப் பற்றி ஏற்கனவே அறிந்து வைத்திருந்த பாதுகாப்பு அமைச்சு அதிகாரிகள் அவரை விளக்கம் கேட்காமல் அரச அதிபரை அழைத்தனர்.இந்த அறிக்கையை வைத்து ஆயுத அமைப்புகள் விளம்பரம் தேடவும் பிரச்சாரம் செய்யவும் முனைந்தன.ஆனால் பற்குணம் நிர்வாக தேவைகள் கருதி மேலதிகமான செய்திகள் பரவுவதைத் தவிர்த்தார்

இதைத் தொடர்ந்து பாதுகாப்பு அமைச்சு அரச அதிபரான பஞ்சலிங்கத்தை நேரில் அழைத்து விளக்கம் கோரியது.அவர் அங்கே உணவுப்பொருள்களில் பொருட்கள் தாராளமாக இருப்பதாக கூறிவிட்டு திரும்பினார்.

(தொடரும்….)
(விஜய பாஸ்கரன்)