பல்கலைக்கழகமும் சமூகமும்

பல்கலைக் கழகங்களே ஒரு சமுகத்தின் முற்போக்கு சிந்தனைகளின் திறவுகோல் உலக நாடுகளில் ஏற்பட்ட பெரும் மாற்றங்கள் பல்கலைக்கழகங்கள் வழியேதான் முன்மொழியப் பட்டன
அறிவுச் சிந்தனை வெளியில் புதிய சிந்தனை மரபுகளை உருவாக்கியவர்கள் வரிசையில் பல்கலைக் கழக அறிவு ஜீவிகளே முன்னிலை வகிக்கின்றனர். ஆனால் இன்று நம் பல்கலைக் கழகங்கள் சுதந்திரமான சிந்தனைக் களங்களாக உள்ளனவா.

சாதாரண பதவியேற்புகள் கூட பெரு விழாக்களாக கொண்டாடப் படுகின்றன சமய அனுஸ்டானங்களுடன்.பீடாதிபதி பதவியோ துணைவேந்தர் பதவியோ கொண்டாடப் படுவதற்கானதல்ல அவை பல்கலைக் கழக நடை முறை சார்ந்தவை மேளதாளம் அணிவகுப்பாய் இன்று மாறியிருக்கும் உயர் கல்வித் துறைக்கு பொருத்தமில்லா விடயங்கள்.அரசியல்வாதிகளைப்போல மாலைகளுக்குள் மயக்கம்.
சமூகம் சார்ந்த செயற்பாடுகள் மிக மோசமான மன நிலையில் மந்த கதியிலே உள்ளன .இன்று உலகம் முழுவதும் சமூக வலைத் தளங்கள் அவற்றின் செயல்பாடு புதிய கருத்துக்களையும் சமூக விமர்சனங்களையும் உடனுக்குடன் நம் காலடியில் கொண்டு வந்து சேர்க்கின்றன.உலகப் பெருந்தலைவர்கள் இவற்றை மிகச் சிறப்பாக பயன் படுத்துகின்றனர்.பிரித்தானிய எதிர்க்கட்சித் தலைவர் ஜெர்மி கோபியன்,அமரிக்க ஜனாதிபதி ரம் ,இந்திய பிரதமர் மோடி உட்பட உலகின் மிக பிரபலமானவர்கள் இதில் அடங்கும்.
நம் பல்கலைக்கழகங்கள் சார்ந்தவர்கள் எத்தனை பேர் இவற்றை பயன் படுத்துகின்றனர் கேட்டால் சரியான வேலை என சாட்டுச் சொல்வர்.பேராசிரியர் சிவத்தம்பி சொல்வார் பல்கலைக்கழக விரிவுரையாளர் வேலை என்பது காலை எட்டு மணிக்கு போய் நாலு மணிக்கு திரும்பி வரும் வேலையல்ல அது 24 மணி நேரம் சார்ந்தது என்று.
இன்று பல்கலைக் கழகங்களுக்கு வெளியே சமூக சிந்தனையுடன் முற்போக்கு நோக்கில் செயல் படும் பலரை இளம் சந்ததியினரை பார்க்க முடிகிறது.ஆராய்ச்சியும் அறிவுத்திறன் மிக்க செயல் பாட்டாளர்களாக அவர்கள் உள்ளனர்.
அரச சார்பற்ற நிறுவனங்களுக்குள் பல்கலைக் கழக அறிவு முடங்கிப் போய் உள்ளதோ என்ற ஐயம் ஏற்படுகிறது.
பல்கலைக் கழகங்கள் மடாலயங்கள் அல்ல

(Bala Sugumaran)