பாசிஸ்டை தலைவனாகவும் அவனுடைய அமைப்பை ஏக பிரதிநிதிகள் என ஏற்றுக்கொண்ட TNA ????

1990 ஆம் ஆண்டிலிருந்து 2009 ஆம் ஆண்டு வரை இலங்கையில் இருந்து செயல்பட்ட அனைத்து தமிழ் அரசியல் அமைப்புகளும் ஒன்றில் புலி பாசிசத்துக்கு சார்பாகவோ அல்லது அரச பாசிசத்துக்கு சார்பாகவோ இயங்கியது தான் வரலாறு. அதுதான் யதார்த்த சூழ்நிலை. எனவே TNA அன்று புலி பாசிசத்தை முற்று முழுதாக ஏற்றுக்கொண்டார்களென்றோ அல்லது PLOTE , ஈபிடிபி, EPRLF (P ) இலங்கை அரச பாசிச நடவடிக்கைகளை முற்று முழுதாக ஏற்றுக்கொண்டார்கள் என்றோ அர்த்தம் இல்லை.

உண்மை என்னவென்றால் இரு தரப்புக்களும் எதோ வகையில் தொடர்ந்து மக்கள் மத்தியில் தமது அரசியலை நடாத்தினார்கள். அந்த பயணத்தில் தமது முக்கிய உறுப்பினர்களை இந்த இரு பாசிசத்துக்கும் பலி கொடுத்தார்கள். தோழர்கள் ராபர்ட் , சின்ன பாலா போன்றோர்கள் புலி பாசிசத்துக்கும் ரவிராஜ், ஜோசெப் பரராசசிங்ம் போன்றோர்கள் அரச பாசிசத்துக்கும் இரையானார்கள். வரலாறு இப்படியிருக்க TNA , புலி பாசிசத்தை அன்று ஏற்றுக்கொண்ட ஒரே காரணத்துக்காக, அவர்களுடன் இணைவது தவறானதென்று வாதம் செய்வதை என்னால் ஏற்று கொள்ள முடியவில்லை.

/பத்மநாபாவின் பெயரை நீக்கியது நல்லது//  – தோழர் பத்மநாபா இருந்திருந்தால் இந்த கூட்டமைப்பில் இணைந்து செயற்படும் பேச்சு வார்த்தையில் கலந்து கொண்டிருக்க மாட்டார் என்ற அர்த்தத்தில் எழுதியுள்ளீர்கள். அதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. அவர் ஒரு யதார்த்தவாதி. இன்றய சூழ்நிலையில் நாம் எப்படி செயற்படுவதன் மூலம் எம்மை பலப்படுத்திக்கொள்ளலாம் என்று தான் சிந்திக்க வேண்டும்.

நடக்கவிருக்கும் தேர்தலில் SDPT இக்கு இருக்கும் options என்ன? தேர்தலில் பங்கு கொள்ளாமல் இருப்பது , தனித்து போட்டியிடுவது, ஈபிடிபி யுடன் இணைந்து போட்டியிடுவது, TNA யுடன் இணைந்து போட்டியிடுவது. தேர்தலில் போட்டியிடுதென்பது ஒரு சரியான முடிவு என்றே நான் கருதுகிறேன். அந்த அடிப்படையில் கடந்த காலத்தில் தனித்து போட்டியிட்ட போது அதன் மூலம் பாரிய வெற்றி கிடைக்கவில்லை என்பது என் கருத்து.

ஈபிடிபி யுடன் இணைந்து போட்டியிட்ட போதும் அதன் பின் சில மனஸ்தாபங்கள் வந்ததாக அறிந்தேன். முதல் முறையாக TNA , SDPT யை தம்முடன் இணைக்க விரும்புவதாக அறிந்தேன். அந்த சந்தர்ப்பத்தை ஏன் அவர்கள் பயன்படுத்த கூடாது என்பதே என் கருத்து. SDPT , இதில் இழப்பதற்கு பெரிதாக ஒன்றுமில்லை என்றே நான் கருதுகிறேன் ஆனால் இதன் மூலம் மக்களுக்கு சில விடயங்களை செய்ய முடியும் என்று அவர்கள் கருதினால் அதை நாம் ஊக்குவிக்க வேண்டும்.