பாலகுமார்: ஒரு பாலைநிலத்துப் பச்சோந்தியின் கதை

ஈரோஸ்_முன்கதைச்சுருக்கம்

“ஈரோஸ் அமைப்பு இராணுவபலம் மிக்கதல்ல. இராணுவ வழிமுறைகள் அவ்வளவாக கைவரப்பெற்றதுமல்ல. இடதுசாரி சித்தாந்தங்கள் உள்ளிட்ட சித்தாந்தங்களை கற்று அதுபற்றி விவாதித்துக் கொண்டிருந்த அமைப்பு. ஈரோஸ் பற்றி நகைச்சுவையாக சில விடயங்கள் சொல்வார்கள். ஒன்று, பேசியே தமிழீழம் பிடிக்கலாமென நினைத்தார்கள் என்பது. (அதாவது, விஜயகாந்த் பக்கம்பக்கமாக வசனம் பேசி எதிராளிகளை தெறிக்க விடுவதை போல). அதுபோல, ஒரு விடயத்தில் உறுதியாக இல்லாமல் நழுவிச்செல்வதை ‘ஈரோஸ்பாணி’ என்பார்கள். உறுதியாக இல்லாமல், பாம்பக்கு தலையும், மீனுக்கு வாலும் காட்டும் ஆட்களை இயக்கங்கள் பல இருந்தகாலத்திலேயே ‘ஆள் ஈரோஸ்காரன்’ என்று நகைச்சுவையாக கூறுவார்கள்.”