புது வரலாறு படைக்கவுள்ள மலையக மக்கள் மாநாடு

பெருந்தோட்ட உழைப்புரிமை ஒன்றியம்

වැවිලි ශ්‍රම  යිති  මුහය

Plantation Labour Rights Confederation

152 1/3 Hulftsdorp Street, Colombo 12

plantationlabour@gmail.com 071-8971406

 புது வரலாறு படைக்கவுள்ள மலையக மக்கள் மாநாடு

பெருந்தோட்ட தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை உடனடியாக ரூபா 1300 ஆக உயர்த்தும் படியும் நீண்ட காலத்தில் உழைப்புக்கேற்ற நியாயமான சம்பள திட்டத்தை ஏற்படுத்தும் படியும் வற்புறுத்தி தொழிற்சங்க அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பால் பல அமைப்புகளும் தனி நபர்களும் நடத்தும் மக்கள் மாநாடு எதிர்வரும் 13/10/2018 அன்று மு.ப 10 மணி முதல் 2 மணி வரை அட்டன் கிறிஸ்தவ தொழிலாளர் ஒத்துழைப்பு மண்டபத்தில் நடைபெறும்.

இம்மாநாட்டில் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நியாயமான சம்பள உயர்வை வென்றெடுப்பதில் மக்களின் வகிபாகமும், இம்மாநாட்டி நோக்கமும் என்ற தலைப்பில் மக்கள் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி இளையதம்பி தம்பையாவும், பெருந்தோட்ட கம்பனிகளின் போலியான கணக்கறிக்கைகளும் சம்பள உயர்வை மறுக்கும் பம்மாத்தும் என்ற தலைப்பில் பெருந்தோட்ட உழைப்புரிமை ஒன்றியத்தின் அழைப்பாளர் சட்டத்தரணி சுகுமாரன் விஜயகுமாரும், பெருந்தோட்ட தொழில் துறையை அழிக்கும் தொழிலாளர்களின் இருப்பை பாதிக்கும் மாற்றுப் பயிர்ச்செய்கை வெளியாள் வேலைமுறை போன்றவற்றை எதிர்கொள்வது என்ற தலைப்பில் பொருளியலாளர் கிருஷ்ணசாமி ஆனந்தகுமாரும், கூட்டு ஒப்பந்தத்தில் தொழிற்சங்கங்களின் கடமைகளும் பொறுப்புகளும் என்ற தலைப்பில் மக்கள் ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் நெல்சன் மோகன்ராஜும் உரையாற்றுவார்கள்.

இந்த அறிக்கைகளின் மீதான விவாதங்களுக்கு பின்னர், மாநாட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்படும். அத்துடன் பெருந்தோட்ட உழைப்புரிமை ஒன்றியத்தின் உத்தியோகத்தகர்கள் தெரிவு செய்யப்படுவர். மக்கள் பண்பாட்டு கழகத்தின் பாடல்களும் இசைக்கப்படும். இம்மாநாட்டை வெற்றிபெறச் செய்து மலையகத்தின் புது வரலாற்றை படைக்க அனைவரையும் அணி திரளுமாறு ஏற்ப்பாட்டாளர்கள் அழைப்பு விடுக்கின்றனர்.

தொடர்புகளுக்கு- இ. தம்பையா- 0714302909

சு. விஜயகுமார்- 0718971406