புலிகள் அமெரிக்காவுக்கு கடன்பட்டுள்ளனர் – சர்ச்சையை ஏற்படுத்தும் புதிய புத்தகம்

புலிகள் அமெரிக்காவுக்கு கடன்பட்டுள்ளனர் என்ற பெயரில் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட புத்தம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. விடுதலைப்புலிகள் அமைப்பு 2009 ஆம் ஆண்டு முற்றாக அழிக்கப்பட்டதால், அமெரிக்காவின் எதிர்பார்ப்பு முற்றாக சிதைந்து போனதாக அந்த புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது. அமெரிக்காவின் வெளிநாட்டு கொள்கைகளை கடுமையாக விமர்சித்து, அமெரிக்க ராஜாங்க திணைக்களத்தின் ஓய்வுபெற்ற அரசியல் ஆலோசகரான தயா கமகே என்ற முன்னாள் சிங்கள அதிகாரி இந்த புத்தகத்தை எழுதியுள்ளார்.

26 வருடங்களாக விடுதலைப் புலிகள் அமைப்பை தோற்கடிக்க இலங்கை இராணுவம் மேற்கொண்ட முயற்சிகள், அமெரிக்காவின் வெளிநாடுகள் தொடர்பான கொள்கையற்ற செயற்பாடுகள் காரணமாக வீணாகி போனதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

இலங்கையின் பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தை சீர்குலைக்க அமெரிக்க எடுத்த முயற்சி காரணமாக இலங்கை பாரதூரமான பிரச்சினை எதிர்நோக்கிய விதம் குறித்து புத்தகத்தின் ஆசிரியர் விபரமாக விளக்கியுள்ளதாக கூறப்படுகிறது.

புலிகள் போரில் தோற்காது போயிருந்தால், புலம்பெயர் தமிழர்களை சர்வதேச ராஜதந்திர சக்தியாக மாற்ற அமெரிக்கா தனது வெளிநாட்டு கொள்கையை அவர்களுக்கு தேவையான வகையில் மாற்றியதாக புத்தக ஆசிரியர் குற்றம் சுமத்தியுள்ளார்.

இந்த புத்தகம் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தும் எனக்கூறப்படுகிறது. மேலும், விடுதலைப் புலிகளின் தலைவரை காப்பாற்றி வேறு ஒரு இடத்தில் வைத்து கொண்டு அவர்களை இலங்கைக்கு அழுத்தம் கொடுக்கும் அணியாக பயன்படுத்த அமெரிக்கா இறுதி வரை முயற்சித்தது எனவும், புலம்பெயர் தமிழர்களுக்கு உயிரூட்டியதாக விமர்சித்துள்ள நூல் ஆசிரியர் , அமெரிக்கா எப்போதும் புலிகளின் நிகழ்ச்சி நிரலுக்கு அமையவே செயற்பட்டதாகவும் கூறியுள்ளார்.

இலங்கைக்கு அழுத்தம் கொடுக்க புலிகளின் பெயரில் சர்வதேச இராஜதந்திர அமைப்பு என்ற பெயரில் அமைப்பொன்றை உருவாக்க அமெரிக்க முயற்சித்தது.

நந்திக்கடல் களப்பில் சிக்கியிருந்த பிரபாகரன் உட்பட புலிகளின் தலைவர்களை காப்பற்றி அவர்களை இலங்கையில் இருந்து அழைத்துச் செல்லும் திட்டமும் அமெரிக்காவிடம் இருந்தது. இதற்கான அவர்கள் ஐக்கிய நாடுகள் அமைப்பையும் பயன்படுத்தினர்.

இந்த புத்தகத்தை எழுத அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தில் தனக்கு நெருக்கமான சிலரும் அக்கறை காட்டியதாக கூறியுள்ள நூல் ஆசிரியர் அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தில் நடப்பவற்றையும் விமர்சித்துள்ளார்.

போருக்கு பின்னர் இலங்கையின் பயணத்தில் முன்னோடிகளாக புலம்பெயர் தமிழர்களுக்காக அவர்கள் விரும்பியபடி ஈழத்தை உருவாக்கி கொடுக்க அமெரிக்கா முயற்சித்தது.

இலங்கை இராணுவம் காரணமாக அந்த முயற்சி தோல்வியடைந்ததால், புலம்பெயர் புலிகளை சர்வதேச இராஜதந்திர சக்தியாக மாற்ற அமெரிக்கா தனது வெளிநாட்டு கொள்கையை அவர்களுக்கு ஏற்ற வகையில் மாற்றியது.

மேற்குல நாட்டு அரசாங்கங்களில் உதவியுடன் புலம்பெயர் தமிழர்களை ஒன்றிணைத்து நாட்டை இரண்டாக பிளவுபடுத்தும் சக்தியாக உருவாக்கும் ஆரம்ப முயற்சித்து தோற்று போனது.

புலிகள் தோல்வியடைந்தன் காரணமாக 26 வருடங்களாக நாட்டை காப்பற்ற செயற்பாடுகளை முன்னெடுத்த இராணுவ தலைவர்களையும் நாட்டு மக்களும் போர்க் குற்றங்களில் ஈடுபட்டனர் என முத்திரை குத்த அமெரிக்கா முயற்சித்ததாகவும் நூல் ஆசிரியர் கூறியுள்ளார்.

இதற்காக அமெரிக்கா சர்வதேச மனிதாபிமான சட்டங்களின் பெயரில் செயற்பட்டு, புலம்பெயர் தமிழர்களுக்கு ஊக்கத்தை கொடுத்து செயற்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்கா, ஈராக், ஆப்கானிஸ்தான், லிபியா ஆகிய நாடுகளை ஆக்கிரமிக்க மேற்கொண்ட நடவடிக்கைகளை போல், இலங்கையில் தலையீடுகளை மேற்கொள்ள புலம்பெயர் தமிழர்களை துரும்புச் சீட்டாக பயன்படுத்திக்கொண்டதாகவும் தயா கமகே தனது நூலில் தெரிவித்துள்ளார்.